DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
ONLINE TEST & ANSWER KEY FOR THIS TEST

1.
பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் | பட்டியல் II
சொல் பொருள்
- சோமன் – அ. பொன்
II.காணம் -ஆ. சினம்
III.முனிவு -இ. பெருமை
IV.விழுப்பம் -ஈ. சந்திரன்
ஈ அ ஆ இ
இ அ ஆ ஈ
ஈ ஆ அ இ
அ ஆ இ ஈ
2.
பட்டியல் 1 ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
I.குறிஞ்சிப்பாட்டு அ. கடியலூர் உருத்திரங் கண்ணனார்
II.முல்லைப்பாட்டு ஆ. கபிலர்
III.பட்டினப்பாலை இ. நப்பூதனார்
IV.நெடுநல்வாடை ஈ. நக்கீரனார்.
ஆ இ அ ஈ
அ ஈ இ ஆ
அ இ ஆ ஈ
ஈ அ ஆ இ
3.
பட்டியல் 1ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் 1 பட்டியல் II
சொல் பொருள்
I.கலம் அ. காற்று
II.களம் ஆ. வலிமை
III.வலி இ. கப்பல்
- வளி ஈ. இடம்.
இ அ ஆ ஈ
ஈ ஆ இ அ
இ ஈ ஆ அ
அ ஈ ஆ ஈ.
4.
பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 பட்டியல் II
I.வாடுவான் அ. நில்
II.போக்கி ஆ. இரு
III.இருந்து இ போக்கு
IV.நிற்றல் ஈ வாடு.
ஈ இ ஆ அ
ஆ இ அ ஈ
இ அ ஈ ஆ
அ இ ஈ ஆ
5.
பட்டியல் 1 ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் | பட்டியல் II
நூல் நூலாசிரியர்
I.பழமொழி அ. வல்லூர் தேவராசபிள்ளை
II.நன்னெறி ஆ. குமரகுருபரர்
III.மீனாட்சியம்மை குறம் இ. முன்றுரையரையநார்
IV.குசேலோபாக்கியானம் ஈ. சிவப்பிரகாசர்.
ஆ ஈ அ இ
ஈ அ இ ஆ
இ அ ஆ ஈ
இ ஈ ஆ அ
6.
‘இராம அவதாரம்’ என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
கம்பராமாயணம்
வால்மீகி இராமாயணம்
துளசி ராமாயணம்
பாகவத இராமாயணம்.
7.
‘நாலடி நானூறு’ என குறிக்கப்பெறும் நூல்
அகநானூறு
புறநானூறு
நாலடியார்
நற்றிணை
8.
திராவிட வேதம்
திருவாசகம்
நாலாயிரத் திவ்யபிரபந்தம்
திருவெம்பாவை
நாச்சியார் திருமொழி.
9.
தற்காலத் தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி எனப் புகழப்படுபவர்
பாரதியார்
பாரதிதாசன்
வைரமுத்து
முடியரசன்
10.
பாவேந்தர் என அழைக்கப்படுபவர்
பாரதியார்
வாணிதாசன்
சுப்புரத்தினதாசன்
பாரதிதாசன்
11.
பிரித்து எழுதுக : கருநிறத்தரக்கியர்
கரு + நிறத்து + அரக்கியர்
கருமைநிற + அரக்கியர்
கருநிறத்து + அரக்கியர்
கருமை + நிறத்து + அரக்கியர்
12.
பிரித்து எழுதுக : வீடினதன்றறன்
வீடின் + தன்று + அறன்
வீடின + தன்றறன்
வீடினது+ அன்று + அறன்
வீடினதன்று + அறன்
13.
பிரித்து எழுதுக :மைத்தடங்கண்
மைத்தடம்+கண்
மைத்தட + கண்
மை+தட+கண்
மை + தடங் + கண்
14.
பிரித்து எழுதுக : நடுவிகந்தாம்
நடுவு + இகந்து + ஆம்
நடு + இகந்து + ஆம்
நடுவிகந்த + ஆம்
நடுவு + இகந்தாம்.
15.
பிரித்து எழுதுக : கடிந்தொரார்
கடிந்து + ஒரார்
கடித்து+ஓரார்
கடி + ஓரார்
கடிந்து+ஆரார்
16.
எதிர்சொல் தருக : ‘வாழிய
அழிய
ஒழீஇய
ஒழிக
மறைய
17.
எதிர்சொல் தருக : ‘நொய்மை’
திண்மை
உண்மை
வறுமை
வளமை
18.
எதிர்சொல் தருக : ‘நன்மை
நல்லவை
நன்றன்று
தீமை
தீதன்று
19.
எதிர்சொல் தருக : ‘மலர்தல்’
விரிதல்
நடத்தல்
நோதல்
கூம்புதல்
20.
எதிர்சொல் தருக : ‘நுண்மை ‘
பருமை
வெண்மை
தண்மை
சிறுமை
21.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
அவன்
எவன்
இவன்
உவன்
22.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
இனிப்பு
கசப்பு
இளிவரல்
புளிப்பு
23.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
காவிரி
பாலாறு
கங்கை
வைகை
24.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
மாணிக்கவாசகர்
பேயாழ்வார்
ஆண்டாள்
பூதத்தாழ்வார்
25.
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2012 | TEST 01
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
சதுரம்
செவ்வகம்
வட்டம்
நீளம்
26.
மரபுப் பிழைகளை நீக்குக: எருது
எக்காளமிடும்
எருது கத்தும்
எருது பிளிறும்
எருது அலறும்.
27.
பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க :
தோழிக்கு சம்பிரதாயப்படி மேரேஜ் நடந்தது
தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
தோழிக்கு சம்பிரதாயப்படி திருமணம் நடந்தது
தோழிக்கு மரபுப்படி மேரேஜ் நடந்தது.
28.
ஒருமை பன்மை பிழைகளை நீக்குக :
கட்டியங்காரன் களரியில் வந்து தோன்றினர்
கட்டியங்காரர்கள் களரியில் வந்து தோன்றியது
கட்டியங்காரனும் பாடலாசிரியனும் களரியில் வந்து தோன்றினான்
கட்டியங்காரன் களரியில் வந்து தோன்றினான்.
29.
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க :
மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதார சாதனைகளுக்கு இட்டுசெல்லும்
மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டுசெல்லும்
மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மைப் பொருளாதாரச் சாதனைகளுக்குஇட்டுச் செல்லும்
மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதார சாதனைகளுக்கு இட்டுச்செல்லும்.
30.
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க :
எல்லா சத்துக்களும் கிடைக்கும் படியாக நம் உணவுப் பழக்கம் அமைய வேண்டும்
எல்லாச் சத்துக்களும் கிடைக்கும் படியாக நம் உணவுப் பழக்கம் அமைய வேண்டும்
எல்லா சத்துக்களும் கிடைக்கும் படியாக நம் உணவு பழக்கம் அமைய வேண்டும்
எல்லாச் சத்துக்களும் கிடைக்கும் படியாக நம் உணவு பழக்கம் அமைய வேண்டும்
31.
Ice-cream ; என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
பனிமலை
பணிமனை
இமயமலை
பனிக்கூழ்
32.
Example : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
நடித்துக்காட்டு
பாடிக்காட்டு
ஓடிக்காட்டு
எடுத்துக்காட்டு
33.
Grand-father : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத்தேர்ந்தெடுக்க.
அம்மா
பாட்டி
தாத்தா
அப்பா
34.
Admission : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
நீக்கல்
சேர்க்கை
அனுமதி
பதிவேடு
35.
Multimedia : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
பன்முகத் தொடர்பு
தொலைத்தொடர்பு
நேர்முகத் தொடர்பு
மறைமுகத் தொடர்பு.
36.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
இர – இற
வணங்கு – அல்
இரவு – பிடிப்பு
இரப்பு – இறப்பு
வாழ்வு – உடுக்கை
37.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
ஆனை – ஆணை
உறுதி – ஆண்மகன்
கட்டளை – யானை
பத்திரம் – குதிரை
சட்டம் – பானை
38.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
எரி – எறி
மீ – மாசு
ஈ – காசு
தீ – வீசு
வீ – ஏசு
39.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
உரி – உறி
வகுத்தல் – உறிதல்
பிரித்தல் – உறிஞ்சுதல்
உரித்தல் – உவத்தல்
சுழற்று – தயிர் உறி
40.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
கரை – கறை
காகம் – தாளம்
கூவு – மேளம்
ஓரம் – அழுக்கு
குயில் – களங்கம்.
41.
மிக்க – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
மிக
மிகல்
மிகு
மிகுதி
42.
‘நட்டு’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
நாடு
நட
நடு
நாட்டு
43.
‘நிறுத்தாதீர்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
நிறுத்து
நின்று
நின்ற
நிறு
44.
‘கல்லாமை’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
கல்
கல்லு
கற்று
கற்ற
45.
‘படைத்தோன்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
படையன்
படையும்
படையா
படை
46.
‘ஆ’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
கன்று
பசு
ஆடு
காடு
47.
‘நா’ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
பல்
அன்னம்
கன்னம்
நாக்கு
48.
‘வௌ’ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
பல்லு
கைப்பற்றுதல்
மீட்டல்
பள்ளு
49.
‘தை’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
மாதம்
பூ
வருடம்
ஆட்டம்
50.
‘நீ’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
தன்மை
படர்க்கை
முன்னிலை
வியங்கோள்
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2012 | TEST 01
51.
‘கட’ – இவ்வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தருக.
கடந்து
கடந்த
கடந்தவன்
கடவுள்
52.
‘போ’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
போக்கிய
போனவன்
போனான்
போக்கு
53.
‘ஏற்று’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
ஏற்ற
ஏற்றிய
ஏற்றவன்
ஏற்றார்
54.
‘துற’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க. துறந்து
துறந்தார்
துறந்தவன்
துறந்த
55.
‘நட்’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
நடந்து
நடந்த
நடந்தவன்
நடந்தான்
56.
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
யவனர், வழங்கு, ஞானம், நன்மை
ஞானம், நன்மை , யவனர், வழங்கு
வழங்கு , யவனர், நன்மை , ஞானம்
நன்மை , யவனர், ஞானம், வழங்கு.
57.
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
குயில், குறத்தி, குறவன், கூட்டம்
குறத்தி, குறவன், குயில், கூட்டம்
கூட்டம், குயில், குறவன், குறத்தி
குறவன், கூட்டம், குறத்தி, குயில்
58.
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
சேவல், சாவி, சீரகம், செம்பு
சாவி, சேவல், செம்பு, சீரகம்
சீரகம், செம்பு, சேவல், சாவி
சாவி, சீரகம், செம்பு, சேவல்.
59.
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
வட்டம், யானை, மனம், பட்டம்
யானை, மனம், வட்டம், பட்டம்
மனம், பட்டம், வட்டம், யானை
பட்டம், மனம், யானை, வட்டம்.
60.
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
கக்குதல், கக்குவான், கஞ்சி. கற்கண்டு
கற்கண்டு, கஞ்சி, கக்குவான், கக்குதல்
கஞ்சி, கற்கண்டு, கக்குதல், கக்குவான்
கக்குதல், கற்கண்டு, கக்குவான், கஞ்சி.
61.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
விரும்பிப் படித்தால் வெற்றிப் பெறுவான்
பெறுவான் வெற்றி படித்தால் விரும்பி
படித்தால் பெறுவான் விரும்பி வெற்றி
வெற்றிப் படித்தால் விரும்பிப் பெறுவான்.
62.
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
ஊரே யாதும் கேளீர் யாவரும்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
கேளீர் யாதும் ஊரே யாவரும்
யாவரும் கேளீர் யாதும் ஊரே.
63.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
எய்துவர் மேன்மை ஒழுக்கத்தின் என்றார் வள்ளுவர்
வள்ளுவர் மேன்மை ஒழுக்கத்தின் எய்துவர் என்றார்
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் வள்ளுவர் என்றார்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை என்றார் வள்ளுவர்.
64.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
உயர்வு தாழ்வுகள் பாராட்டக் கூடாது பிறப்பினால்
பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் பாராட்டக் கூடாது
பாராட்டக்கூடாது உயர்வு தாழ்வுகள் பிறப்பினால்
தாழ்வுகள் உயர்வு பிறப்பினால் பாராட்டக்கூடாது.
65.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. –
தாயைக் கண்ட சேயைப் போல
கண்ட சேயைப் போல தாயை
சேயைப் போல தாயைக் கண்ட
தாயைச் சேயைப் போல கண்ட.
66.
‘அசைதல்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
பொருட்பெயர்
காலப்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
67.
அழுகை‘ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
68.
‘மரம்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
காலப்பெயர்
பொருட்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
69.
‘கண்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
சினைப்பெயர்
தொழிற்பெயர்
காலப்பெயர்
பண்புப்பெயர்
70.
‘செம்மை’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
பண்புப்பெயர்
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
71.
‘நீள் புகழ்’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
வினைத்தொகை
வினைமுற்று
வேற்றுமைத் தொடர்
வினைச்சொல்
72.
‘வண்டர்’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
இலக்கணப்போலி
முதற்போலி
கடைப்போலி
தொழிற்பெயர்
73.
பெருமணல்‘ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கள்
வினைமுற்று
தொழிற்பெயர்
பண்புத்தொகை
வினைத்தொகை
74.
‘பொழிமழை’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
பண்புத்தொகை
வினைத்தொகை
உம்மைத்தொகை
உவமைத்தொகை
75.
‘யார் யார்’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
இரட்டைக்கிளவி
எண்ணும்மை
பெயர்ச்சொல்
அடுக்குத்தொடர்
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION TEST SERIES | 2012 | TEST 01
76.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
‘கலம்பகத்திற்குப் பதினெட்டு உறுப்புகள் உண்டு’
கலம்பகம் – பெயர்க்காரணம் கூறுக.
பதினெட்டு உறுப்புகளைக் கொண்டது எது?
கலம்பகத்திற்கு எத்தனை உறுப்புகள் உண்டு?
கலம்பகத்தின் உறுப்புகள் பதினெட்டா?
77.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
‘சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது’.
மணிமேகலையின் ஆசிரியர் யார்?
மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றா?
சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் எது?
சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
78.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
‘கன்னியாகுமரி இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது’
தென்முனையில் அமைந்துள்ளது எது?
கன்னியாகுமரி எங்கு அமைந்துள்ளது?
கன்னியாகுமரி அமைந்துள்ள திசை எது?
இந்தியாவின் எம்முனையில் கன்னியாகுமரி உள்ளது?
79.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
“மணிமேகலைக்கு ‘மணிமேகலை துறவு’ என்னும் வேறு பெயரும் உண்டு”
மணிகேலை துறவு – எது?
மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றா?
மணிமேகலையின் ஆசிரியர் யார்?
மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறுபெயர் யாது?
80.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
‘நீதி நூல்களுள் தலைசிறந்தன திருக்குறளும், நாலடியாரும் ஆகும்’
‘நீது நூல்கள் யாவை?
திருக்குறளும் நாலடியாரும் எவ்வகை இலக்கியம்?
நீதி நூல்களுள் தலைசிறந்தன எவை?
நீதி நூல்களுள் இரண்டினைக் கூறுக.
81.
‘ஆ ! என்னே ! காலைக் கதிரவன் உதிக்கும் காட்சி’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
எதிர்மறை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
82.
‘தமிழின் இனிமையை அனைவரும் அறிவரோ’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
தன்வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம்.
83.
நான் இலக்கணம் படித்தேன் – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
செய்தி வாக்கியம்
உடன்பாட்டு வாக்கியம்
செய்வினை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்.
84.
‘கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையைப் போற்றினர்’ – எவ்வகைவாக்கியம் எனச் சுட்டுக.
செய்தி வாக்கியம்
தனி வாக்கியம்
கலவை வாக்கியம்
தொடர் வாக்கியம்.
85.
‘பாரதி பொம்மை செய்தாள்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
பிறவினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்.
86.
செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
அறிவியல் அறிஞர்கள் செயற்கைகோளை விண்ணில் ஏவினர்
அறிஞர்கள் அறிவியல் செயற்கைகோளை ஏவினர் விண்ணில்
செயற்கைகோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது
விண்ணில் அறிவியல் அறிஞர்கள் ஏவினர் செயற்கைகோளை.
87.
செயப்பாட்டுவினை சொற்றொடரைக் கண்டறிக.
செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியை இயற்றினார்
இயற்றினர் கலிங்கத்துப்பரணியை செயங்கொண்டார்
கலிங்கத்துப்பரணி செயங்கொண்டாரால் இயற்றப்பட்டது
கலிங்கத்துப்பரணி இயற்றினார் செயங்கொண்டார்
88.
செயப்பாட்டுவினை சொற்றொடரைக் கண்டறிக.
ஆசிரியர் பாடத்தை நன்றாக கற்பிக்கிறார்
பாடம் ஆசிரியரால் நன்றாக கற்பிக்கப்பட்டது
நன்றாக பாடம் கற்பிக்கிறார் ஆசிரியர்
ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார் நன்றாக
89.
பிறவினைத் தொடரைக் கண்டறிக.
தாய் குழந்தைக்கு சோறு ஊட்டினாள்
சோறு ஊட்டினாள் குழந்தைக்கு தாய்
தாய் குழந்தைக்கு சோறு ஊட்டுவித்தாள்
குழந்தை தாயிடம் சோறு உண்டது.
90.
தன்வினை வாக்கியத்தை கண்டறிக.
கோதை திருக்குறளைக் கற்பித்தாள்
கோதை திருக்குறளைக் கற்றாள்
கற்றாள் கோதை திருக்குறளை
கோதை கற்றாள் திருக்குறளை.
91.
அன்னநடை கற்கப்போய்த் தன்னடையும்
‘இழந்தாற் போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க :
தவிப்பு
இழப்பு
குவிப்பு
வலிப்பு
92.
‘சிதறிய முத்துப்போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க :
நிலையானது
கடினமானது
உறுதியானது
நிலையில்லாதது
93.
‘விழலுக்கு இறைத்த நீர் போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க :
பயன்பெறுதல்
மகிழ்ந்திருத்தல்
பயனற்றுப்போதல்
வெறுத்திருத்தல்
94.
‘பசுமரத்தாணி போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க :
பதியாமை
தெளிவு
அறியாமை
விளங்காமை
95.
‘பகலவனைக் கண்ட பனி போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க :
உருகுதல்
பனிக்கட்டி
துன்பம் நீக்குதல்
வறுமை
96.
பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை – அடி எதுகையினைக் கண்டறிக :
பழமலைந் – தெய்திய
தெய்திய – வாக்கத்திற்
பழிமலைந்-கழிநல்
கழிநல்-தெய்திய
97.
மனையகம் புகுந்து மணிமே கலைதான் – சீர்மோனையைத் தருக.
மனையகம் -புகுந்து
மனையகம் -மணிமே கலைதான்
புகுந்து -கலைதான்
மனையகம்-கலைதான்.
98.
‘பல்சான் றீரே பல்சான் றீரே’ – சீர்மோனையைக் கண்டறிக.
பல்சான்-பல்சான்
பல்சான் – றீரே
நீரே-பல்சான்
நீரே- நீரே.
99.
‘புதர்களைநாம் அழிப்பதிலே மகிழ வேண்டும்
புத்துலகை உருவாக்க முயல வேண்டும்‘ – அடி இயைபினைக் கண்டறிக.
புதர்களைநாம் – அழிப்பதிலே
புதர்களை நாம் – புத்துலகை
புதர்களைநாம் – வேண்டும்
வேண்டும் – வேண்டும்.
100.
கன்னலடா என் சிற்றூர் என்போ னுள்ளம்
கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம் – அடி இயைபினைக் கண்டறிக.
கன்னலடா – கடுகுக்கு
உள்ளம் – உள்ளம்
என்போ – கன்னலட
கடுகுக்கு – துவரை.