DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
ONLINE TEST & ANSWER KEY FOR THIS TEST
TAMIL PYQ [28-08-2016]
T8-TAMIL PYQ [28-08-2016]- 100Questions
1.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
தலை, தழை, தளை
a)சிரசு, புல், கட்டுதல்
b)சிரசு, இலை, பறவை
c)தலைவன், கிளை, மீன்
d)அரசன், செடி, மரம்
2.
அவன் ஊருக்குப் போகாமல் இரான் – எவ்வகைத் தொடர்?
a)எதிர்மறைத் தொடர்
b)உடன்பாட்டுத் தொடர்
c)பிறவினைத் தொடர்
d)பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
3.
பள்ளிக் கூட மணி அடித்தவுடன் மாணவர்கள் ‘மடை திறந்த வெள்ளம் போலச் சென்றனர்’ இத்தொடரில் உவமை உணர்த்தும் பொருள்.
a)வரிசை வரிசையாகச் சென்றனர்
b)மிகவும் மெதுவாகச் சென்றனர்
c)மிகவும் அமைதியாகச் சென்றனர்
d)மிகவும் விரைவாகச் சென்றனர்
4.
இலக்கணக் குறிப்பு தருக:
‘கொன்ற’
a)வினையெச்சம்
b)பெயரெச்சம்
c)எதிர்கால வினையெச்சம்
d)வினைமுற்று
5.
ஓரெழுத்து ஒரு மொழி எத்தனை உள்ளன?
a)நாற்பத்திரண்டு
b)ஐம்பத்திரண்டு
c)முப்பத்திரண்டு
d)எழுபத்திரண்டு
6.
தமிழுக்குக் ‘கதி’ எனும் நூல்கள் எவை?
a)களவழி நாற்பது, திருக்கை வழக்கம்
b)கலிங்கத்துப்பரணி, திராவிடத்துப்பரணி
c)கம்பராமாயணம், திருக்குறள்
d)கலித்தொகை, திருக்குறள்
7.
நவில் தொறும் – பொருள் தேர்க.
a)கற்கக் கற்க
b)பழகப் பழக
c)பாடப் பாட
d)சொல்லச் சொல்ல
8.
‘தமிழ் மாதின் இனிய உயிர்நிலை’- என்று உலகோரால் பாராட்டப்பெறும் நூல் எது?
a)அகநானூறு
b)புறநானூறு
c)திருக்குறள்
d)பகவத்கீதை
9.
“கற்றதுகைம் மண்ணளவு”- என்று கூறியவர்
a)கபிலர்
b)கம்பர்
c)பரணர்
d)ஒளவையார்
10.
ஆடு முதலான பன்னிரண்டு இராசிகளையும் விண்மீன்களையும் வரைந்த செய்தி கூறும் நூல்
a)குறிஞ்சிப்பாட்டு
b)சிறுபாணாற்றுப்படை
c)நெடுநல்வாடை
d)மலை படுகடாம்
11.
திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டனையும் வீரமாமுனிவர் இந்த மொழியில் மொழி பெயர்த்தார்
a)இலத்தீன்
b)பிரெஞ்ச்
c)ஜெர்மன்
d)ஸ்பானிஷ்
“முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
a)நற்றினை
b)ஐங்குறுநூறு
c)கலித்தொகை
d)குறுந்தொகை
13.
இளங்கோவடிகளின் பெற்றோர் எக்குலத்தைச் சார்ந்தவர்கள்?
a)தாய் சேரர் குலம் – தந்தை பாண்டியர் குலம்
b)தாய் சோழர் குலம் – தந்தை சேரர் குலம்
c)தாய் பாண்டியர் குலம் – தந்தை சோழர் குலம்
d)தாய் பல்லவர் குலம் – தந்தை சாளுக்கியர் குலம்
14.
திருமந்திரம் நூலின் பாடல் எண்ணிக்கை
a)இரண்டாயிரம்
b)ஆறாயிரம்
c)ஏழாயிரம்
d)மூவாயிரம்
15.
ஐங்குறுநூற்று செய்யுளின் அடிவரையரை
a)4-8 அடிகள்
b)3-6 அடிகள்
c)9- 12 அடிகள்
d)13- 31 அடிகள்
16.
தவறான ஒன்றை தேர்க
a)சிறுமல்லி
b)சிறுவழுதுணை
c)பெருமல்லி
d)ஏலம்
17.
பொருத்துக :
a.சிலப்பதிகாரம் -. 1. திருதக்கதேவர்
b.மணிமேகலை – 2. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
c.சீவகசிந்தாமணி – 3.இளங்கோவடிகள்
d.வளையாபதி – 4. சீத்தலை சாத்தனார்
a)4 3 2 1
b)3 4 1 2
c)2 1 3 4
d)1 2 4 3
18.
“திவ்யகவி’ – பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் இயற்பெயர்
a)மாதவன்
b)மணவாள மாமுனிகள்
c)அழகிய மணவாளதாசர்
d)மதுசூதனன்
19.
“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்” என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் யார்?
a)கணியன் பூங்குன்றனார்
b)ஔவையார்
c)பிசிராந்தையார்
d)கண்ணகனார்
20.
எட்டுத்தொகை நூல்களுள் அதிகமான அடிவரையறை கொண்ட நூல் எது?
a)நற்றினை
b)அகநானூறு
c)புறநானூறு
d)குறுந்தொகை
21.
கோலியாத்தை அழிக்க தாவீதன் பயன்படுத்தாதது
a)கவண்
b)வாள்
c)எறி ஈட்டி
d)கல்
22.
ஐம்புலன் அடக்கத்திற்கு உவமையாகக் கூறப்படுவது எது?
a)யானை.
b)ஆமை
c)நரி
d)பரி
23.
‘திருக்கை வழக்கம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
a)நக்கீரர்
b)ஒட்டக்கூத்தர்
c)இளங்கோவடிகள்
d)கம்பர்
24.
‘நான்மணிக்கடிகை’ என்னும் சொல்லில் கடிகை என்பதன் பொருள்
a)தோள் வளை
b)கை வளை
c)கழுத்தணி
d)கால் வளை
திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் பாடியவர்
a)மாணிக்கவாசகர்
b)சுந்தரர்
c)சம்பந்தர்
d)அப்பர்
26.
ஐம்பெருங்காப்பியம் – இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறிக.
a)சிலப்பதிகாரம்
b)கம்பராமாயணம்
c)மணிமேகலை
d)சீவகசிந்தாமணி
27.
முக்கூடற்பள்ளு எவ்விலக்கிய வகை சார்ந்தது?
a)வனப்பு
b)சமயம்
c)நீதி
d)புலன்
28.
தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர்
a)அப்பூதியடிகளார்
b)மாறநாயனார்
c)திரு நீலகண்டர்
d)சுந்தரர்
29.
எட்டுத்தொகையில் இடம்பெறாத நூல் எது?
a)நற்றிணை
b)மதுரைக்காஞ்சி
c)ஐங்குறுநூறு
d)பதிற்றுப்பத்து
30.
‘மறைவழி’ – என்னும் ஆங்கிலக் கதையைத் தழுவிய நூல்
a)மனோன்மணியம்
b)இரட்சணிய மனோகரம்
c)மானசல்லோசம்
d)தேம்பாவணி
31.
‘கிறித்துவ சமயத்தின் கலைக் களஞ்சியம்’ எனப்படும் நூல் எது?
a)விவிலியம்
b)இரட்சணிய யாத்திரிகம்
c)தேம்பாவணி
d)திருக்காவலூர் கலம்பகம்
32.
பொருத்தமில்லாதவற்றைத் தேர்ந்தெடு
a)பக்கம்
b)வாழ்க்கை
c)மொத்தம்
d)புத்தகம்
33.
“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” எனக் கூறியவர்
a)தொ.பொ. மீனாட்சி சுந்தரனார்
b)டாக்டர். அப்பாதுரையார்
c)பேரறிஞர் அண்ணா
d)டாக்டர் மு. வரதராசனார்
34.
ஒளவையாரின் மீதூண் விரும்பேல்’ என்ற தொடருக்கு இணையான பழமொழியைத் தேர்ந்தெடு
a)ஆற்றில் போட்டாலும் அளந்துபோடு
b)நிறை குடம் தளும்பாது
c)அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
d)நொறுங்கத் தின்றால் நூறு வயது
35.
“சாதனைப் பூக்களை ஏந்து முன்னே – இங்கு நல்ல செடி இளைப் பாறிடுமோ?” இது யாருடைய கூற்று?
a)சாலை இளந்திரையன்
b)பாரதிதாசன்
c)தாரா பாரதி
d)கவிஞர் சுரதா
36.
கலித்தொகையில் கூறியுள்ளதைச் சரியாக கண்டறிந்து எழுதுக
ஆற்றுதல் என்பது…………………
a)ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
b)புணர்ந்தாரைப் பிரியாமை
c)பாடு அறிந்து ஒழுகுதல்
d)பேதையார் சொல் நோன்றல்
37.
நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை
a)ஓவியக்கலை
b)இசைக்கலை
c)பேச்சுக்கலை
d)சிற்பக்கலை
38.
‘ஜி.யு.போப் திருவாசகத்தை மொழிபெயர்த்த மொழி
a)ஆங்கிலம்
b)இலத்தீன்
c)ஈப்ரூ
d)கிரேக்கம்
39.
சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்
a)ரா.பி. சேதுப்பிள்ளை
b)பம்மல் சம்பந்த முதலியார்
c)திரு. வி. கல்யாணசுந்தரனார்
d)பரிதிமாற் கலைஞர்
40.
அசுவினி முதலான இருபத்தேழு மீன்களுக்கு பண்டைத்தமிழர் ——- என்று பெயரிட்டனர்.
a)நாள்மீன்
b)கோள்மீன்
c)வெள்ளி
d)புதன்
41.
“குறும்பொறை நாட்டையே கூத்தருக்குக் கொடுத்தவன்” இச்சிறப்பிற்குரியவன்
a)பாரி
b)ஆய்
c)நள்ளி
d)ஓரி
42.
பெருநாரை, பெருங்குருகு முதலியவை……………….ஆகும்
a)அறநூல்கள்
b)சிறுகாப்பியங்கள்
c)நாடக நூல்கள்
d)இசை நூல்கள்
கண்ணதாசன் எழுதிய புதின நூல்களுள் ‘சாகித்ய அகாதெமி’ பரிசு பெற்ற நூல்
a)ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி
b)வேலங்குடித் திருவிழா
c)சிவப்புக்கல் மூக்குத்தி
d)சேரமான் காதலி
44.
‘ஆயம்’ உரிய பொருளைத் தேர்ந்தெடுத்து எழுது.
a)தோழியர் கூட்டம்
b)சிறுமியர் கூட்டம்
c)மங்கையர் கூட்டம்
d)மக்கள் கூட்டம்
45.
படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்தவர்
a)ஈஸ்ட்மன்
b)எடிசன்
c)வால்ட் டிஸ்னி
d)எட்வர்டு மைபிரிட்சு
46.
இரகசிய வழி’ – என்ற நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் எது?
a)குற்றலாக் குறவஞ்சி
b)சீறாப்புராணம்
c)மனோன்மணீயம்
d)சீவக சிந்தாமணி
47.
‘இயேசு காவியம்’ – என்னும் நூலின் ஆசிரியர் பெயர் யாது?
a)வாணிதாசன்
b)கண்ணதாசன்
c)ஈரோடு தமிழன்பன்
d)மு. மேத்தா
48.
நெய்தல் நிலத்துக்குப் பொருத்தமான ஊர்ப் பெயர்களைத் தேர்ந்தெடுக்க.
a)கோவில்பட்டி, காளிப்பட்டி
b)சிப்பிப்பாறை, மொடக்குறிச்சி
c)ஆத்தூர், தெங்கூர்
d)கீழக்கரை, பட்டினப்பாக்கம்
49.
சீரான அகர வரிசையிலமைந்த சொல் வரிசையைச் சுட்டுக
a)நோன்பு, நிலம், நீட்டம், நெருநல், நலம்
b)நீட்டம், நலம், நெருநல், நிலம், நோன்பு
c)நலம், நிலம், நீட்டம், நெருநல், நோன்பு
d)நலம், நெருநல், நிலம், நீட்டம், நோன்பு
50.
வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை I – வரிசை II
a.பாலடையும், நறுநெய்யும், தேனும் – 1. வினையெச்சங்கள்
b.நல்முடி, நன்செய், புன்செய் – 2. தொழிற்பெயர்கள்
c.காத்தல், படைத்தல், அழித்தல் – 3. எண்ணும்மை
d.பாய்ந்து, செறிந்து, நிறைந்து – 4. பண்புத்தொகைகள்
a)4 1 3 2
b)3 1 2 4
c)1 4 3 2
d)3 4 2 1
51.
ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிக
டயாபெட்டிக் பேஷண்ட் ஸ்வீட் சாப்பிடுவதை ஸ்டாப் செய்ய வேண்டும்
a)சர்க்கரை நோயாளிகள் ஸ்வீட் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்
b)நீரிழிவு நோயாளிகள் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்
c)நீரிழிவு நோயாளிகள் ஸ்வீட் சாப்பிடுவதை தடுக்க வேண்டும்
d)சர்க்கரை வியாதிக்காரர்கள் இனிப்பு சாப்பிடக் கூடாது
52.
கீழ்க்காணும் கூற்றுக்களில் இடம்பெறும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிக.
I.’பூ’ எனும் சொல் மலரையும், பெண்ணையும் குறிக்கும்.
II.’பா’ எனும் சொல் செய்யுளையும், எழுத்தையும் குறிக்கும்.
III.’வா’ என்பது ‘வருதல்’ எனும் வினையைக் குறிக்கும்.
IV.’கோ’ என்பது கோவிந்தனின் பெயர்.
a)IV, III மற்றும் II சரியானவை
b)IV, II மற்றும் சரியானவை
c)IV, I மற்றும் III சரியானவை
d)I, II மற்றும் III சரியானவை
53.
பிழையான சொல்லை எடுத்தெழுதுக.
a)சுவற்றில்
b)அருகில்
c)செலவு
d)பதற்றம்
54.
தொண்ணூற்றாறு – பிரிக்கும் முறை
a)தொண்ணூறு + ஆறு
b)தொள்ளாயிரம் + ஆறு
c)தொண் + ஆறு
d)தொண் + ணூறு
55.
கீழே தரப்பட்டுள்ளவற்றுள் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
a)’உண்ணாது’ என்பது எதிர்மறை வினையெச்சம்
b)அகழ்வார்’ என்பது வினையால் அணையும் பெயர்
c)’நன்று’ என்பது குறிப்பு வினைமுற்று
d)’ச’ என்பது வேர்ச்சொல்
56.
கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லுக்குரிய தவறான விடை எதுவெனத் தேர்க.
a)Cartoon – கருத்துப் படம்
b)Negative – – எதிர்ச் சுருள்
c)Green Rooms – பச்சை அறைகள்
d)Instinct – இயற்கை அறிவு
57.
சந்திப் பிழையற்ற தொடரைக் குறிக்க
a)சமூகச் சீர்திருத்த கருத்துகளை விதைத்துப் பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்
b)சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை விதைத்து பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்
c)சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை விதைத்துப் பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்
d)சமூக சீர்திருத்தக் கருத்துகளை விதைத்து பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்
58.
உரவோர் – இலக்கணக் குறிப்பு தருக.
a)வினைமுற்று
b)பெயர்ச்சொல்
c)வினையாலணையும் பெயர்
d)தொழிற்பெயர்
59.
‘திருத்தொண்டர் புராணத்தை’ என அழைக்கிறோம்.
a)சிவ புராணம்
b)பெரிய புராணம்
c)கந்த புராணம்
d)தணிகை புராணம்
60.
அகமும், புறமும் கலந்த பாடல் தொகுதி………………..ஆகும்.
a)பதிற்றுப்பத்து
b)ஐங்குறுநூறு
c)பரிபாடல்
d)கலித்தொகை
61.
“தொண்டர் சீர் பரவுவார்” என அழைக்கப்படுபவர்
a)சேக்கிழார்
b)கம்பர்
c)சுந்தரர்
d)சம்பந்தர்
62.
திருமந்திரம்’ சைவத்திருமுறைகளுள்……………………………. திருமுறை ஆகும்.
a)பதினோராம்
b)பத்தாம்
c)பன்னிரண்டாம்
d)எட்டாம்
63.
பொருத்தமான விடை :’மேழி’ – என்பதன் பொருள்
a)கலப்பை
b)மோதிரம்
c)உழவர்
d)மேகம்
64.
ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை யார் ?
a)நம்மாழ்வார்
b)பெரியாழ்வார்
c)பூதத்தாழ்வார்
d)பேயாழ்வார்
65.
சீர் எதுகை அமைந்த தொடரைக் கண்டறிக.
a)வருக மற்றிவண் தருக ஈங்கென
b)கள்வனைக் கோறல் கடுங்கோலன்று
c)இந்துவின் நுதலாளோடு இளவலொ டினிதேறா
d)வேதனைகள் வந்தாலும் விலகிப் போகும்
66.
பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக
a)நேரிசை வெண்பா
b)ஆசிரிய விருத்தம்
c)கலித்தாழிசை
d)கலிவிருத்தம்
67.
‘அம்மானை’, என்பது………………. விளையாடும் விளையாட்டு.
a)பெண்கள்
b)ஆண்கள்:
c)குழந்தைகள்
d)இளைஞர்கள்
68.
ஒழுங்குப்படுத்திய சொற்றொடரைக் கூறுக.
“அரசவைக் கவிஞராகத் தமிழக அரசின் திகழ்ந்தார்”
a)தமிழக அரசின் அரசவை கவிஞ்சராகத் திகழ்ந்தார்
b)தமிழக அரசின் அரசவைக் கவிஞராக திகழ்ந்தார்
c)தமிழக அரசின் அரசவைக் கவிஞராகத் திகந்தார்
d)தமிழக அரசின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார்
69.
மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமாலையை யாருக்குப் பரிசாக அளித்தார்?
a)திருமலைநாயக்கர்
b)பரஞ்சோதி முனிவர்
c)குமரகுருபரர்
d)சீத்தலை சாத்தனார்
70.
‘சால்பு – என்பதன் பொருள் யாது?
a)பேராண்மை
b)மேலாண்மை
c)சான்றாண்மை
d)வேளாண்மை
71.
ஆடலரசி”
a)மணிமேகலை
b)மாதவி
c)மாதரி
d)சித்திராபதி
72.
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர்
a)மாணிக்கவாசகர்
b)நாத முனிகள்
c)பொய்கையார்
d).பூதத்தார்
73.
வேளாண்வேதம் என்று அழைக்கப்படும் நூல்
a)நாலடியார்
b)நாண்மணிக்கடிகை
c)சிறுபஞ்சமூலம்
d)பழமொழி
74.
பொருந்தாதவற்றைச் சுட்டுக
a)நாடி இனிய சொலின்
b)இனிய உளவாக இன்னாத கூறல்
c)காயும் ஒருநாள் கனியாகும்
d)பண்பின் தலைபிரியாச் சொல்
75.
‘யாருமில்லை தானேகள்வன்’ என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
a)புறநானூறு
b)குறுந்தொகை
c)அகநானூறு
d)கலித்தொகை
76.
‘வாகீசர்’ என்று அழைக்கப்பெறுபவர்
a)சுந்தரர்
b)குலசேகர ஆழ்வார்
c)மாணிக்கவாசகர்
d)திருநாவுக்கரசர்
77.
மணிமேகலைக்கு அறவுரை வழங்கிய ஆசிரியர்
a)அதிரா அடிகள்
b)இளங்கோ அடிகள்
c)அறவண அடிகள்
d)கவுந்தி அடிகள்
பிள்ளைத் தமிழின் இரண்டாம் பருவம்
a)தாலப்பருவம்
b)செங்கீரைப்பருவம்
c)சப்பாணிப்பருவம்
d)முத்தப்பருவம்
ஊரோடு தோற்றமும் உரித்தென மொழிப்
வழக்கொடு சிவணிய வகைமையான’
என்ற தொல்காப்பிய வரி எந்த பிற்கால பிரபந்தங்களுக்குத் தோற்றுவாயாக அமைந்தது?
a)பிள்ளைத்தமிழ்
b)உலா
c)தூது
d)அந்தாதி
80.
ஆண்பால் பிள்ளைத் தமிழில் இல்லாத பருவங்கள்
a)தால் சப்பாணி முத்தம்
b)சிற்றில் சிறுபறை சிறுதேர்
c)காப்பு வருகை அம்புலி
d)அம்மானை நீராடல் ஊசல்
81.
தன் வாழ்க்கை வரலாற்றை என் சரிதம்’ என்னும் பெயரில் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதியவர் யார்?
a)உ.வே.சாமிநாத ஐயர்
b)மறைமலை அடிகள்
c)காந்தியடிகள்
d)நேரு
82.
பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் ………………எனப்படும்.
a)நகரம்
b)பட்டினம்
c)பாக்கம்
d)பட்டி
3.
ஆட்டனத்தி ஆதிமந்தியின் ஆசிரியர்
a)வண்ணதாசன்
b)வாணிதாசன்
c)கண்ணதாசன்
d)சுப்புரத்தினதாசன்
84.
‘இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்’ என்ற நூலை இயற்றியவர்
a)பெரியார்
b)அண்ணா
c)பாரதிதாசன்
d)டாக்டர். அம்பேத்கர்
85.
‘உவமைக் கவிஞர்’ – எனப் போற்றப்படுபவர் யார்?
a)பாரதியார்
b)பாரதிதாசன்
c)கவிமணி
d)சுரதா
86.
‘ஒரு கிராமத்து நதி’ – என்ற நூலின் ஆசிரியர்
a)சிற்பி பாலசுப்ரமணியம்
b)கவிஞர் தாராபாரதி
c)கவிஞர் கண்ணதாசன்
d)ந.காமராசன்
87.
‘தமிழ் நாடகத் தந்தை’ என்று போற்றப்பட்டவர் ———ஆவார்.
a)பம்மல் சம்பந்தனார்
b)பரிதிமாற் கலைஞர்
c)சங்கரதாசு சுவாமிகள்
d)தி.க. சண்முகனார்
88.
“நீதித் திருக்குறளை நெஞ்சாரத்தம் வாழ்வில் ஓதித் தொழுது எழுக ஓர்ந்து” என்று கூறியவர்
a)கபிலர்
b)பரணர்
c)கவிமணி
d)மாங்குடி மருதனார்
89.
இந்திய அரசின் ஞானபீட பரிசு பெற்ற முதல் தமிழன்
a)அகிலன்
b)கு.ப.ராஜகோபாலன்
c)இராசாசி
d)மௌனி
90.
யார் என்று கண்டறிக.
எட்டயபுரம் கடிகை முத்துப்புலவரின் மாணவர்
a)சீத்தலைச் சாத்தனார்
b)உமறுப்புலவர்
c)பாரதியார்
d)திருத்தக்கதேவர்
91.
வீரமாமுனிவர் தமது எத்தனை வயதில் தமிழகம் வந்து தமிழ் படித்து காப்பியம் படைத்தார்
a)நாற்பது
b)முப்பது
c)இருபது
d)அறுபது
92.
‘கருணாமிர்த சாகரம்’ என்னும் இசையாராய்ச்சி நூலை எழுதியவர்
a)அண்ணாமலை செட்டியார்
b)ஆர்.கே. சண்முகம் செட்டியார்
c)தண்டபாணி தேசிகர்
d)ஆபிரகாம் பண்டிதர்
93.
‘திராவிட சாஸ்திரி’ என்று பட்டத்தைப் பெற்றவர் யார்?
a)பரிதிமாற் கலைஞர்
b)மறைமலையடிகள்
c)நீலாம்பிகை அம்மையார்
d)தாயுமானவர்
94.
இன்றைய கர்நாடக இசைக்கு தாய்
a)தமிழ்
b)தெலுங்கு
c)கன்னடம்
d)சமஸ்கிருதம்
95.
கோடிட்ட இடம் :
உலகில் மொழி உருவம் பெறுவதற்குமுன்………………………..பிறந்து விட்டது என்பர்.
a)நடனம்
b)இயல்
c)இசை
d)நாடகம்
96.
சேக்சுபியரின் ஆங்கில நாடகங்களை மொழிப் பெயர்த்தவர்
a)தி.க. சண்முகனார்
b)பம்மல் சம்பந்தனார்
c)சங்கர தாசு சுவாமிகள்
d)காசி விசுவநாதர்
97.
அகராதி முறையைத் தமிழுக்குத் தந்தவர்
a)எல்லீசுத்துரை
b)போப் ஐயர்
c)ரேனியஸ் ஐயர்
d)வீரமா முனிவர்
98.
மிகவேகமாகச் செய்யுள் நூல் எழுதுவதில் வல்ல இவர், தமிழில் மிகப்பல செய்யுள் நூல்களை எழுதியவர்
a)மீனாட்சி சுந்தரம் பிள்ளை
b)பலபட்டடைச் சொக்கநாதர்
c)தஞ்சை வேதநாயகம்
d)இராமலிங்கர்
99.
“பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்” எனக்கூறியவர்
a)பாரதிதாசனார்
b)பாரதியார்
c)திரு.வி. கலியாண சுந்தரனார்
d)தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
100.
வால்ட் விட்மனின் சாயலில் வசன கவிதை பாடியவர் யார்?
a)கவிமணி
b)பாரதியார்
c)பாரதிதாசனார்
d)நாமக்கல் கவிஞர்