TNPSC TNSCERT 10TH TAMIL பன்முகக் கலைஞர் PDF NOTES
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- “புதையல்” எனும் புதினத்தை எழுதியவர் யார்?
கலைஞர்
- கலைஞர் மு.கருணாநிதி எங்கு பிறந்தார்?
திருவாரூர் மாவட்டம், திருக்குவளை
- கலைஞர் எப்போது பிறந்தார்?
ஜூன் 3, 1924
- கலைஞரின் பெற்றோர் யார்?
முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையார்
- கலைஞர் தனது பெற்றோருக்கு எத்தனையாவது மகவாகப் பிறந்தார்?
மூன்றாவது
- கலைஞர் தனது தொடக்கக் கல்வியை எங்கு நிறைவு செய்தார்?
திருக்குவளை
- கலைஞர் தனது உயர்நிலைப் பள்ளி படிப்பை எங்கு படித்தார்?
திருவாரூர்
- கலைஞர் தமக்கு அரசியல் அரிச்சுவடியாக அமைந்த ஒரு புத்தகத்தை எங்கு படித்தார்?
திருவாரூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில்
- 1921 இல் சென்னை மாகாணத்திற்கு நீதிக்கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர் யார்?
பனகல் அரசர்
- கலைஞருக்கு திருவாரூரில் அரசியல் அரிச்சுவடியாக அமைந்த புத்தகம் எதைப் பற்றியது?
பனகல் அரசரின் சாதனைகள் கூறும் நூல்
- பள்ளி முடிந்த மாலை வேலைகளில் கலைஞர் தாம் எழுதிய எந்தப் பாடலை முழங்கியபடி இந்தி திணிப்பை எதிர்த்து போராட மாணவர்களை திரட்டினார்?
“வாருங்கள் எல்லோரும் போருக்கு சென்றிடுவோம்!”
- கலைஞர் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்களை திரட்டி திருவாரூர் வீதிகளில் போராட்டம் நடத்திய பொழுது அவருக்கு வயது என்ன?
14
- கலைஞர் இளம்பருவத்திலேயே என்ன தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது?
நட்பு
- கலைஞர் பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சுப்பயிற்சி அளிப்பதற்காக எந்த சங்கத்தை நிறுவினார்?
சிறுவர் சீர்திருத்தச் சங்கம்
- கலைஞர் மாணவர்களிடையே ஒற்றுமையுணர்வை வளர்த்தெடுக்க எந்த அமைப்பை தொடங்கினார்?
தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்
- “இளைய தலைமுறையே; எழுவாய்! செயப்படுபொருள் பயனிலையேல் விழுவாய்! அறிவில் மூத்தோரை தொழுவாய்! அரிய பயன் காண ஆழ உழுவாய்” எனக் கூறியவர் யார்?
கலைஞர்
- கலைஞர் எழுதிய முதல் நாடகத்தின் பெயர் என்ன?
பழநியப்பன்
- கலைஞரின் முதல் நாடகம்எந்த ஆண்டு அரங்கேற்றப்பட்டது?
1944
- கலைஞர் பழநியப்பன் எனும் தனது முதல் நாடகத்தை அடுத்து என்னென்ன நாடகங்களை எழுதினார்?
சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ, தூக்குமேடை போன்றவை
- கலைஞர் தனது எந்த நாடகத்தில் நடிகர் எம். ஆர். ராதாவின் வேண்டுகோளுக்காக மாணவர் தலைவராக நடித்தார்?
தூக்குமேடை
- கலைஞர் மு. கருணாநிதிக்கு எந்த நாடகத்திற்கான பாராட்டு விழாவில் அவருக்கு ‘கலைஞர்’ எனும் சிறப்பு பெயர் வழங்கப்பட்டது?
தூக்கு மேடை
- மக்கள் திலகம் என அழைக்கப்படுபவர் யார்?
எம் ஜி ஆர்
- மக்கள் திலகம் எம். ஜி. ஆர். முதன்முதலாக நடித்த திரைப்படம் எது?
ராஜகுமாரி, 1947
- கலைஞர் முதன்முதலாக எந்த திரைப்படத்திற்கு முழு வசனத்தையும் எழுதினார்?
ராஜகுமாரி, 1947
- கலைஞரை முதன் முதலில் ராஜகுமாரி படத்திற்காக முழு வசனத்தையும் எழுதச் சொல்லியவர் யார்?
இயக்குனர் ஏ. எஸ்.ஏ.சாமி
- கலைஞரின் கதை வசனத்தில் எம்.ஜிஆரின் நடிப்பில் வெளியான படங்கள் என்னென்ன?
மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன்
- சிவாஜிகணேசனின் முதல் திரைப்படம் எது?
பராசக்தி
- பராசக்திக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் யார்?
கலைஞர்
- பராசக்தி திரைப்படத்திற்கு கதை எழுதியவர் யார்?
பாவலர் பாலசுந்தரம்
- கலைஞரின் கதை வசனத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான திரைப்படங்கள் என்னென்ன?
திரும்பிப் பார், மனோகரா, ராஜாராணி
- “ரங்கோன் ராதா” என்ற கதையை எழுதியவர் யார்?
அறிஞர் அண்ணா
- அறிஞர் அண்ணாவின்” ரங்கோன் ராதா” என்ற கதைக்கு யாருடைய வசனங்களை பேசி சிவாஜி கணேசன் நடித்தார்?
கலைஞர்
- “ரங்கோன் ராதா” திரைப்படத்திற்கான இசையமைப்பாளர் யார்?
டி ஆர் பாப்பா
- “ரங்கோன் ராதா” திரைப்படத்தில் கலைஞர் எத்தனை பாடல்களை எழுதினார்?
மொத்தம் பதினோரு பாடல்கள் அதில் நான்கு பாடல்கள் மட்டும்
- ‘காகித ஓடம் கடல் அலை மேலே’ எனும் பாடலை கலைஞர் எந்த திரைப்படத்திற்காக எழுதினார்?
“மறக்க முடியுமா?”
- கலைஞரின் கதை வசனங்களில் பகுத்தறிவு பேசிய படங்கள் என்னென்ன? பராசக்தி, ராஜகுமாரி, மலைக்கள்ளன்
- கலைஞரின் கதை வசனங்களில் சமூகக் கருத்துக்களை பேசிய படங்கள் என்னென்ன?
மருதநாட்டு இளவரசி, பணம், நாம், திரும்பிப் பார்
- கலைஞரின் கதை வசனங்களில் பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசிய படங்கள் என்னென்ன?
மணமகள், ராஜாராணி, இருவர் உள்ளம், பாசப்பறவைகள்
- கலைஞரின் கதை வசனங்களில் அரசியல் பேசிய படங்கள் என்னென்ன? புதுமைப்பித்தன், குறவஞ்சி, அரசிளங்குமரி, வண்டிக்காரன் மகன்
- கலைஞரின் கதை வசனங்களில் இலக்கியம் பேசிய படங்கள் என்னென்ன? அபிமன்யு, பூம்புகார், உளியின் ஓசை
- “மனசாட்சி உறங்கும் போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது” என்பது யார் எழுதிய வசனம்?
கலைஞர் (பூம்புகார் திரைப்படத்தில்)
- “நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க இதோ, சாக்கரடீஸ் அழைக்கிறேன் ஓடி வாருங்கள்” என்பது யார் எழுதிய வசனம்?
கலைஞர் (ராஜாராணி திரைப்படத்தில்)
- “பொறுத்தது போதும் மனோகரா! பொங்கி எழு” என்பது யார் எழுதிய வசனம்? கலைஞர் (மனோகரா திரைப்படத்தில்)
- கலைஞர் தனது எத்தனையாவது வயதில் திரைப்படங்களுக்காக எழுதத் தொடங்கினார்?
23 வயது
- கலைஞர் திரைத்துறையில் இறுதியாக எழுதியது எது?
இராமானுஜர் என்ற தொலைக்காட்சி தொடர் [ 2011 ]
- கலைஞர் திரைத்துறையில் இறுதியாக அவர் எழுத்துக்களை நிறைவு செய்த பொழுது அவருக்கு வயது என்ன?
92 (இராமானுஜர் என்ற தொலைக்காட்சி தொடர் 2011)
- கலைஞர் இளம் வயதிலேயே நடத்திய கையெழுத்து ஏட்டின் பெயர் என்ன? மாணவநேசன்
- “மாணவநேசன்” தந்த ஊக்கத்தால் தனது முதல் கட்டுரையை எந்த இதழில் கலைஞர் எழுதினார்?
திராவிட நாடு
- திராவிட நாடு யாருடைய இதழ்?
அறிஞர் அண்ணா
- திராவிட நாடு இதழில் கலைஞர் தனது முதல் கட்டுரையை எழுதிய பொழுது அவருக்கு வயது என்ன?
18
- “முரசொலி வெளியீட்டு கழகம்” என்ற பெயரில் கலைஞர் நிறுவனம் நிறுவியபொழுது அவருக்கு வயது என்ன?
18 வயது
- முரசொலி இதழ் என்னவாக தொடங்கப்பட்டு தற்பொழுது என்னவாக இயங்கிக் கொண்டிருக்கிறது?
கையெழுத்து ஏடாக தொடங்கி வார இதழாகி தற்பொழுது நாளேடாக உள்ளது
- கலைஞர் என்ன புனைப் பெயரில் கட்டுரைகளை எழுதினார்?
சேரன்
- கலைஞர் எழுதும் கடிதங்கள் எவ்வாறு தொடங்கும்?
உடன் பிறப்புகளுக்கு
- சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு வீரர் ‘மலேயா கணபதி’ எங்கு ஆங்கிலேயரால் தூக்கிடப்பட்டார்?
மலேசியா
- மலேயா கணபதிக்காக ‘கயிற்றில் தொங்கிய கணபதி’ எனும் சிறிய கட்டுரை நூலை எழுதியவர் யார்?
கலைஞர்
- ‘கயிற்றில் தொங்கிய கணபதி’ எனும் கட்டுரை எழுதியபோது கலைஞருக்கு வயது என்ன?
22
- கலைஞர் எழுதிய சிறுகதைகள் என்னென்ன?
நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி, அணில்குஞ்சு போன்ற பல சிறுகதைகள்
- கலைஞர் எழுதிய புதினங்கள் என்னென்ன?
ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட பல புதினங்கள்
- கலைஞரின் தன் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் என்ன?
நெஞ்சுக்கு நீதி
- நெஞ்சுக்கு நீதி எனும் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூல் எத்தனை பாகங்களாக கலைஞரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது?
6 பாகங்கள்
- கலைஞர் எழுதிய பழந்தமிழ் இலக்கியங்களுக்கான உரைகளுள் குறிப்பிடத்தக்கவை எவை?
சங்கத்தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா
- கலைஞர், தொல்காப்பியப் பூங்கா எனும் நூலிற்காக எத்தனை தொல்காப்பிய நூற்பாக்களை எடுத்தாண்டுள்ளார்?
142 தொல்காப்பிய நூற்பாக்கள்
- கலைஞர், தொல்காப்பியப் பூங்கா எனும் நூலை எத்தனை தலைப்புகளில் உரையினை எழுதியுள்ளார்?
100 தலைப்புகளில் 100 மலர்களாக
- கலைஞர் தமது தொல்காப்பியப் பூங்கா எனும் நூலில் எத்தனை உவமைகளை கையாண்டுள்ளார்?
150-க்கும் மேற்பட்டவைகள்
- “நெல்லுக்குள்ளிருந்து அரிசி தலை காட்டுவது போல, வெள்ளை விழிகள் இமைகளின் இடுக்குகளில் ஒளி காட்டிய வண்ணமிருந்தன” இந்த வரிகளை இயற்றியவர்?
கலைஞர் தொல்காப்பியப்பூங்கா உரை நூல்
- “வல்லினம், மெல்லினம், இடையினம் ஒன்றுபட்டுத் தமிழ் என்றே தகத்தகாய ஒளிபரப்பிடும்போது தமிழர்கள் பல கூறுகளாக பிளவுப்பட்டுப் பாழ்பட்டு கிடப்பது நியாயந்தானா?” இந்த வரிகளை இயற்றியவர்?
கலைஞர் தொல்காப்பியப்பூங்கா உரை நூல்
- “கவியரங்குகளே தனக்கு இளைப்பாறும் இன்னிழல் சோலைகளாயின!” எனக் கூறுபவர் யார்?
கலைஞர்
- கலைஞர் இயற்றியுள்ள கவிதைகள் எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளன?
ஒன்பது தொகுதிகள்
- கலைஞர் என்ன தலைப்பில் வசன கவிதையும் எழுதியுள்ளார்? புறநானூற்றுத்தாய்
- “இந்த எட்டுச்சுவை பிட்டுத்தமிழ் கட்டித்தயிர் வட்டில்நிறை கொட்டித்தரப் பட்டுக்கொடிக் கொற்றக்குடை முத்துச்சரச் சோழனூர்வருவீரே” இக்கவிதையை எழுதியவர் யார்?
கலைஞர், சிலப்பதிகாரம் பற்றி
- “….. கண்மூடிக்கொண்டு நீ சிந்திக்கும் பேரழகைப் பார்த்துள்ளேன்… இன்று மண்மூடிக்கொண்டுன்னைப் பார்க்காமல் தடுப்பதென்ன கொடுமை?” என யார் மறைந்த பின் வானொலியில் கலைஞர் பாடிய இரங்கற்பா?
அறிஞர் அண்ணா
- சென்னையில் வள்ளுவர் கோட்டமும் கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலையும் அமைத்தவர் யார்?
கலைஞர்
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எந்த கோவில் தேரின் மாதிரி சிற்பத்தேர் கட்டப்பட்டுள்ளது?
திருவாரூர் கோவில் தேர்
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எந்த கட்டிடக்கலை பானையில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன?
திராவிடக் கட்டிடக்கலை
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குறள் மணிமாடம்
- கலைஞரால் கண்ணகி வாழ்ந்த ஊரில் உருவாக்கப்பட்ட கலைக்கூடம் எது?
பூம்புகார் கலைக்கூடம்
- அறிஞர் அண்ணாவின் எத்தனையாவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது?
102 வது பிறந்தநாள்
- கலைஞரால் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் எப்போது திறக்கப்பட்டது?
2010 செப்டம்பர் 15
- மனோன்மணீயம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த எனும் பாடலை அரசு விழாக்கள் அனைத்திலும் தொடக்கப் பாடலாக பாடுவதற்கு வழி வகுத்தவர் யார்?
கலைஞர்
- கலைஞர் கல்வித்துறையை எத்தனையாக பிரித்தார்?
இரண்டு பள்ளிக்கல்வித்துறை உயர்கல்வித்துறை
- தமிழ் வளர்ச்சித் துறை என புதிதாக ஒரு துறையை உருவாக்கி அதற்கு தமிழறிஞர் ஒருவரை அமைச்சராகி அழகு பார்த்தவர் யார்?
கலைஞர்
- எந்த ஆண்டு கோவையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார்?
2010
- ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ எனும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் தமிழ் பாடலை இயற்றியவர் யார்?
கலைஞர்
- செம்மொழியான தமிழ் மொழியாம் எனும் பாடலுக்கு இசையமைத்தவர்?
ஏ ஆர் ரகுமான்
- உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறுவப்பட்டுள்ள திருவள்ளூர் சிலையின் கீழ் என்ன வாசகத்தை கலைஞர் பொறிக்கச் செய்தார்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
- கலைஞர் எப்போது என்ன வயதில் இறந்தார்?
ஜூலை 7, 2018 [ 94 வயது]