அருளுடைமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

FOR THIS ONLINE TEST-CLICK HERE
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள

பொருள்: பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

அருட்செல்வம்–அருள் என்னும் செல்வம்; செல்வத்துள்-உடைமைகள் பலவற்றுள்ளுள்ளும்; செல்வம்-உடைமை; பொருட்செல்வம்-பொருளாலாய செல்வம்; பூரியார்-இழிந்தார்; கண்ணும்-இடத்திலும்; உள-இருக்கின்றன.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩● ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்

தேரினும் அஃதே துணை

பொருள்: நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும். பல வழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக உள்ளது.

அருஞ்சொற்பொருள்: நல்-நல்ல; ஆற்றான்-நெறியால்; நாடி-ஆராய்ந்து; அருள்-அருள்; ஆள்க-உடையராகுக; பல்-பலவாகிய; ஆற்றான்-நெறியால்; தேரினும்-ஆராய்ந்தாலும்; அஃதே-அதுவே; துணை-உதவி.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩● ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்

பொருள்: அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

அருஞ்சொற்பொருள்: அருள்-அருள்; சேர்ந்த-அடைந்த; நெஞ்சினார்க்கு-நெஞ்சினை உடையார்க்கு; இல்லை-இல்லை; இருள்-இருள்; சேர்ந்த-செறிந்த; இன்னா-தீய; உலகம்-உலகம்; புகல்-புகுதல்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩● ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப

தன்னுயிர் அஞ்சும் வினை

பொருள்: தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

அருஞ்சொற்பொருள்: மன்-மற்ற; உயிர்-உயிர்; ஓம்பி-பேணி; அருள்-அருள்; ஆள்வாற்கு-ஆள்கின்றவனுக்கு; இல்-உளவாகா; என்ப-என்று சொல்லுவர்; தன்-தனது; உயிர்-உயிர்; அஞ்சும்-நடுங்குகின்றதற்கு ஏதுவாகிய; வினை-செயல்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩● ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு

மல்லல்மா ஞாலம் கரி

பொருள்: அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

அருஞ்சொற்பொருள்: அல்லல்-துன்பம்; அருள்-அருள்; ஆள்வார்க்கு-ஆள்பவர்க்கு; இல்லை-இல்லை; வளி-காற்று; வழங்கு-இயங்குகின்ற; மல்லல்-வளப்பம்; மா-பெரிய; ஞாலம்-உலகம்; கரி-சான்று.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩● ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்துஒழுகு வார்

பொருள்: அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பர்.

அருஞ்சொற்பொருள்: பொருள்-உறுதிப்பொருள்; நீங்கி-செய்யாமல்; பொச்சாந்தார்-மறந்தவர்; என்பர்-என்று சொல்லுவர்; அருள்-அருள்; நீங்கி-தவிர்த்து; அல்லவை-தீவினைகளை; செய்து-இயற்றி; ஒழுகுவார்-நடந்துகொள்பவர்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩● ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு

பொருள்: பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

அருஞ்சொற்பொருள்: அருள்-அருள்; இல்லார்க்கு-இல்லாதவர்க்கு; அவ்வுலகம்-அந்த உலகம்; இல்லை-இல்லை பொருள்-உடைமை; இலார்க்கு-இல்லாதவருக்கு; இவ்வுலகம்-இந்த உலகம்; இல்லை-இல்லை; ஆகியாங்கு-ஆனாற்போல

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩● ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற்று ஆதல் அரிது

பொருள்: பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

அருஞ்சொற்பொருள்: பொருள்-உடைமை; அற்றார்-இல்லாதவர்; பூப்பர்-பொலிவுடையார்; ஒருகால்-ஒருமுறை; அருள்-அருள்; அற்றார்-இழந்தவர்; அற்றார்-இழந்தவரே; மற்று-பின், ஆனால், அவ்வாறன்றி; ஆதல்-ஆகுதல்; அரிது-அருமையானது.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩● ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்

பொருள்: அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

அருஞ்சொற்பொருள்: தெருளாதான்-தெளிவில்லாதவன்; மெய்ப்பொருள்-உண்மைப் பொருள்; கண்டு-உணர்ந்தாற்; அற்று (ஆல்)-அத்தன்மைத்து; தேரின்-ஆராய்ந்தால்; அருளாதான்-அருளில்லாதவன்; செய்யும்-செய்யும்; அறம்-நற்செயல்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩● ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து

பொருள்: (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

அருஞ்சொற்பொருள்: வலியார்-வலிமையுடையவர்; முன்-எதிரில்; தன்னை-தன்னை; நினைக்க-எண்ணுக; தான்-தான்; தன்னின்-தன்னைக் காட்டிலும்; மெலியார்-எளியார்; மேல்-இடத்தில்; செல்லும்இடத்து-செல்லும் பொழுது.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

Telegram Logo GIF அருளுடைமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page