DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
ONLINE TEST & ANSWER KEY FOR THIS TEST
2014-POSTS INCLUDED IN MADRAS HIGH COURT SERVICE
1.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் எவ்வகை ஓசையில் அமைந்துள்ளன? a)அகவலோசை
b)தூங்கலோசை
c)செப்பலோசை
d)துள்ளலோசை
2.
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்” – எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது? a)முதுமொழிக் காஞ்சி
b)ஏலாதி
c)இனியவை நாற்பது
d)இன்னா நாற்பது
3.
‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்? a)அன்புடையோர்
b)அறிவு முதிர்ச்சியுடையோர்
c)ஆர்வமிகு நண்பர்கள்
d)உற்றார்
4.
“புறத்து உறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு——————–
குறளினை நிறைவு செய்க. a)அன்பு இலவர்க்கு
b)மரம்தளிர்த் தற்று
c)அஃதே துணை
d)இயைந்த தொடர்பு
5.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் a)சென்ற இடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு
b)கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
c)இடமெல்லாம் சிறப்பு சென்ற கற்றோர்க்கு
d)சிறப்பு கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்
6.
‘செம்புலப் பெயல் நீர்போல’ என்னும் அடி இடம்பெறும் நூல் a)நற்றிணை
b)பரிபாடல்
c)குறுந்தொகை
d)பதிற்றுப்பத்து
7.
சரியான விடையைக் கண்டுபிடி. தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர் a)கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்
b)முனுசாமி, மங்களம்
c)வெங்கட்ராமன், அம்மணி
d)நீலமேகம்பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்
8.
‘அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட,
தேசபக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே
தேவர்கள் விரும்புவது” – இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்? a)பாரதியார்
b)சுந்தரம் பிள்ளை
c)கவிமணி
d)பாரதிதாசன்
9.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
சிங்கவல்லி என்று வழங்கப்படும் மூலிகை —– a)தூதுவளை
b)துளசி
c)அகத்திக்கீரை
d)கீழாநெல்லி
10.
‘மீதூண் விரும்பேல்’ என்றவர் a)பாரதியார்
b)அதிவீரராம பாண்டியர்
c)பாரதிதாசன்
d)ஒளவையார்
11.
பொருத்துக.
I.WRIT – 1. மணிக்கட்டு
II.WRIST – 2. . எழுது
III.WRITE – 3. உரிமை
IV.RIGHT – 4.சட்ட ஆவணம் a)4 1 2 3
b)1 2 1. 3
c)2 1 3 4
d)2 3 4 1
12.
‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்? a)பம்மல் சம்பந்தனார்
b)சங்கரதாசு சுவாமிகள்
c)பரிதிமாற் கலைஞர்
d)தி.க. சண்முகனார்
13.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக :
I.வினைத்தொகை 1. நாலிரண்டு
II.உவமைத்தொகை 2. செய்தொழில்
III.உம்மைத்தொகை 3. பவளவாய் பேசினாள்
IV.அன்மொழித்தொகை 4. மதிமுகம் a)2 4 1 3
b)2 3 1 4
c)4 2 3 1
d)4 3 1 2
14.
கீழ்க்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தா உயிரளபெடைத் தொடரைச் சுட்டுக a)கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
b)உழாஅர் உழவர்
c)படாஅ தவர்
d)தூஉ மழை
15.
கருத்தாவாகுபெயர் அல்லாத சொற்றொடர் a)திருவள்ளுவரைப் படித்துப் பார்
b)கம்பனைப் புரட்டிப் பார்
c)தொல்காப்பியனை தொட்டு உணர்
d)நான் சமையல் கற்றேன்
16.
மரபுச் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது? a)ஆட்டுத்தொழுவத்தின் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கனைத்தது
b)ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது
c)ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கனைத்தது
d)ஆட்டுக்கொட்டில் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கத்தியது
17.
பின்வருவனவற்றுள் ‘வினைத்தொகை’ என்னும் இலக்கணத்திற்குச் சான்றாக வராத சொல்லைத் தேர்க a)கொலைப்புலி
b)பொங்கு கடல்
c)பொழிதருமணி
d)செய்கொல்லன்
18.
“ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு” என்னும் பொது இலக்கணம் பெற்றமையும் பா’ – எது? a)வெண்பா
b)ஆசிரியப்பா
c)கலிப்பா
d)வஞ்சிப்பா
19.
ஒருமை பன்மை பிழைகளை நீக்குக.
பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள் a)பெண் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
b)பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றனர்
c)பெண் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றாள்
d)பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றனர்
20.
நாடகக் கலைக்கு மற்றொரு பெயர் என்ன? a)கூத்துக்கலை
b)நாட்டியக் கலை
c)சிற்பக் கலை
d)பரதக்கலை
21.
‘இராசதண்டனை’ – இந்த நாடகத்தை யார் படைத்தார்? a)வண்ணதாசன்
b)பாரதிதாசன்
c)கண்ணதாசன்
d)வாணிதாசன்
22.
‘டைரியம்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் : a)ஆண்டுக் குறிப்பு
b)மாதக் குறிப்பு
c)நாட் குறிப்பு
d)வாரக் குறிப்பு
23.
வேர்ச் சொல்லிலிருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கல்
கொடு : a)கொடுத்த
b)கொடுத்தல்
c)கொடுத்து
d)கொடுத்தவன்
24.
குற்றியலுகரத்திற்கான மாத்திரை அளவு பின்வருவனவற்றுள் எது? a)ஒன்று
b)ஒன்றரை
c)இரண்டு
d)அரை
25.
‘தமிழ்ச் செய்யுட் கலம்பகம்’ எனும் தொகை நூலின் ஆசிரியர் யார்? a)வீரமாமுனிவர்
b)கால்டுவெல்
c)ஜி.யு. போப்
d)சீகன் பால்க் ஐயர்
26.
அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக: a)தாய்மொழி, தேன், தமிழ், துறை
b)தமிழ், துறை, தாய்மொழி, தேன்
c)தமிழ், தாய்மொழி, துறை, தேன்
d)தேன், துறை, தாய்மொழி, தமிழ்
27.
‘இரகசிய வழி’ – என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் a)ஜான் பனியன்
b)லிட்டன் பிரபு
c)ஜி.யு. போப்
d)எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை
28.
ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று அல்லாதது எது? a)உயர்ந்தோங்கி
b)நடு மையம்
c)மீமிசை ஞாயிறு
d)மாடு மனை
29.
பொருத்துக :
நோய்தீர்க்கும் மூலிகைகள் – பயன்கள்
I.துளசி – 1. இளைப்பு இருமல் போக்கும்
II.தூதுவளை – 2. மார்புச்சளி நீங்கும்
III.கீழாநெல்லி- 3. கருப்பைச் சார்ந்த நோய் நீங்கும்
IV.சோற்றுக் கற்றாழை -4. மஞ்சட் காமாலையைப் போக்கும் a)1 3 4 2
b)2 1 4 3
c)4 2 3 1
d)3 4 2 1
30.
“நான் தனியாக வாழவில்லை – தமிழோடு வாழ்கிறேன்” – என்றவர் யார்? a)மறைமலையடிகளார்
b)திரு.வி.கலியாணசுந்தரனார்
c)தஞ்சை வேதநாயக சாத்திரியார்
d)பெருஞ்சித்திரனார்
31.
“அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியால் உண்டு”. – எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத் தேர்க. a)அன்பு – குழந்தை, அருள் – தாய், பொருள் – வளர்ப்புத்தாய்
b)அன்பு – தாய், அருள் – குழந்தை, பொருள் – வளர்ப்புத்தாய்
c)அன்பு – வளர்ப்புத்தாய், அருள் – குழந்தை, பொருள் – தாய்
d)அன்பு – தாய், அருள் – வளர்ப்புத்தாய், பொருள் – குழந்தை
32.
“தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு அறுபதுவிழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தவர் யார்” a)அண்ணாதுரை .
b)இராஜாஜி
c)பக்தவச்சலம்
d)காமராசர்
33.
பொருந்தாச் சொல்லைக் காண்க. a)சத்துருக்கினன்
b)பரதன்
c)நகுலன்
d)சுக்ரீவன்
34.
“வண்மை யில்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்” மேற்கண்ட அடிகளால் சிறப்பிக்கப் பெறும் நாடு எது? a)நிடத நாடு
b)கோசல நாடு
c)சோழ நாடு
d)ஏமாங்கத நாடு
35.
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் – –..” – என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நூல் a)மதுரைக்காஞ்சி
b)பட்டினப்பாலை
c)நெடுநல்வாடை
d)மலைபடுகடாம்
36.
இரண்டு எழுத்துகளை மட்டுமே பெற்று வரும் குற்றியலுகர வகை. a)ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
b)உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
c)வன்றொடர்க் குற்றியலுகரம்
d)நெடில் தொடர்க் குற்றியலுகரம்
37.
புரட்சி முழக்கம்’ – என்ற நூலை எழுதியவர் யார்? a)ஞான கூத்தன்
b)சாலை இளந்திரையன்
c)சாலினி இளந்திரையன்
d)சி.சு. செல்லப்பா
38.
பின்வரும் நூல்களுள் ‘கண்ணதாசன்’ எழுத a)இயேசு காவியம்
b)திருக்கை வழக்கம்
c)தைப்பாவை
d)கல்லக்குடி
39.
பொருத்துக :
I.சிங்கம் – 1.அகவும்
II.மயில் – 2,கனைக்கும்
III.புலி – 3 .முழங்கும்
IV.குதிரை – 4.உறுமும் a)1 2 3 4
b)4 3 2 1
c)3 2 1 4
d)3 1 4 2
40.
பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
‘கரிசலாங்கண்ணியின்’ வேறுபெயர் a)தேகராசம்
b)ஞானப்பச்சிலை
c)பிருங்கராசம்
d)கையாந்தகரை
41.
மாறியுள்ள சொற்களில் முறையானதை எழுதுக. a)பொன்செய்யும் மருந்து மனமே என்ற போதும்
b)போதும் என்ற மருந்து பொன் செய்யும் மனமே
c)மனமே என்ற மருந்து பொன் செய்யும் போது
d)போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
42.
——— எழுத்துகள் மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன a)ல்,ள்
b)த்,ந்
c)ர்,ழ்
d)ற்,ன்
43.
பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையைக் கண்டெடு a)தே – சோலை
b)வீ -கடவுள்
c)வை -வைக்கோல்
d)கா -மலர்
44.
இலக்கணக் குறிப்பு அறிதல்
வெந்து, உலர்ந்து – வினையெச்சங்கள். மேலும் மென்தொடர் குற்றியலுகரங்கள்.
(R)முற்று பெறாத வினைச்சொல் வினையைக் கொண்டு முடிவது வினையெச்சம். குற்றியலுகரச்சொல்லில் ஈற்றயல் எழுத்து, மெல்லினமெய்யாய் அமைவது மென்தொடர் குற்றியலுகரம். a)சரி, (R) தவறு
b)சரி (R) -A)க்கு சரியான விளக்க மன்று
c)தவறு (R) சரி
d)மற்றும் (R) இரண்டும் சரி மேலும் க்கு (R) சரியான விளக்கமாகும்
45.
பொருத்துக:
I.இயல்பு புணர்ச்சி 1. மொழிப்பொருள்
II.தோன்றல் விகாரம் 2. கற்சிலை
III.கெடுதல் விகாரம் 3. மரவேர்
IV.திரிதல் விகாரம் 4. வான் மழை a)3 1 4 2
b)4 1 3 2
c)4 1 2 3
d)2 3 4 1
46.
பிழையான சீர் – அசை எது? a)ஆதல் – நேர் நேர்
b)ஆகுல – நேர் நிரை
c)நீர – நேர் நேர்
d)பிற – நேர் நேர்
47.
பாஞ்சாலி சபதத்தின் பிரிவுகள் பாடல்கள் எண்ணிக்கையில் பின்வருவனவற்றுள் எது சரியானது? a)மூன்று பாகங்கள் 4 சருக்கங்கள் 400 பாடல்கள்
b)இரண்டு பாகங்கள் 5 சருக்கங்கள் 412 பாக்கள்
c)இரண்டு பாகங்கள் 7 சருக்கங்கள் 450 பாக்கள்
d)நான்கு பாகங்கள் 5 சருக்கங்கள் 415 பாக்கள்
48.
பழந்தமிழ் கற்றல் இன்பம்
பலநாடு சுற்றல் இன்பம்’ – என்ற பாடலை இயற்றியவர் யார்? a)பாரதியார்
b)பாரதிதாசன்
c)சுரதா
d)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
49.
வெள்ளைக்காரர் சண்டையினால் விளைந்த அழிவினை
ஐயோ! என் ஒரு நாவினால் எங்ஙனம் சொல்வேன்! – எவ்வகை வாக்கியம் a)வினா வாக்கியம்
b)செய்தி வாக்கியம்
c)வியப்பு வாக்கியம்
d)கட்டளை வாக்கியம்
50.
ஐஞ்சிறுங் காப்பியங்கள் அனைத்துமே ————சமயக் காப்பியம். a)பௌத்தம்
b)சமணம்
c)வைணவம்
d)சைவம்
51.
பின்வருவனவற்றுள், ‘இருபெயரொட்டுப் பண்புத் தொகை’ சொல் எது? a)கபிலபரணர்
b)கயல்விழி
c)மல்லிகைப் பூ
d)வெண்ணிலவு
52.
தலை வணங்கினான்’ என்பது பின்வருவனவற்றுள் எது? a)ஐந்தாம் வேற்றுமைத் தொகை
b)மூன்றாம் வேற்றுமைத் தொகை
c)நான்காம் வேற்றுமைத் தொகை
d)ஆறாம் வேற்றுமைத் தொகை
53.
வாணிதாசனால் எழுதப்பட்ட பாடல் தொகுப்பின்’ பெயரைக் கூறுக. a)இளைஞர் இலக்கியம்
b)பூங்கொடி
c)குடும்ப விளக்கு
d)குழந்தை இலக்கியம்
54.
பொருளறிந்து பொருத்துக.
சொல் – பொருள்
I.வைதருப்பம் – 1.சித்திரகவி
II.கௌடம் – 2.ஆசுகவி
III.பாஞ்சாலம் – 3.வித்தாரகவி
IV.மாகதம் – 4.மதுரகவி a)2 4 3 1
b)4 1 3 2
c)1 3 2 4
d)2 4 1 3
55.
குன்றக்குடி அடிகளாரால் கவியரசு’ என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது? a)வைரமுத்து
b)கண்ண தாசன்
c)வாணிதாசன்
d)முடியரசன்
56.
பிரித்தெழுதுக.
தென்றிசை a)தென் – றிசை
b)தெற்கு – றிசை
c)தென் – திசை
d)தெற்கு – திசை
57.
‘நட’ என்பதன் வினைமுற்று a)நடத்திய
b)நடந்து
c)நடத்தல்
d)நடந்தான்
58.
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது? a)நான் வாங்கிய நூல் இது அல்ல
b)நான் வாங்கிய நூல்கள் இது அன்று
c)நான் வாங்கிய நூல் இது அன்று
d)நான் வாங்கிய நூல் இவை அல்ல
59.
குலசேகர ஆழ்வார் வட மொழியில் எழுதிய நூல் எது? a)முகுந்தமாலை
b)முதலாயிரம்
c)திருவியற்பா
d)பெரியதிருமொழி
60.
பெரிய புராணம்’ எழுதிடத் துணை நின்ற நூல் எது? a)’திருத்தொண்டத் தொகை
b)திருவாசகம்
c)தேவாரம்
d)திருவெம்பாவை
61.
பிறவினை வாக்கியத்திற்குப் பொருந்தாததைக் கண்டறிக. a)ஆசிரியர் வகுப்பறையில் வரைபடத்தைக் காண்பித்தார்
b)கோவையிலிருந்து என் தாயாரைச் சென்னைக்கு வருவித்தேன்
c)நேற்று என் நண்பனுக்குப் பாடம் கற்பித்தேன்
d)நான் உன்னைவிட செல்வாக்குள்ளவன் அல்லன்
62.
அன்புள் இனிநாம் ஓர் ஐவர்கள் உளரானோம்”
இப்பாடலடி இடம் பெற்ற நூல் எது? a)சீவக சிந்தாமணி
b)பாஞ்சாலி சபதம்
c)சிலப்பதிகாரம்
d)கம்பராமாயணம்
63.
“ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்”
இவ்வடி இடம் பெற்றுள்ள நூலின் பெயர் யாது? a)தமிழரசி குறவஞ்சி
b)குற்றாலக் குறவஞ்சி
c)பெத்தலகேம் குறவஞ்சி
d)சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
64.
பொருளறிந்து பொருத்துக.
I.EVOKE 1. வெளிப்படு
II.EVOLVE 2.அகற்று
III.EVINCE 3. அழை
IV.EVICT 4. நிருபி a)3 2 1 4
b)3 1 4 2
c)2 4 3 1
d)2 3 4 1
65.
“நம்பிக்கைதான் வள்ளியம்மையின் ஆயுதம்” என்றவர் a)பெரியார்
b)அறிஞர் அண்ணா
c)அண்ணல் அம்பேத்கர்
d)காந்தியடிகள்
66.
பொருந்தாததைக் கண்டெழுதுக a)இராணி மங்கம்மாள் கணவன் சொக்கநாத நாயக்கர்
b)இராணி மங்கம்மாள் மகன் முத்து வீரப்பன்
c)இராணி மங்கம்மாள் மருமகள்- கமலாம்பிகை
d)இராணி மங்கம்மாள் பெயரன்- விஜயரங்கச் சொக்கநாதன்
67.
“ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம்” என்றவர் யார் ? a)அன்னிபெசண்ட் அம்மையார்
b)மூவலூர் ராமாமிர்தத்தம்மாள்
c)தில்லையாடி வள்ளியம்மை
d)இராணி மங்கம்மாள்
68.
பொருந்தாத சொல்லைக் கண்டறிக : கடலைக் குறிக்காத தமிழ்ச்சொல் a)பௌவம்
b)புணரி
c)பரவை
d)திமில்
69.
பெயர்ச்சொல்லின் வகையறிதல் : மாட்சி a)பொருட்பெயர்
b)பண்புப்பெயர்
c)இடப்பெயர்
d)காலப்பெயர்
70.
கோடிட்ட இடத்தை நிரப்புக. யவனர் என்று அழைக்கப்பட்டவர் —– a)உரோமானியர், எகிப்தியர்
b)கிரேக்கர், உரோமானியர்
c)கிரேக்கர், சீனர்
d)சீனர், எகிப்தியர்
71.
ந. பிச்சமூர்த்தி என்ற கவிஞரின் இயற்பெயர் என்ன? a)கனகசபை
b)வேங்கட மகாலிங்கம்
c)இராச கோபால்
d)அரங்க சாமி
72.
பொருந்திய இணையைத் தேர்ந்தெடுக்க a)பொங்கல் வழிபாடு – ந. பிச்சமூர்த்தி
b)சிரித்த முத்துகள் – நா. காமராசர்
c)வீர காவியம் – சிற்பி பாலசுப்பிரமணியம்
d)தஞ்சைவாணன் கோவை – செயங்கொண்டார்
73.
கீழுள்ள நூற்பட்டியலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிடாத நூலின் பெயர் என்ன? a)நேயர் விருப்பம்
b)சொந்தச் சிறைகள்
c)பால் வீதி
d)இன்னொரு சிகரம்
74.
பொருத்துக
I.மேதி – 1.அன்னம்
II.புள் – 2.அலை
III.காசினி – 3. எருமை
IV.திரை – 4.நிலம் a)3 1 4 2
b)3 4 2 1
c)4 1 3 2
d)4 3 2 1
75.
ஆறுமுக நாவலரை,
‘வசனநடை கைவந்த வல்லாளர்’
எனப் பாராட்டியவர் யார்? a)மறைமலையடிகள்
b)பரிதிமாற்கலைஞர்
c)ரா.பி. சேதுப்பிள்ளை
d)திரு.வி கலியாணசுந்தரனார்
76.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக
I.Fake News – 1.செய்தித்தாள் வடிவமைப்பு
II.Flash News – 2. சிறப்புச் செய்தி
III.Green Proof – 3. பொய்ச் செய்தி
IV.Layout – 4.திருத்தப்படாத அச்சுப்படி a)2 3 1 4
b)2 3 4 1
c)3 2 4 1
d)3 2 1 4
77.
மரபுச் சொற்களைப் பொருத்துக :
I.ஈச்சம் – 1. மடல்
II.மூங்கில் – 2. ஓலை
III.வேப்பம் – 3. இலை
IV.தாழை – 4. தழை a)4 1 3 2
b)3 1 2 4
c)4 3 2 1
d)2 3 4 1
78.
சரியான விடையை தேர்ந்தெடுக :
I.நன்னூல் – 1. புத்தமித்தரர்
II.வச்சணந்தி மாலை – 2.பவணந்தி முனிவர்
III.யாப்பருங்கலக் காரிகை – 3.குணவீர பண்டிதர்
IV.வீரசோழியம் – 4.அமிர்த சாகரர் a)1 3 2 4
b)4 2 1 3
c)2 4 3 1
d)2 3 4 1
79.
‘தீ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழி குறிக்காத பொருள் தேர்வு செய்க a)அறிவு
b)இனிமை
c)தமை
d)வலிமை
80.
வாக்கியம் கண்டறிதல்
காந்தியடிகள் அரிச்சந்திர நாடகத்தை ஒரு முறை பார்த்தார் a)வினா வாக்கியம்
b)செய்தி வாக்கியம்
c)கட்டளை வாக்கியம்
d)உணர்ச்சி வாக்கியம்
81.
ஆய்தமாகிய சார்பெழுத்து — இடமாகக் கொண்டு பிறக்கிறது. a)கழுத்தை
b)மார்பை
c)தலையை
d)மூக்கை
82.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது. a)துன்பத்தின் நிலைபாடு என்ன?
b)எக்காலத்தும் துன்பம் அடையார் யார்?
c)அரிது என்பதன் பொருள் கூறுக
d)இயல்புடையாருக்கு இன்னல் வருமா?
83.
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. a)ஆவாரம், ஆதாரம், ஆசாரம், ஆகாரம்
b)ஆகாரம், ஆதாரம், ஆவாரம், ஆசாரம்
c)ஆசாரம், ஆவாரம், ஆதாரம், ஆகாரம்
d)ஆகாரம், ஆசாரம், ஆதாரம், ஆவாரம்
84.
“கைவண்ணம் அங்குக் கண்டேன் ; கால்வண்ணம் இங்குக் கண்டேன்”. இப்பாடலடி இடம் பெற்ற நூல் எது? a)சிலப்பதிகாரம்
b)மகாபாரதம்
c)நளவெண்பா
d)கம்பராமாயணம்
85.
இணையதள பயன்பாடு அதிகரித்தது ; அதனால் உலகம் குறுகியது.எவ்வகைத் தொடர்? a)கலவைத் தொடர்
b)உணர்ச்சித் தொடர்
c)தனிநிலைத் தொடர்
d)தொடர் நிலைத் தொடர்
86.
“அழகர் கோவிலில் தந்தச் சிற்பங்கள் இல்லாமல் இல்லை” – எவ்வகைத் தொடர். a)அயற்கூற்றுத் தொடர்
b)பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
c)பிறவினைத் தொடர்
d)செய்வினைத் தொடர்
87.
பொருத்துக:
அஃறிணை உயிர்கள் – ஒலிமரபு
I.பூனை – 1.குனுகும்
II.புறா – 2.முரலும்
III.குரங்கு – 3.சீறும்
IV.வண்டு – 4. அலப்பும் a)3 1 2 4
b)4 2 1 3
c)3 1 4 2
d)3 4 1 2
88.
பின்வருவனவற்றுள் பிறமொழிக்கலவாத தமிழ்ச் சொல்லைத் தேர்க. a)குமாரன்
b)அயலார்
c)உத்தரவு
d)கிராமம்
89.
சொற்களின் வகைகளைப் பொருத்திடுக : –
I.காற்று, பலகை 1. பெயர்த் திரிசொற்கள்
II.எயிறு, நல்குரவு 2. வடசொற்கள்
III.கமலம், புஷ்பம் 3. பெயர் இயற்சொற்கள்
IV.கேணி, பெற்றம் 4. திசைச் சொற்கள் a)3 2 1 4
b)1 3 4 2
c)3 1 2 4
d)1 4 2 3
90.
பாரதியாரின் பாஞ்சாலி சபதம் எவ்வகை பா வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளது? a)விருத்தமும் சிந்துவும்
b)விருத்தமும் ஆசிரியமும்
c)ஆசிரியமும் வெண்பாவும்
வெண்பாவும் சிந்துவும்
91.
உரிய விடையைத் தேர்வு செய்க.
சாலை இளந்திரையன் எந்த இயக்கம் தோன்றக் காரணமானவர்? a)உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
b)தமிழ் முன்னேற்ற இயக்கம்
c)உலகப் பண்பாட்டு இயக்கம்
d)உலக ஒருமைப்பாட்டு இயக்கம்
92.
வளரும் பிள்ளைகட்கு வள்ளலார் வழங்கிய அறிவுரையைக் காண்க
I .குருவை வணங்கக் கூசி நிற்காதே
- மூடக்கருத்துக்களை நம்பாதே
III. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
- சமுதாயத்திற்குத் தீங்குச் செய்யாதே a)1-ம் III- ம் சரியானவை
b)II-ம் III- ம் சரியானவை
c)I, II, III மூன்றும் சரியானவை
d)1-ம் IV- ம் சரியானவை
93.
‘உவமைக் கவிஞர்’ சுரதாவின் இயற்பெயர் என்ன? a)சந்திரசேகர்
b)முத்தையா
c)பாலசுப்பிரமணி
d)இராசகோபாலன்
94.
திராவிட மொழிகளின் உயிர் நீட்சி ஒலியின் தன்மைய தாகும் – – இத்தொடர் எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக. a)கட்டளை வாக்கியம்
b)செய்தி வாக்கியம்
c)வினா வாக்கியம்
d)வியப்பு வாக்கியம்
95.
“பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி எழுதுகோல்”
இப்பாடலடி இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது? a)தேன் மழை
b)குயில் பாட்டு
c)கொடி முல்லை
d)மாங்கனி
96.
கோடிட்ட சொல்லில் அமைந்துள்ள எழுத்துகளின் மாத்திரை –
தரும் வள்ளல் a)5 1/2மாத்திரைகள்
b)2 ½மாத்திரைகள்
c)4 3/4மாத்திரைகள்
d)2 1/4மாத்திரைகள்
97.
“உலகெலாம்” என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்ட நூல் எது? a)திருவிளையாடற் புராணம்
b)திருவாசகம்
c)திருத்தொண்டர் புராணம்
d)திருமந்திரம்
98.
“பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று இறைவன் யாரிடம் கூறினார்? a)சுந்தரர்
b)அப்பர்
c)மாணிக்கவாசகர்
d)ஆண்டாள்
99.
மங்கம்மாள் அன்னச்சத்திரம் கட்டிய இடம் எது? a)சென்னை
b)மதுரை
c)கோவை
d)தஞ்சை
100.
பொருந்தாத சொல்லைத் தேர்க. a)அம்பி
b)பரவை
c)வாரணம்
d)கடல்