DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
6TH TAMIL TERM 01 QUESTIONS AND ANSWERS
- “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என கூறியவர் யார்?
பாரதிதாசன்
- பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
சுப்புரத்தினம்
- யாரின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்?
பாரதியார்
- பாரதிதாசன் எவ்வாறு போற்றப்படுகிறார்?
புரட்சிக்கவி ,பாவேந்தர்
- “தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்”என பாடியவர்?
கவிஞர் காசி ஆனந்தன்
- “எட்டு திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி” என பாடியவர் யார்?
பெருஞ்சித்திரனார்
- பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
மாணிக்கம்
- பெருஞ்சித்திரனார் என்ன சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?
பாவலரேறு
- பெருஞ்சித்திரனார் என்ன நூல்களை இயற்றியுள்ளார்?
கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவிய கொத்து, நூறாசிரியம்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் என்னென்ன?
தென்மொழி ,தமிழ்ச்சிட்டு ,தமிழ்நிலம்
- தனித்தமிழையும் தமிழ் உணர்வையும் பரப்பிய பாவலர் யார் ?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- தமிழ் கும்மி எனும் கவிதை பெருஞ்சித்திரனாரின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?
கனிச்சாறு
- கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது?
எட்டு தொகுதிகள்
- ” வான் தோன்றி வளி தோன்றி ….தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே நீ தோன்றி வளர்ந்தாய் வாழி” என பாடியவர் யார்?
வாணிதாசன்
- உலகில் எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன?
6,000
- “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என பாடியவர் ?
பாரதியார்
- “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என பாரதியார் எதனை வியந்து பாடுகிறார்?
தமிழ் மொழியின் இனிமை
- “என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”என பாடியவர் யார்?
பாரதியார்
- என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”என பாரதியார் எதை வியந்து பாடியுள்ளார்?
பாரதத்தாயின் தொன்மை
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் எது?
தொல்காப்பியம்
- தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எந்த சுழி எழுத்துக்களாக உள்ளன?
வலஞ்சுழி
- தமிழ் என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?
தொல்காப்பியம்
- “தமிழன் கிளவியும் அதனோரற்றே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம்
- தமிழ்நாடு என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?
வஞ்சிக்காண்டம் ,சிலப்பதிகாரம்
- “இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சிலப்பதிகாரம்
- தமிழன் எனும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?
அப்பர் தேவாரம்
- ஒழுங்கு முறையை குறிக்கும் சொல் எது?
சீர்மை
- திணைகள் எத்தனை வகை?
இரண்டு: உயர்திணை அஃறிணை
- மா என்ற சொல்லின் பொருள் என்ன?
மரம், விலங்கு, பெரிய ,திருமகள், அழகு, அறிவு, அளவு ,அழைத்தல் ,துகள், மேன்மை, வயல், வண்டு
- எண்ணத்தை வெளிப்படுத்தும் தமிழ் எது?
இயல் தமிழ்
- உள்ளத்தை மகிழ்விக்கும் தமிழ் எது?
இசைத்தமிழ்
- உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும் தமிழ் எது?
நாடகத்தமிழ்
- ஆல், அரசு ,மா ,பலா, வாழை ஆகியவற்றின் இலைப் பெயர் என்ன?
இலை
- அகத்தி, பசலை, முருங்கை முதலியவற்றின் தாவர இலை பெயரென்ன?
கீரை
- அருகு ,கோரை முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
புல்
- நெல், வரகு முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
தாள்
- மல்லி முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
தழை
- சப்பாத்தி கள்ளி,தாழை முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
மடல்
- கரும்பு, நாணல் முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
தோகை
- பனை,தென்னை முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
ஓலை
- கமுகு முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
கூந்தல்
- 1 தமிழ் எண்?
௧
- 2 தமிழ் எண்?
௨
- 3 தமிழ் எண்?
௩
- 4 தமிழ் எண்?
௪
- 5 தமிழ் எண்?
௫
- 6 தமிழ் எண்?
௬
- 7 தமிழ் எண்?
௭
- 8 தமிழ் எண்?
௮
- 9 தமிழ் எண்
௯
- வேளாண்மை என்னும் சொல் இடம் பெற்ற நூல் எது?
கலித்தொகை 101 ,திருக்குறள் 81
- உழவர் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
நற்றிணை 4
- பாம்பு என்னும் சொல் இடம் பெற்ற நூல்?
குறுந்தொகை 239
- வெள்ளம் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
பதிற்றுப்பத்து 15
- முதலை எனும் சொல் இடம்பெற்ற நூல்?
குறுந்தொகை 324
- கோடை எனும் சொல் இடம் பெற்ற நூல்?
அகநானூறு 42
- உலகம் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம் கிளவியாக்கம் 56 ,திருமுருகாற்றுப்படை 1
- மருந்து எனும் சொல் இடம் பெற்ற நூல்?
அகநானூறு 147 திருக்குறள் 952
- ஊர் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம் ,அகத்திணையியல் 41
- அன்பு எனும் சொல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம் களவியல் 110 திருக்குறள் 4
- உயிர் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம் ,கிளவியாக்கம் 56 திருக்குறள் 955
- மகிழ்ச்சி எனும் சொல் இடம்பெற்ற நூல்?
தொல்காப்பியம் கற்பியல் 142 திருக்குறள் 531
- மீன் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
குறுந்தொகை 54
- புகழ் எனும் சொல் இடம்பெற்ற நூல்?
தொல்காப்பியம் வேற்றுமையியல் 71
- அரசு எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
திருக்குறள் 554
- செய் எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
குறுந்தொகை 72
- செல் எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
தொல்காப்பியம் 75 புறத்திணையியல்
- பார் எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
பெரும்பாணாற்றுப்படை 435
- ஒழி எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
தொல்காப்பியம் கிளவியாக்கம் 48
- முடி எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
தொல்காப்பியம் வினையியல் 206
- ” அன்பு வேண்டும், அறிவு வேண்டும், பண்பு வேண்டும் ,அறிவு வேண்டும்” என பிறந்தநாள் வாழ்த்து பாடியவர் யார்?
கவிஞர் அறிவுமதி
- உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்திக் கூறியுள்ளவர்?
தொல்காப்பியர்
- கடல் நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப் பொழியும் என்ற செய்தியை எந்த பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன?
முல்லைப்பாட்டு, பரிபாடல் ,திருக்குறள் ,கார்நாற்பது, திருப்பாவை
- “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி” இப்பாடல் யாரால் இயற்றப்பட்டது?
அவ்வையார்
- வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
பதிற்றுப்பத்து
- சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் காணப்படுகிறது?
நற்றிணை
- “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” இவ்வரிகளை இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியர்
- “கடல் நீர் முகந்த கமஞ்சூல் எழிலி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
கார் நாற்பது
- “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பதிற்றுப்பத்து
- “கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
நற்றிணை
- தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என எந்த அறிவியல் அறிஞர் கூறினார்?
கலிலியோ
- “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
திருவள்ளுவமாலை
- “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” இவ்வரிகளை இயற்றியவர்?
கபிலர்
- நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும் மழையின் பயனையும் கூறும் நூல் எது?
சிலப்பதிகாரம்
- “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சிலப்பதிகாரம் ஆசிரியர்- இளங்கோவடிகள்
- “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சிலப்பதிகாரம் ஆசிரியர்- இளங்கோவடிகள்
- “மாமழைப் போற்றுதும் மாமழைப் போற்றுதும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சிலப்பதிகாரம் ஆசிரியர்- இளங்கோவடிகள்
- சிலப்பதிகாரம் காப்பியத்தை இயற்றியவர் யார்?
இளங்கோவடிகள்
- இளங்கோவடிகள் எந்த மன்னர் மரபைச் சார்ந்தவர்?
சேரமன்னர்
- இளங்கோவடிகளின் காலம் என்ன?
கிபி 2 ஆம் நூற்றாண்டு
- தமிழின் முதல் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்
- சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
முத்தமிழ் காப்பியம் ,குடிமக்கள் காப்பியம்
- எந்த இரு நூல்கள் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன?
சிலப்பதிகாரம், மணிமேகலை
- “முத்துச்சுடர் போலே நிலாவொளி முன்பு வரவேணும் அங்கு கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும் “இவ்வரிகளை எழுதியவர்?
பாரதியார்
- பாரதியாரின் இயற்பெயர் என்ன?
சுப்பிரமணியன்
- பாரதியார் யாரால் பாரதி எனும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்?
எட்டயபுர மன்னர்
- பாரதியார் இயற்றிய நூல்கள் என்னென்ன ?
பாஞ்சாலி சபதம் ,கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
- காணி நிலம் எனும் பாரதியாரின் கவிதை எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
பாரதியார் கவிதைகள்
- பறவைகள் இடம்பெயர்தலுக்கு என்ன பெயர்?
வலசை போதல்
- எந்த காரணத்திற்காக பறவைகள் இடம் பெயர்கின்றன?
உணவு, இருப்பிடம் ,தட்பவெட்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்
- எதை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன?
நிலவு, விண்மீன் ,புவியீர்ப்பு பலம்
- பொதுவாக பறவைகள் எந்த திசையிலிருந்து வலசை போகின்றன?
வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் ,மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும்
- வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
தலையில் சிறகு வளர்தல், சிறகுகளின் நிறம் மாறுதல், உடலில் கற்றையாக முடி வளர்தல்
- சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை எது?
கப்பல் பறவை
- கப்பல் பறவைக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்னென்ன?
கப்பல் கூழைக்கடா ,கடற்கொள்ளை பறவை
- கப்பல் பறவை தரை இறங்காமல் எத்தனை கிலோமீட்டர் வரை பறக்கும்?
400 கிலோமீட்டர்
- “நாராய் நாராய் செங்கால் நாராய்” எனும் பாடலை எழுதியவர் யார்?
சத்திமுத்தப் புலவர்
- “தென்திசைக் குமரியாடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” இவ்வரிகள் என்ன செய்தியை குறிப்பிடுகின்றன?
பறவைகள் வலசை வந்த செய்தி
- செங்கால் நாரைகள் எந்த நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருகின்றன?
ஐரோப்பா
- ஆண் சிட்டுக்குருவியின் தொண்டை பகுதி என்ன நிறத்தில் இருக்கும்?
கறுப்பு
- சிட்டுக்குருவியின் உடல் என்ன நிறத்தில் இருக்கும்?
பழுப்பு நிறம்
- சிட்டுக்குருவியின் அடைகாக்கும் காலம் எவ்வளவு?
14 நாட்கள்
- சிட்டுக்குருவியின் வாழ்நாள் எத்தனை ஆண்டுகள்?
10 முதல் 13 ஆண்டுகள்
- காக்கை குருவி எங்கள் ஜாதி என பாடியவர் யார்?
பாரதியார்
- இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
டாக்டர் சலீம் அலி
- டாக்டர் சலீம் அலி எழுதிய தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு என்ன பெயரிட்டுள்ளார்?
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
- “மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும் பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது” எனக் கூறியவர்?
பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி
- உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை இனம் எது?
ஆர்டிக் ஆலா (22,000)
- பறவை பற்றிய படிப்புக்கு என்ன பெயர்?
ஆர்னித்தாலஜி
- உலக சிட்டுக்குருவிகள் நாள் எப்போது?
மார்ச் 20
- “The old man and the sea” கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?
1954
- “The old man and the sea” கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினத்தை எழுதியவர் யார்?
எர்னெஸ்ட் ஹெமிங்வே
- “The old man and the sea” கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினத்தின் கதைநாயகன் யார்?
சாண்டியாகோ
- தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?
நெல்லை சு முத்து
- நெல்லை சு.முத்து எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்?
80
- “வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் ” என கூறியவர் யார்?
மகாகவி பாரதியார்
- ரோபோ என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார்?
காரெல் கபெக்(1920)
- காரெல் கபெக் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
செக் நாடு
- “இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம் ஆனால் மனிதர்களைப் போல செயல்களை நிறைவேற்றும்” என தானியியங்கிகளுக்கு விளக்கம் தந்தது எது?
பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்
- எந்த ஆண்டு உலக சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் மீத்திறன் கணினியுடன் சதுரங்கப் போட்டியில் போட்டியிட்டார்?
1997
- ஐபிஎம் எனும் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணினி என்ன?
டீப் புளூ
- உலகிலேயே முதன் முதலாக ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ள நாடு எது?
சவுதி அரேபியா
- சோபியா ரோபோவுக்கு புதுமைகளின் வெற்றியாளர் எனும் பட்டத்தை எது வழங்கியது?
ஐக்கிய நாடுகள் சபை
- விளக்குகள் பல தந்த ஒளி (lights from many lamps) என்னும் நூலை எழுதியவர் யார்?
லிலியன் வாட்சன்
- போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக செயற்கை கால்களை அப்துல்கலாம் கார்பன் இழையை கொண்டு எவ்வளவு கிராம் எடையில் உருவாக்கினார்?
300 கிராம்
- எப்போது ராமன் விளைவு என்னும் தனது கண்டுபிடிப்பை சர்.சி.வி ராமன் வெளியிட்டார் ?
பிப்ரவரி 28 1928
- இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசு யாரால் பெற்றுத்தரப்பட்டது?
சர்.சி.வி ராமன்
- தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28
- “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
மூதுரை
- மூதுரை நூலின் ஆசிரியர் யார்?
ஔவையார்
- ஔவையார் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?
ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் ,நல்வழி
- மூதுரை என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
மூத்தோர் கூறும் அறிவுரை
- மூதுரை எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
31 பாடல்கள்
- “வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ன சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?
மக்கள் கவிஞர்
- காமராஜரின் சிறப்பு பெயர்கள் என்னென்ன?
பெருந்தலைவர் ,கருப்பு காந்தி ,படிக்காத மேதை, ஏழை பங்காளர், கர்ம வீரர், தலைவர்களை உருவாக்குபவர்
- கல்விக்கண் திறந்தவர் என யாரால் காமராசர் பாராட்டப்பட்டார்?
பெரியார்
- எந்த பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது?
மதுரை
- காமராஜருக்கு நடுவண் அரசு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது?
1976
- காமராசருக்கு எங்கு சிலை நிறுவப்பட்டது?
சென்னை மெரினா கடற்கரை
- எந்த உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
சென்னை
- காமராஜருக்கு எங்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது?
கன்னியாகுமரி(02.10.2000)
- ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?
சீனா
- ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எது?
அண்ணா நூற்றாண்டு நூலகம்
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு என்ன?
8 ஏக்கர்
- இந்திய நூலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
இரா.அரங்கநாதன்
- சிறந்த நூலகர்ளுக்கு என்ன விருது வழங்கப்படுகிறது?
டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் விருது
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பார்வை திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு எது?தரைத்தளம்
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சொந்த நூல் படிப்பகம் பிரிவு எது?தரைத்தளம்
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் அமைந்துள்ள பிரிவு எது?முதல் தளம்
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் எவ்வளவு குறுந்தகடுகள் சேகரித்து வைக்கபட்டுள்ளன?
20,000 மேற்பட்ட
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் எவ்வளவு பிற நாடுகளில் இருந்து திரட்டபாட்ட நூல்கள் சேகரித்து வைக்கபட்டுள்ளன?
50,000 மேற்பட்ட
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?
இரண்டாம் தளம்
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணினி அறிவியல்,தத்துவம் ,அரசியல் நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?
மூன்றாம் தளம்
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொருளியல் ,சட்டம்,வணிகவியல்,கல்வி நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?
நான்காம் தளம்
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணிதம் ,அறிவியல்,மருத்துவம் நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?
ஐந்தாம் தளம்
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொறியியல்,வேயாண்மை,திரைப்படக்கலை நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?
ஆறாம் தளம்
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரலாறு ,சுற்றுலா நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?
ஏழாம் தளம்
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசு கீழ்திசை சுவடிகள் நூலகம் அமைந்துள்ள பிரிவு எது ?
ஏழாம் தளம்
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கல்வி தொலைகாட்சி,நூலகத்தின் அலுவலக பிரிவு அமைந்துள்ள தளம் எது ?
எட்டாம் தளம்
- “நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
பெருவாயின் முள்ளியார்
- “ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
ஆசாரக்கோவை
- ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார்?
பெருவாயின் முள்ளியார்
- பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?
கயத்தூர்
- ஆசாரக்கோவை என்பதற்கு என்ன பொருள்?
நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
- ஆசாரக்கோவை எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
நூறு வெண்பாக்கள்
- கதிரவனுக்கு நன்றி கூறி சிறப்பு செய்யும் விழா என்ன?
பொங்கல் விழா
- வாழ்க்கைக்கு வளம் தரும் மழை கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை என்ன விழாவாக கொண்டாடப்பட்டது?
இந்திரவிழா
- எந்த நாளில் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது?
தை முதல் நாள்
- எப்போது திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது?
தை இரண்டாம் நாள்
- ஏறுதழுவுதல் வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
மாடு பிடித்தல், ஜல்லிக்கட்டு ,மஞ்சுவிரட்டு
- அறுவடைத் திருநாள் எந்த மாநிலங்களில் மகர சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது?
ஆந்திரா, கர்நாடகா ,மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம்
- அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் என்னவாக கொண்டாடப்படுகிறது?
லோரி
- அறுவடைத் திருநாள் குஜராத் ராஜஸ்தான் மாநிலங்களில் என்னவாக கொண்டாடப்படுகிறது?
உத்தராயன்
- மாமல்லன் என அழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?
நரசிம்மவர்மன்
- நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவன்?
ஏழாம் நூற்றாண்டு
- சிற்பக்கலை எத்தனை வகைப்படும் ?
நான்கு வகைப்படும்: குடைவரைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள் ,புடைப்புச் சிற்பங்கள்
- நான்கு வகையான சிற்பக்கலைகளும் காணப்படும் ஒரே இடம் எது?
மாமல்லபுரம்
- “அஞ்சாமை மிக்கவன் தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவது அஞ்சி அகற்றிடுவான் ” இவ்வரிகளை இயற்றியவர்?
முடியரசன்
- முடியரசனின் இயற்பெயர் என்ன?
துரைராசு
- முடியரசன் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?
பூங்கொடி, வீரகாவியம் ,காவியப்பாவை, புதியதொரு விதி செய்வோம்
- திராவிட நாட்டின் வானம்பாடி எனப் பாராட்டப்பட்டவர் யார்?
முடியரசன்
- “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” எனக் கூறியவர் யார்?
பாரதியார்
- “கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” எனக் கூறியவர் யார் ?
பாரதியார்
- நாட்டுப்புற இயல் ஆய்வு எனும் நூலைத் தொகுத்தவர் யார்?
சு. சக்திவேல்
- “தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளை சுற்றி …உமணர் போகலும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
நற்றிணை
- “பாலொடு வந்து கூழொடு பெயரும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
குறுந்தொகை
- “பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
அகநானூறு
- துறைமுக நகரங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன?
பட்டினம் ,பாக்கம்
- வணிகத்தை எவ்வாறு பிரிக்கலாம்?
தரை வழி வணிகம் ,நீர் வழி வணிகம்
- வணிகர்கள் வெளியூருக்கு செல்லும் போது குழுவாகவே செல்வார்கள் இந்த குழு எவ்வாறு அழைக்கப்படும்?
வணிகச்சாத்து
- தமிழ்நாட்டிலிருந்து பழங்காலத்தில் என்ன பொருட்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன?
தேக்கு ,மயில்தோகை ,அரிசி, சந்தனம் ,இஞ்சி ,மிளகு
- சீனத்திலிருந்து என்ன பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன?
கண்ணாடி ,கற்பூரம் ,பட்டு
- குதிரைகள் எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன?
அரேபியா
- “நடுவு நின்று நன்னெஞ்சினோர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பட்டினப்பாலை
- “கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பட்டினப்பாலை
- “பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர்” என்பது யாருடைய அறிவுரை?
ஔவையார்
- “புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசலிது” இவ்வரிகளை எழுதியவர்?
தாராபாரதி
- தாராபாரதியின் இயற்பெயர் என்ன?
இராதாகிருஷ்ணன்
- தாராபாரதி எவ்வாறு புகழப்படுகிறார்?
கவிஞாயிறு
- தாராபாரதி இயற்றிய நூல்கள் என்னென்ன?
புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு விரல்நுனி வெளிச்சங்கள்
- பாரதம் அன்றைய நாற்றங்கால் எனும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
தாராபாரதியின் கவிதைகள்
- காந்தியடிகள் எப்போது சென்னைக்கு வந்தார்?
1919 ,பிப்ரவரி மாதம்
- எப்போது காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த போது தன் வாழ்நாள் முழுவதும் எளிமை திருக்கோலம் தரிக்க காரணமாக அமைந்தது?
செப்டம்பர்,1921
- எங்கு வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழியை கற்கத் தொடங்கியதாக காந்தியடிகள் கூறியுள்ளார்?
தென்னாப்பிரிக்கா
- காந்தியடிகள் யார் எழுதிய தமிழ் கையேடு தம்மை கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்?
ஜி யு போப்
- காந்தியடிகள் யாருடைய உரையைக் கேட்டு இந்த பெரியவரின் அடி நிழலிலிருந்து தமிழ் கற்க வேண்டும் எனும் ஆவல் உண்டாகிறது எனக் கூறினார்?
உ.வே.சாமிநாதர்
- ராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் யார்?
வேலுநாச்சியார்
- எங்கு நடந்த போரில் முத்துவடுகநாதர் ஆங்கில படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்?
காளையார்கோவில்
- வேலு நாச்சியாரின் ஆண்கள் படைப் பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார்?
மருது சகோதரர்கள்
- வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவு தலைமை ஏற்றவர் யார்?
குயிலி
- வேலுநாச்சியாரை காட்டி கொடுக்க கூறி மறுத்ததால் ஆங்கிலேயர்கள் கொன்ற பெண் யார்?
உடையாள்
- “அன்பர்பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானேவந்தெய்தும் பராபரமே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
பராபரக்கண்ணி
- “எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
தாயுமானவர்
- தாயுமானவர் திருச்சியை ஆண்ட எந்த மன்னரிடம் தலைமைக் கணக்கராக பணிபுரிந்தார்?
விசயரகுநாத சொக்கலிங்கர்
- தமிழ்மொழியின் உபநிடதம் என அழைக்கப்படுவது எது?
தாயுமானவர் பாடல்கள்
- இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகையின் பெயர் என்ன ?
கண்ணி
- கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
லெபனான்
- தீர்க்கதரிசி என மொழிபெயர்ப்பு நூல் யாரால் இயற்றப்பட்டது?
புவியரசு
- மணிபல்லவத் தீவில் இருக்கும் எந்த பொய்கையில் இருந்து அட்சய பாத்திரம் தோன்றியது?
கோமுகி
- அட்சய பாத்திரம் எந்த நாளில் தோன்றும்?
வைகாசித் திங்கள் முழுநிலவு நாள்
- எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய நூல்கள் என்னென்ன?
உபபாண்டவம் ,கதாவிலாசம் ,தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் ,தாவரங்களின் உரையாடல்
- “தீயவும் நல்லவும் செய்தவரை விட்டு செல்வது ஒரு நாளும் இல்லைஐயா” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
கவிமணி தேசிக விநாயகனார்
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
36 ஆண்டுகள்
- ஆசிய ஜோதி எந்த நூலைத் தழுவி கவிமணியால் எழுதப்பட்டது?
லைட் ஆஃப் ஆசியா
- லைட் ஆஃப் ஆசியா (Light of asia) எனும் நூலை எழுதியவர் யார்?
எட்வின் அர்னால்டு
- “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என கூறியவர் யார்?
வள்ளலார்
- “வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை” எனக் கூறியவர் யார்?
அன்னை தெரசா
- பள்ளி செல்லா குழந்தைகளுக்காக “குழந்தைகளை பாதுகாப்போம் “என்னும் இயக்கத்தை தொடங்கியவர் யார்?
கைலாஷ் சத்யார்த்தி
- “குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம் உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள்” கூறியவர்?
கைலாஷ் சத்யார்த்தி