DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
தமிழ் எழுத்துக்களின் வகை தொகை
- தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?
5
- தமிழ்மொழியின் இலக்கண வகைகள் என்னென்ன?
எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம் ,பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்
- ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எவ்வாறு அழைக்கப்படும்?
எழுத்து
- இயல்பாகக் காற்று வெளிப்படும் போது என்ன எழுத்துகள் பிறக்கின்றன?
உயிர் எழுத்துக்கள்
- உயிர் எழுத்துக்கள் எத்தனை?
பன்னிரண்டு
- உயிரெழுத்துகளில் குறில் எழுத்துக்கள் எத்தனை? அவை என்னென்ன?
ஐந்து : அ,இ,உ,எ,ஒ
- உயிர் எழுத்துக்களில் நெடில் எழுத்துக்கள் எத்தனை? அவை என்னென்ன?
ஏழு : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ
- ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாத்திரை
- குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு?
ஒரு மாத்திரை
- நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு?
- மாத்திரை
- மெய் என்பதன் பொருள் என்ன?
உடம்பு
- இந்த எழுத்துக்களை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது?
மெய்யெழுத்துக்கள்
- மெய் எழுத்துக்கள் எத்தனை?
18
- மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று
- மெய் எழுத்துக்களின் வகைகள் என்னென்ன?
வல்லினம் ,மெல்லினம், இடையினம்
- வல்லின எழுத்துக்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
வலி, வன்மை, வன்கணம்
- வல்லின எழுத்துக்கள் என்னென்ன?
க்,ச்,ட்,த்,ப்,ற்
- வல்லினம் பெயர் காரணம் என்ன?
வலிய ஓசை உடையவையாதலும்,வல்லென்று இசைப்பதாலும், வல் என்ற தலைவளியால் பிறப்பதாலும் வல்லெழுத்து எனப்பட்டது
- மெல்லின எழுத்துக்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
மெலி, மென்மை, மென்கணம்
- மெல்லின எழுத்துக்கள் என்னென்ன?
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
- மெல்லினம் பெயர் காரணம் என்ன?
மெலிய ஓசை உடையவையாதலும்,மெல்லென்று இசைப்பதாலும் மெல் என்ற மூக்கின் வளியால் பிறப்பதாலும் மெல்லெழுத்து எனப்பட்டது
- இடையின எழுத்துக்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
இடை, இடைமை, இடைக்கணம்
- மெல்லின எழுத்துக்கள் என்னென்ன?
ய், ர், ல், வ், ழ், ள்
- மெல்லினம் பெயர் காரணம் என்ன?
வல்லினம் பிறக்கும் இடமான மார்புக்கும் மெல்லினம் பிறக்கும் இடமான மூக்கிற்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் இருந்து பிறப்பதாலும்,இடைநிகரவாகி ஒலித்தலாலும், இடை நிகர்த்தாய மிடற்று வளியால் பிறத்தலானும் இடையெழுத்து எனப்பட்டது
- மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு என்ன?
அரை மாத்திரை
- வன்மையாக ஒலிக்கும் எழுத்துக்கள் என்னென்ன?
க்,ச்,ட்,த்,ப்,ற்
- மென்மையாக ஒலிக்கும் எழுத்துக்கள் என்னென்ன?
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
- வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இடைப்பட்டு ஒலிக்கும் எழுத்துக்கள் என்னென்ன?
ய், ர், ல், வ், ழ், ள்
- எந்த இரண்டு எழுத்துக்கள் சேர்வதால் உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன?
மெய் எழுத்துக்கள் மற்றும் உயிர் எழுத்துக்கள்
- மெய்யுடன் உயிர்க்குறில் சேர்வதால் தோன்றும் எழுத்து?
உயிர்மெய் குறில்
- மெய்யுடன் உயிர்நெடில் சேர்வதால் தோன்றும் எழுத்து?
உயிர்மெய் நெடில்
- உயிர்மெய் எழுத்துக்களை எத்தனை வகைப்படும்? அவை என்னென்ன?
இரண்டு :உயிர்மெய் குறில், உயிர்மெய் நெடில்
- ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு?
அரை மாத்திரை
முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? அவை என்னென்ன?இரண்டு வகை: முதலெழுத்து ,சார்பெழுத்து
- முதலெழுத்துக்கள் எனப்படுபவை யாது?
உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்கள்
- முதல் எழுத்துக்கள் எத்தனை எழுத்துக்கள் உண்டு?
30 எழுத்துக்கள்
- சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
பத்து வகை
- சார்பெழுத்துகளின் வகைகள் என்னென்ன?
உயிர்மெய் ,ஆய்தம் ,உயிரளபெடை, ஒற்றளபெடை ,குற்றியலிகரம் ,குற்றியலுகரம் ,ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் ,ஆய்தக்குறுக்கம்
- மெய் எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உருவாகும் எழுத்துக்கள்?
உயிர்மெய் எழுத்துக்கள்
- உயிர்மெய் எழுத்தின் ஒலி வடிவம் எவ்வாறு இருக்கும்?
மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்
- உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் எதை ஒத்திருக்கும்?
மெய் எழுத்து
- உயிர்மெய் எழுத்தின் கால அளவு எந்த எழுத்தை ஒத்திருக்கும்?
உயிரெழுத்து
- மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது எந்த எழுத்து?
ஆய்தம்
- ஆய்த எழுத்திற்கு வழங்கும் வேறு பெயர்?
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை
- நுட்பமான ஒலிப்பு முறையை உடைய சார்பு எழுத்து எது?
ஆய்தம்
- ஆய்தம் சொல்லின் எங்கு மட்டுமே இடம்பெறும்?
சொல்லின் இடையில் மட்டும்
- ஆய்த எழுத்திற்கு முன்னும் பின்னும் வரும் எழுத்துக்கள் எது?
தனக்கு முன் ஒரு குறில் எழுத்து ,தனக்கு பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்து
மயங்கொலிகள்
- சில எழுத்துக்களைக் இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இன எழுத்துக்கள்
- மெல்லின மெய் எழுத்தை அடுத்து பெரும்பாலும் அதன் இனமாகிய எந்த எழுத்து வரும்?
வல்லின எழுத்து
- வல்லின எழுத்துகளுக்கு இன எழுத்துக்கள் எவை?
மெல்லின எழுத்துக்கள்
- உயிர் எழுத்துக்களில் குறிலுக்கும் நெடிலுக்கும் இன எழுத்துக்கள் எவை?
குறிலுக்கு நெடிலும்,நெடிலுக்கு குறிலும்
- ஐ என்னும் எழுத்துக்கு இன எழுத்து எது?
இ
- ஔ என்னும் எழுத்துக்கு என்ன எழுத்து இன எழுத்து?
உ
- சொல்லில் எந்த எழுத்துக்கள் சேர்ந்து வருவது இல்லை?
உயிர் எழுத்துக்கள்
- எதில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்?
அளபெடை இன எழுத்துக்கள்
- உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை எவ்வாறு அழைக்கின்றோம்?
மயங்கொலிகள்
- மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை உண்டு?
8
- மயங்கொலி எழுத்துக்கள் என்னென்ன?
ண,ன,ந,ல,ள,ழ,ர,ற
- நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியை தொடுவதால் எந்த எழுத்து பிறக்கிறது?
ண
- நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன்பகுதியை தொடுவதால் எந்த எழுத்து பிறக்கிறது?
ன
- நாவின் நுனி மேல்வாய் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் எந்த எழுத்து பிறக்கிறது?
ந
- ண’கரம் எவ்வாறு அழைக்கப்படும்?
டண்ணகரம்
- ந’கரம் எவ்வாறு அழைக்கப்படும்?
தந்நகரம்
- ன’கரம் எவ்வாறு அழைக்கப்படும்?
றன்னகரம்
- நாவின் இரு பக்கங்களும் தடித்து மேல் பற்களின் அடியைப் தொடுவதால் உருவாகும் எழுத்து?
லகரம்
- நாவின் இரு பக்கங்களும் தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் உருவாகும் எழுத்து?
ளகரம்
- ளகரம் எவ்வாறு அழைக்கப்படும்?
பொது ளகரம்
- நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து வருடுவதால் எந்த எழுத்து தோன்றும்?
ழ’கரம்
- ழ’கரம் எவ்வாறு அழைக்கப்படும்?
சிறப்பு ழகரம் சுட்டெழுத்துக்கள்
- ஒன்றை சுட்டிக் காட்ட வரும் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
சுட்டெழுத்துக்கள்
- சுட்டெழுத்துக்கள் என்னென்ன?
அ,இ,உ
- சுட்டெழுத்துக்களில் இன்று வழக்கில் இல்லாத எழுத்து எது?
உ
- சொற்களில் உள்ள சுட்டு எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தருவதில்லை இது எவ்வாறு அழைக்கப்படும்?
அகச்சுட்டு
- சொற்களில் உள்ள சுட்டு எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தரும் இது எவ்வாறு அழைக்கப்படும்?
புறச்சுட்டு
- நம் அருகில் உள்ளவற்றை சுட்டும் எழுத்துக்கள்?
அண்மைச்சுட்டு
- அண்மைச்சுட்டு எழுத்து என்ன?
இ
- தொலைவில் உள்ளவற்றை சுட்டும் எழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?
சேய்மைச் சுட்டு
- சேய்மைசுட்டு எழுத்து என்ன?
அ
- அருகிலுள்ளவற்றிற்கும் தொலைவிலுள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதை சுட்டிக்காட்ட என்ன சுட்டெழுத்து பயன்படுத்தப்பட்டது?
உ
- அ,இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
சுட்டுத் திரிபு
வினா எழுத்துக்கள்
- வினாப் பொருளைத் தரும் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும்? வினா எழுத்துக்கள்
- வினா எழுத்துக்கள் எத்தனை? அவை என்னென்ன?
ஐந்து : எ,யா,ஆ,ஓ,ஏ
- மொழியின் முதலில் வரும் வினா எழுத்து எவை?
எ,யா
- மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்து எவை?
ஆ,ஓ
- மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?
ஏ
- வினா எழுத்துக்கள் சொல்லி அகத்தை இருந்து வினாப் பொருளைத் தருமானால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
அகவினா
- சொற்களில் உள்ள வினா எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்களுக்கு பொருள் இல்லை. இது எந்த வகை வினா?
அகவினா
- வினா எழுத்துகள் சொல்லின் புறத்தை வந்து வினாப் பொருளைத் தருமானால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
புறவினா
- சொற்களில் உள்ள வினா எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தரும். இது எந்த வகை வினா?
புறவினா
நால்வகைச் சொற்கள்
- ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள்தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
சொல்
- இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
4
- இலக்கண அடிப்படையில் வகைப்படுத்தப்படும் சொற்கள் என்னென்ன?
பெயர்ச்சொல், வினைச்சொல் ,இடைச்சொல் ,உரிச்சொல்
- ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
பெயர்ச்சொல்
- வினை எனும் சொல்லுக்கு என்ன பொருள்?
செயல்
- ஒரு செயலைக் குறிக்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
வினைச்சொல்
- பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
இடைச்சொல்
- பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதி படுத்த வருவது எது?
உரிச்சொல் இடுகுறிப்பெயர்,காரணப்பெயர்
- பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
ஆறு வகைப்படும்
- பெயர்ச்சொல் வகைகள் என்னென்ன?
பொருட்பெயர் ,இடப்பெயர், காலப்பெயர் ,சினைப்பெயர் ,பண்புப்பெயர், தொழிற்பெயர்
- பொருளைக் குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
பொருட்பெயர்
- ஓர் இடத்தின் பெயரை குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
இடப்பெயர்
- காலத்தைக் குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
காலப்பெயர்
- பொருளின் உறுப்பை குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
சினைப்பெயர்
- பொருளின் பண்பை குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
பண்புப்பெயர்
- தொழிலைக் குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
தொழிற்பெயர் பெயர்ச்சொல்
- யர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் எத்தனை வகையாக வகைப்படுத்தலாம்?
அவை என்னென்ன? இரண்டு வகை : இடுகுறிப்பெயர் ,காரணப்பெயர்
- சில பொருள்களுக்கு காரணம் கருதாமல் சில பெயர்களை இட்டு வழங்கினர் அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இடுகுறிப்பெயர்
- இடுகுறிப்பெயர் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன?
இரண்டு வகை : இடுகுறிப் பொதுப்பெயர் ,இடுகுறி சிறப்பு பெயர்
- நம் முன்னோர்கள் காரணம் ஏதுமின்றி பொதுத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கிய பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
இடுகுறிப் பொதுப்பெயர்
- நம் முன்னோர் காரணம் ஏதுமின்றி சிறப்புத்தன்மை கருதி ஒன்றனுக்கோ அல்லது ஓர் இனத்திற்கோ இட்டு வழங்கிய பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
இடுகுறி சிறப்பு பெயர்
- காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
காரணப்பெயர்
- காரணப்பெயர் எத்தனை வகைப்படும்? அவை என்னென்ன?
இரண்டு : காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்புப் பெயர்
- குறிப்பிட்ட காரணம் உடைய எல்லா வகை பொருட்களையும் பொதுவாக குறித்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
காரணப் பொதுப்பெயர்
- குறிப்பிட்ட காரணம் உடைய எல்லா வகை பொருள்களில் ஒன்றை மட்டும் சிறப்பாக குறிப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
காரணச் சிறப்புப் பெயர்
- அணி என்பதற்கு என்ன பொருள்?
அழகு
- ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது எந்த அணி?
இயல்பு நவிற்சி அணி
- இயல்பு நவிற்சி அணி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
தன்மை நவிற்சி அணி
- ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது எது?
உயர்வு நவிற்சி அணி