DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
குற்றியலுகரம் குற்றியலிகரம்
- தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
இரண்டு: முதல் எழுத்துக்கள், சார்பெழுத்துக்கள்
- முதல் எழுத்துக்கள் என அழைக்கப்படுபவை எவை?
உயிர் எழுத்து 12 ,மெய்யெழுத்து 18 ஆகிய முப்பது எழுத்துக்கள்
- சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
பத்து
- சார்பெழுத்துகளின் வகைகள் என்னென்ன?
உயிர்மெய், ஆய்தம் ,உயிரளபெடை ,ஒற்றளபெடை, குற்றியலுகரம் ,குற்றியலிகரம் ,ஐகாரக்குறுக்கம் ,ஒளகாரக்குறுக்கம் ,மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்
- தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குற்றியலுகரம்
- குற்றியலுகரத்தில் என்ன எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வரும் போது ஒரு மாத்திரைக்கு பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும்?
வல்லின உகரம் கு,சு,டு,து,பு,று
- எந்த எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரம் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்?
தனி குறில் எழுத்து
- வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முற்றியலுகரம்
- தமிழில் எழுத்துக்களை குறிப்பிடுவதற்கு என்ன அசைச்சொற்கள் பயன்படுத்தப்படுகிறது?
கரம்,கான், காரம்,கேனம்
- குறில் எழுத்துகளை குறிக்க என்ன அசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது?
கரம்
- நெடில் எழுத்துகளை குறிக்க என்ன அசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது?
கான்
- குறில்,நெடில் எழுத்துகளை குறிக்க என்ன அசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது?
காரம்
- ஆய்த எழுத்தைக் குறிக்க என்ன அசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது?
கேனம்
- குற்றியலுகரத்தின் வகைகள் எத்தனை?
ஆறு
- குற்றியலுகரத்தின் வகைகள் என்னென்ன?
நெடில் தொடர் குற்றியலுகரம், ஆய்த தொடர் குற்றியலுகரம், உயிர் தொடர் குற்றியலுகரம், வன்தொடர் குற்றியலுகரம், மென்தொடர்க் குற்றியலுகரம், இடைத்தொடர் குற்றியலுகரம்
- தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நெடில் தொடர் குற்றியலுகரம்
- நெடில் தொடர் குற்றியலுகரம் எத்தனை சொற்களாக மட்டுமே அமையும்?
ஈரெழுத்து சொற்கள்
- ஆய்த எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படும்?
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
- தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உயிர்த்தொடர் குற்றியலுகரம்
- வல்லின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வன் தொடர்க் குற்றியலுகரம்
- மெல்லின மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மென்தொடர்க் குற்றியலுகரம்
- இடையின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இடைத்தொடர் குற்றியலுகரம்
- எந்த எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் சொற்கள் இல்லை?
வ்
- எந்த எழுத்துக்களை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை?
சு,டு,று
- தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
குற்றியலிகரம்
- குற்றியலுகரம் எத்தனை இடங்களில் மட்டும் வரும்?
இரண்டு : யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது மற்றும் மியா என்ற அசைச் சொல்
- சில எழுத்துக்கள் சில இடங்களில் தமக்குரிய கால அளவை விட குறைந்து ஒலிக்கும் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குறுக்கங்கள்
- ஐகார எழுத்து தனித்து வரும் இடங்களில் எந்த மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும்?
இரண்டு மாத்திரை
- ஐகார எழுத்து சொல்லின் எந்த இடங்களில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது?
சொல்லின் முதல் இடை இறுதி ஆகிய இடங்களில்
- ஐகாரம் சொல்லின் முதலில் வரும் பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும் ?
ஒன்றரை மாத்திரை
- ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
ஒரு மாத்திரை
- ஔகார எழுத்து எப்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது?
தனித்து வரும் இடங்களில்
- ஔகாரம் சொற்களின் முதலில் வரும்பொழுது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து எவ்வளவாக குறைந்து ஒலிக்கிறது?
ஒன்றரை மாத்திரை
- ஔகாரம் சொல்லின் எங்கு இடம்பெறாது?
சொல்லின் இடையிலும் இறுதியிலும்
- மகர மெய் எழுத்தை அடுத்து எந்த எழுத்து வரும் போது மகரமானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்?
வ,ன்,ண்
- ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து எந்த மாத்திரை அளவில் ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் என அழைக்கப்படுகிறது?
கால் மாத்திரை
- ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
சொல்
- சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் என்னென்ன?
மொழி, பதம், கிழவி
- இலக்கண முறைப்படி சொல் எத்தனை வகைப்படும்?
நான்கு :பெயர்ச்சொல் ,வினைச்சொல் ,இடைச்சொல் ,உரிச்சொல்
- இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
நான்கு: இயற்சொல் ,திரிசொல் ,திசைச்சொல் ,வடசொல்
- எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இயற்சொற்கள்
- இயர் சொற்கள் எந்தெந்த இடங்களில் வரும்?
பெயர்இயற்சொற்கள், வினை இயற்சொற்கள், இடைஇயற்சொற்கள், உரி இயற்சொற்கள் என நான்கிலும்
- கற்றோருக்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருவதாகவும் அமையும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
திரி சொற்கள்
- திரிசொல் எந்தெந்த இடங்களில் வரும்?
நான்கு: பெயர் திரிசொல், வினைத் திரிசொல் ,இடைதிரிசொல், உரி திரிசொல்
- திரி சொற்கள் எத்தனை வகைப் படுத்தப்படுகிறது?
இரண்டு: ஒரு பொருள் குறித்த பல சொற்கள் ,பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
- வட மொழியை தவிர பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
திசைச்சொற்கள்
- வடமொழியிலிருந்து பந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
வடசொற்கள்
- வட சொற்களை எத்தனை வகையாகப் பிரிப்பர்?
இரண்டு: தற்சமம், தற்பவம்
- வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதற்கு என்ன பெயர்?
தற்சமம்
- தமிழ் எழுத்துக்களால் மாற்றி வடமொழி சொற்களை எழுதுவதற்கு என்ன பெயர் ?
தற்பவம்
- ஓர் எழுத்து பொருள் தரும் சொல்லாக அமைவதற்கு என்ன பெயர்?
ஓரெழுத்து ஒரு மொழி
- பவணந்தி முனிவர் தமிழில் எத்தனை ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிடுகிறார்?
42
- பவணந்தி முனிவர் குறிப்பிடும் 42 சொற்களில் எந்த இரண்டு சொற்களை தவிர ஏனைய 40 சொற்களும் நெடில் எழுத்துக்களாக அமைந்தவை?
நொ,து
- ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக:
ஆ-பசு
- ஈ -கொடு
- ஊ -இறைச்சி
- ஏ-அம்பு
- ஐ-தலைவன்
- ஓ-மதகு நீர் தாங்கும் பலகை
- கா- சோலை
- கூ -பூமி
- கை -ஒழுக்கம்
- கோ- அரசன்
- சா-இறந்து போ
- சீ- இகழ்ச்சி
- சே-உயர்வு
- சோ-மதில்
- தா-கொடு
- தீ-நெருப்பு
- தூ-தூய்மை
- தே-கடவுள்
- தை-தைத்தல்
- நா-நாவு
- நீ-முன்னிலை ஒருமை
- நே-அன்பு
- நை-இழிவு
- நோ-வறுமை
- பா-பாடல்
- பூ-மலர்
- பே-மேகம்
- பை-இளமை
- போ-செல்
- மா-மாமரம்
- மீ-வான்
- மூ-மூப்பு
- மே-அன்பு
- மை-அஞ்சனம்
- மோ-முகத்தல்
- யா-அகலம்
- வா-அழைத்தல்
- வீ-மலர்
- வை-புல்
- வௌ-கவர்
- நொ-நோய்
- து- உண்
- சிறு சிறு உறுப்புகளாக பிரிக்கும் வகையில் அமையும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
பகுபதம்
- பிரிக்கப்படும் உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
பகுபத உறுப்புகள்
- பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பெயர்ப்பகுபதம்
- பெயர்ப் பகுபதம் எத்தனை வகைப்படும்?
ஆறு:பொருள் ,இடம் ,காலம் ,சினை ,பண்பு ,தொழில்
- பகுபதமாக அமையும் வினைச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வினைப்பகுபதம்
- பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
ஆறு: பகுதி ,விகுதி ,இடைநிலை ,சந்தி ,சாரியை ,விகாரம்
- பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது எது?
பகுதி
- பகுதி எப்போதும் என்னவாகவே அமையும்?
கட்டளை
- பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை பால் ஆகியவற்றையோ முற்று எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது எது?
விகுதி
- பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இடைநிலை
- பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய் எழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?
சந்தி
- பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சாரியை
- பகுதி விகுதி சந்தி இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விகாரம்
- பகுபத உறுப்புகளாக பிரிக்க முடியாத சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
பகாப்பதம்
- பகாப்பதங்கள் எத்தனை வகை சொற்களில் இடம்பெறும்?
4: பெயர் வினை இடை உரி
- ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தொழிற்பெயர்
- தொழிற்பெயர் எவற்றை காட்டாது?
பால், எண் ,இடம் ,காலம்
- தொழிற்பெயரை எவ்வாறு வகைப்படுத்துவர் ?
விகுதி பெற்ற தொழிற்பெயர் ,முதனிலைத் தொழிற்பெயர் ,முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
- வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
விகுதி பெற்ற தொழிற்பெயர்
- தொழிற்பெயரின் விகுதிகள் என்னென்ன?
தல்,அல்,அம்,ஐ,கை,வை,கு,பு,வு,தி,சி,வி,மை
- ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை
எவ்வாறு அழைப்பர் ? முதனிலை
- எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற் பெயராக அமைவது எவ்வாறு அழைக்கப்படும்?
முதனிலைத் தொழிற்பெயர்
- முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- ஒரு செயலை சொல்லாலும் பொருளாலும் அழகு பெறச் செய்தல் எவ்வாறு அழைக்கப்படும்?
அணி
- ஒப்பிட்டு கூறப்படும் பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
உவமை அல்லது உவமானம்
- உவமையால் விளக்கப்படும் பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
உவமேயம்
- உவம உருபுகள் என்ன?
போல,போன்ற,புரைய,அன்ன,இன்ன,அற்று,இற்று,மான,கடுப்ப,ஒப்ப,உறழ,
- ஒரு பாடலில் உவமையும் உவமேயம் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
உவமையணி
- உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
எடுத்துக்காட்டு உவமையணி
- உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதற்கு என்ன பெயர்?
இல்பொருள் உவமை அணி
- உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது என்ன அணி?
உருவக அணி
- கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்று உருவகப்படுத்தாமல் விடுவதற்கு என்ன பெயர்?
ஏகதேச உருவக அணி
- எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வழக்கு
- நம் முன்னோர் எந்தெந்த சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதற்கு பெயர் என்ன?
வழக்கு
- வழக்கு எத்தனை வகைப்படும்?
இரண்டு வகை: இயல்பு வழக்கு ,தகுதி வழக்கு
- ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது என்ன வழக்கு?
இயல்பு வழக்கு
- இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
மூன்று :இலக்கணமுடையது ,இலக்கணப்போலி ,மரூஉ
- இலக்கணம் நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இலக்கணமுடையது
- இலக்கண முறைப்படி அமையாவிடினும் இலக்கணம் உடையவை போலவே ஏற்றுக்கொள்ளப்படும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இலக்கணப்போலி
- பெரும்பாலும் சொற்களின் முன் பின் பகுதிகள் இடம் மாறி வருவது எதைக் குறிக்கும்?
இலக்கணப்போலி
- இலக்கணப்போலி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
முன்பின்னாக தொக்க போலி
- இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
மரூஉ
- ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்ல தகுதியற்ற சொற்களை தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது எவ்வாறு அழைக்கப்படும்?
தகுதி வழக்கு
- தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?
மூன்று :இடக்கரடக்கல், மங்கலம் ,குழூஉக்குறி
- பிறரிடம் வெளிப்படையாக சொல்லத் தகாத சொற்களை தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது என்ன பெயர்?
இடக்கரடக்கல்
- மங்கலம் இல்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதற்கு என்ன பெயர்?
மங்கலம்
- ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலை குறிக்க தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
குழூஉக்குறி
- ஒரு சொல்லின் முதலிலோ இடையிலோ இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்கு பதிலாக வேறு ஒரு எழுத்து இடம்பெற்று அதே பொருளைத் தருவது எவ்வாறு அழைக்கப்படும் ?
போலி
- போலி எத்தனை வகைப்படும்?
மூன்று :முதற்போலி ,இடைப்போலி, கடைப்போலி
- சொற்களில் முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறாத சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
முதற்போலி
- சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து அமைந்து அதே பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இடைப்போலி
- சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்க்கு பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது அழைக்கப்படுகிறது?
கடைப்போலி
- அஃறிணை பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்துக்கு பதிலாக என்ன எழுத்து கடை போலியாக வரும்?
னகரம்
- லகர எழுத்திற்கு பதிலாக எந்த எழுத்து கடை போலியாக வரும்?
ரகரம்
- ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துக்களுக்குப் பதிலாக எழுத்துக்கள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பதற்கு என்ன பெயர்?
முற்றுப்போலி
- ஒன்றன் பெயர் அதனை குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றுக்கு ஆக்கி வருவதற்கு என்ன பெயர்?
ஆகுபெயர்
- பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகி வருவதற்கு என்ன பெயர்?
பொருளாகு பெயர்
- பொருளாகு பெயர் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
முதலாகுபெயர்
- ஒரு இடத்திற்கு ஆகி வரும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
இடவாகுபெயர்
- ஒரு காலத்திற்கு ஆகி வரும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
காலவாகு பெயர்
- சினையின் பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகி வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
சினையாகு பெயர்
- ஒரு பண்புக்கு ஆகி வரும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
பண்பாகு பெயர்
- ஒரு தொழிலுக்கு ஆகி வரும் பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தொழிலாகு பெயர்
- இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இரட்டைக்கிளவி
- அவலம்,உவகை,வெகுளி,அச்சம்,விரைவுச்,சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதற்கு என்ன பெயர்?
அடுக்குத்தொடர்