DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியம் எது?
கலித்தொகை, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை
- “எழுந்தது துகள்,ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு,கலங்கினர் பலர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்? கலித்தொகை
- கலித்தொகையின் எந்த கலியில் ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
முல்லைக்கலி
- “நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறுஏற்றுச் சிலைப்பவை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
கலித்தொகை
- எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வை குறிப்பிடும் பள்ளு எது?
கண்ணுடையம்மன் பள்ளு
- எகிப்தில் உள்ள எந்த சித்திரத்தில் காளைப் போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன?
பெனி-ஹாசன் சித்திரங்கள்
- காளைப் போர் குறித்த செய்திகளை உடைய சித்திரமான கினோஸஸ் எங்கு உள்ளது?
கிரீட் தீவு
- எருது பொருதார் கல் எங்கு உள்ளது?
சேலம் மாவட்டம்
- மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் எங்கு உள்ளது?
கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் நீலகிரி மாவட்டம்
- திமிலுடன் கூடிய காளை ஒன்றைப் ஒருவர் அடக்குவது போன்று ஓவியம் எங்குள்ளது?
கல்லூத்து மேட்டுப்பட்டி மதுரை
- திமிரு உடன் கூடிய காளை ஓவியம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
சித்திரக்கல் புடவில்,மயிலாடும்பாறை அருகே தேனி
- சிந்துவெளி அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டு தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதல் பற்றி குறிப்பதாகக் கூறியவர் யார்?
ஐராவதம் மகாதேவன்
- மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினை குறிக்கும் சொல் எது?
சல்லி
- புகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகக் திகழ்ந்த இந்திரவிழா எந்த நூல்களில் விவரிக்கப்படுகிறது?
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
- “பாடை மாக்களும் ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும் வந்தொருங்கு குழீஇ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
மணிமேகலை
- “விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
மணிமேகலை
- ஐம்பெருங்குழு உள்ளடக்கியவர்கள் யார் யார்?
அமைச்சர் ,சடங்கு செய்விப்போர்,படைத்தலைவர் ,தூதர் ,சாரணர் (ஒற்றர்)
- எண்பேராயம் உள்ளடக்கியவர்கள் யார் யார்?
கரணத்தியலவர்,கரும விதிகள் ,கனகச்சுற்றம் ,கடைகாப்பாளர் ,நகரமாந்தர் ,படைத்தலைவர் ,யானை வீரர் ,இவுளி மறவர்
- தமிழ் மக்களின் வாழ்வியலை சொல்லும் கருவூலங்களாக திகழும் இரண்டு நூல்கள் என்னென்ன?
சிலப்பதிகாரம் மணிமேகலை
- மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன? மணிமேகலை துறவு
- பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?
மணிமேகலை
- பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ் காப்பியம் என அழைக்கப்படுவது எது?
மணிமேகலை
- மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் யார்?
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
- கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் என்ன?
சாத்தன்
- சீத்தலை சாத்தனார் எங்கு பிறந்தார்?
திருச்சிராப்பள்ளியை சேர்ந்த சீத்தலை எனும் ஊரில்
- இளங்கோவடிகள் சீத்தலைசாத்தனார் எவ்வாறு பாராட்டியுள்ளார்?
தண்டமிழ் ஆசான் ,சாத்தன் ,நன்னூற் புலவன்
- “அறமெனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாத இதுகேள்!மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
மணிமேகலை
- எந்த ஆண்டு ராபர்ட் புரூஸ் பூட் எனும் தொல்லியல் அறிஞர் சென்னை பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கருவியையும் கண்டுபிடித்தார்?
1863
- இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கல்லாயுதம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
சென்னை பல்லாவரம்
- ரோமானியர்களின் பழங்கள் எங்கு கண்டெடுக்கப்பட்டது? கோவை
- எங்கு நடந்த அகழ்வாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன?
அரிக்கமேடு
- எந்த ஆண்டு நடந்த ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன?
1914
- “மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன் பகைப்புறத்து கொடுத்த பட்டிமண்டபம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சிலப்பதிகாரம்
- “பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
மணிமேகலை
- “பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அரியணையே” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
திருவாசகம்
- “பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
கம்பராமாயணம்
- “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
நன்னூல்
- தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது எது
காங்கேயம்
- காங்கேய மாடுகள் பிறக்கும்போது என்ன நிறத்தில் இருக்கும்?
சிவப்பு
- எங்கு காங்கேயம் மாடுகளின் உருவம் பொறித்த கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
கரூர் அமராவதி ஆற்று துறை
- தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலை எழுதியவர் யார்?-
தட்சிணாமூர்த்தி
- தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலை எழுதியவர்?-
மா.ராசமாணிக்கனார்
- தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் எனும் நூலை எழுதியவர்?
க. ரத்தினம்
- தொல்லியல் நோக்கில் சங்ககாலம் எனும் நூலை எழுதியவர்?
கா. ராஜன்
- தமிழர் சால்பு என்னும் நூலை எழுதியவர்?
சு.வித்தியானந்தன்