DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- ஒளிப்படி இயந்திரம் யாரால் உருவாக்கப்பட்டது
செஸ்டர் கார்ல்சன் நியூயார்க்
- எந்த ஆண்டு உலகின் முதல் ஒளிப்படி எடுக்கப்பட்டது?
1938
- சீரோகிராஃபி என்பது எந்த மொழிச்சொல்?
கிரேக்கம்
- சீரோகிராஃபி என்பதற்கு என்ன பொருள்?
உலர் எழுத்துமுறை
- எந்த ஆண்டு ஒளிப்படி இயந்திரம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
1959
- குறியீடுகளின் மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிகண்டு அதற்கு காப்புரிமை பெற்றவர் யார்?
அலெக்சாண்டர் பெயின்
- அலெக்சாண்டர் பெயின் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
ஸ்காட்லாந்து
- எந்த ஆண்டு குறியீடுகளின் மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிகண்டு அதற்கு காப்புரிமை பெற்றார்?
1846
- பான்டெலிகிராஃப் கருவியை உருவாக்கியவர் யார்?
ஜியோவன்னி காசில்லி
- முதன்முதல் எந்த ஆண்டு தொலைநகல் சேவை தொடங்கப்பட்டது?
1865
- முதல் முதல் எந்த இரு நகரங்களுக்கிடையே தொலைநகல் சேவை தொடங்கப்பட்டது?
பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்துக்கு
- எந்த ஆண்டு கணினி மூலம் தொலை நகல் எடுக்கும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது?
1985
- தொலை நகல் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் யார்?
ஹாங்க் மாக்னஸ்கி
- ஹாங்க் மாக்னஸ்கி எந்த நாட்டைச் சார்ந்தவர்?
அமெரிக்கா
- “நான் இங்கிலாந்திலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என் வங்கி பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கொரு சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது அங்கு சாக்லேட்; இங்கே பணம்” கூறியவர்?
ஜான் ஷெப்பர்டு பாரன்
- ஜான் ஷெப்பர்டு பாரன் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
இங்கிலாந்து
- எந்த வங்கிக்காக முதன்முதலில் தானியங்கி பணம் இயந்திரம் நிறுவப்பட்டது?
பார்க்லேஸ் வங்கி லண்டன்
- எந்த ஆண்டு முதன் முதலில் தானியங்கி பணம் இயந்திரம் நிறுவப்பட்டது?
ஜூன் 27 1967
- யார் தலைமையிலான குழு ஒன்று முதல் தானியங்கி பணம் இயந்திரத்தை நிறுவியது?
ஜான் ஷெப்பர்டு பாரன்
- கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் யார்?
ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு
- ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு எந்த ஆண்டு கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றார்?
1962
- எந்த ஆண்டு வையக விரிவு வலை வழங்கி உருவாக்கப்பட்டது?
1990
- வையக விரிவு வலை வழங்கி உருவாக்கியவர் யார்?
டிம் பெர்னர்ஸ் லீ
- “இணையத்தில் இது இல்லை எனில் உலகத்தில் அது நடைபெறவே இல்லை” என்பது யாருடைய வாசகம்?
டிம் பெர்னர்ஸ் லீ
- எந்த ஆண்டு இணைய வணிகம் கண்டுபிடிக்கப்பட்டது?
1979
- இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்?
மைக்கேல் ஆல்ட்ரிச்,இங்கிலாந்து
- அமெரிக்காவில் எந்த ஆண்டு இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது?
1989
- IRCTC இணையவழி பயணச்சீட்டு பதிவு செய்யும் முறை எப்போது தொடங்கப்பட்டது?
2002
- தேசிய திறனாய்வுத் தேர்வு என்பது எந்த வகுப்பு மாணவர்களுக்கு உரியது?
பத்தாம் வகுப்பு
- தேசிய திறனாய்வு மற்றும் கல்வித் தொகை தேர்வு என்பது எந்த வகுப்பு மாணவர்களுக்கு உரியது?
எட்டாம் வகுப்பு
- TRUST -என்பதன் விரிவாக்கம் என்ன?
Tamil Nadu rural student talent search examination
- “கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் மக்களுக்கு வானம் தூரமில்லை”- இவ்வரிகளை எழுதியவர்?
வைரமுத்து
- “முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால் பூமி ஒன்றும் பாரமில்லை”-இவ்வரிகளை எழுதியவர்?
வைரமுத்து
- “அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள் ,கரிகாலன் தன் பெருமையெல்லாம் கணிப்பொறி உள்ளே பொருத்துங்கள்”-இவ்வரிகளை எழுதியவர்?
வைரமுத்து
- “ஏவுகணைகளும் தமிழை எழுதி எல்லா கோளிலும் ஏற்றுங்கள்”இவ்வரிகளை எழுதியவர்?
வைரமுத்து
- கவிஞர் வைரமுத்து எங்கு பிறந்தார்?
மெட்டூர் தேனி மாவட்டம்
- கவிஞர் வைரமுத்து இந்திய அரசின் எந்த உயரிய விருதினை பெற்றுள்ளார்?
பத்மபூஷன்
- வைரமுத்து எந்த ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றார்
2003
- வைரமுத்து தனது எந்த நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்
கள்ளிக்காட்டு இதிகாசம்
- இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து எத்தனை முறை வென்றுள்ளார்?
ஏழு முறை
- சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதினை கவிஞர் வைரமுத்து எத்தனை முறை பெற்றுள்ளார்?
6 முறை
- “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி”
புறநானூறு
- “அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்” -இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
நாமகள் இலம்பகம் சீவகசிந்தாமணி
- “வெந்திற லான்,பெருந் தச்சனைக் கூவி,” ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்”என்றான்”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
நாமகள் இலம்பகம் சீவகசிந்தாமணி
- “ஆறறிவதுவே அவற்றோடு மனமே நேரிதின் உனர்ந்தோர் நெறிப்படுத்தினரே”–இவ்வரிகள் இயற்றியவர் யார்?
தொல்காப்பியர்
- ஓரறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?
உற்றறிதல் அல்லது தொடுதல் உணர்வு
- ஈரறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?
உற்றறிதல்+ சுவைத்தல்
- மூவறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?
உற்றறிதல்+ சுவைத்தல்+நுகர்தல்
- நான்கறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?
உற்றறிதல்+ சுவைத்தல்+நுகர்தல்+காணல்
- ஐந்தறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?
உற்றறிதல்+ சுவைத்தல்+நுகர்தல்+காணல்+கேட்டல்
- ஆறறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?
உற்றறிதல்+சுவைத்தல்+நுகர்தல்+காணல்+கேட்டல்+பகுத்தறிதல் (மனம்)
- ஓரறிவு உயிரினம் எது?
புல் மரம்
- ஈரறிவு உயிரினம் எது?
சிப்பி,நத்தை
- மூவறிவு உயிரினம் எது?
கரையான், எறும்பு
- நான்கறிவு உயிரினம் எது?
நண்டு ,தும்பி
- ஐந்தறிவு உயிரினம் எது?
பறவை, விலங்கு
- ஆறறிவு உயிரினம் எது?
மனிதன்
- தமிழ் மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்?
தொல்காப்பியம்
- தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?
3 (எழுத்து சொல் பொருள்)
- தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?
27
- தொல்காப்பியம் எந்த அதிகாரங்களில் மொழி இலக்கணங்களை விளக்குகிறது?
எழுத்து மற்றும் சொல்
- தமிழரின் அகம் புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழிலக்கிய கோட்பாடுகளையும் தொல்காப்பியத்தின் எந்த அதிகாரம் விளக்குகிறது?
பொருளதிகாரம்
- திரு.சிவன் அவர்கள் இஸ்ரோவின் எத்தனையாவது தலைவர்?
ஒன்பதாவது
- இஸ்ரோவின் தலைவர் பதவியை ஏற்றிருக்கும் முதல் தமிழர் யார்?
சிவன்
- எந்த ஆண்டு சிவன் அவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்?
2015
- சிவன் அவர்களின் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
சரக்கல் விளை, நாகர்கோவில்
- சிவன் அவர்களின் தந்தை பெயர்?
கைலாசவடிவு
- எந்த ஆண்டு முதன் முதலில் பிஎஸ்எல்வி திட்டத்தை தொடங்க அரசாங்கம் இசைவு தந்தது?
1983
- எந்த ஆண்டு சிவன் விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் பொறியாளராக பணியில் இணைந்தார்?
1982
- இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
விக்ரம் சாராபாய்
- ஆரியபட்டா என்ற முதல் செயற்கை கோள் ஏவு தளத்தில் காரணமானவர்?
விக்ரம் சாராபாய்
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு செயல்பட்டு வருகிறது?
திருவனந்தபுரம்
- யாருட முயற்சியால் இஸ்ரோ தொடங்கப்பட்டது?
விக்ரம் சாராபாய்
- சித்தாரா செயலி யாரால் உருவாக்கப்பட்டது?
சிவன்
- SITARA விரிவாக்கம் என்ன?
Software for integrated trajectory analysis with real time application
- அப்துல் கலாம் இந்தியாவின் எத்தனையாவது குடியரசு தலைவர்?
11
- அப்துல்கலாம்க்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?
இந்திய ஏவுகணை நாயகன்
- 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?
வளர்மதி
- வளர்மதி எந்த ஊரைச் சார்ந்தவர்?
அரியலூர்
- வளர்மதி எந்த ஆண்டு முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்?
1984
- உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கை கோள் எது?
RISAT-1(2012)
- RISAT-1 திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர்?
வளர்மதி
- இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர்?
வளர்மதி
- அருணன் சுப்பையா எந்த ஊரைச் சார்ந்தவர்?
ஏர்வாடிக்கு அருகில் கோதைசேரி திருநெல்வேலி மாவட்டம்
- எந்த ஆண்டு அருணன் சுப்பையா விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார்
1984
- 2013ஆம் ஆண்டு மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குனராக இருந்தவர் யார்?
அருணன் சுப்பையா
- இளைய கலாம் என அழைக்கப்படுபவர் யார்?
மயில்சாமி அண்ணாதுரை
- மயில்சாமி அண்ணாதுரை எந்த ஊரை சேர்ந்தவர்?
கோதவாடி , கோவை மாவட்டம்
- மயில்சாமி அண்ணாதுரை எந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்தார்?
1982
- மயில்சாமி அண்ணாதுரை தமது அறிவியல் அனுபவங்களை என்ன நூலாக எழுதியுள்ளார்?
கையருகே நிலா
- அக்னிச் சிறகுகள் ஆசிரியர்?
அப்துல் கலாம்
- மின்மினி நூலின் ஆசிரியர்?
ஆயிஷா நடராஜன்
- ஏன், எதற்கு, எப்படி என்ற நூலின் ஆசிரியர்?
சுஜாதா
- “மயில் பொறியை வானத்தில் பறக்க வைத்தோம் மணிபல்லவம் தீவுக்கு பறந்து சென்றோம்” இவ்வரிகளை எழுதியவர்?
பாவலர் கருமலைத்தமிழாழன்
- ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் எத்தனை சுவை அரும்புகள் உண்டு?
9 ஆயிரம்
- “கடலிலே கோடி கோடிக் கதிர் கைகள் ஊன்றுகின்றாய்”-இவ்வரிகளை எழுதியவர் யார்?
பாரதிதாசன்