DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என கூறியவர்?
தொல்காப்பியம்
- தம் எந்த நூலில் மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என திருமூலர் கூறியுள்ளார்?
திருமந்திரம்
- “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
ஔவைக் குறள்
- அவ்வையார் எந்த அதிகாரத்தில் வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம் எனக் கூறியுள்ளார்?
வாயுதாரணை
- கிழக்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
குணக்கு
- கிழக்கிலிருந்து வீசும் போது காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கொண்டல்
- கடல் பகுதியிலிருந்து மேல் உள்ள மழை மேகங்களை சுமந்து வருவதால் மழை காற்று என அழைக்கப்படும் காற்று எந்த திசையில் இருந்து வீசும்?
கிழக்கு
- மேற்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
குடக்கு
- மேற்கிலிருந்து வீசும் போது காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கோடை
- எந்த திசையில் இருந்து வீசும் காற்று வெப்ப காற்றாகிறது? மேற்கு
- வடக்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர்?
வாடை
- வடக்கில் இருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வாடைக்காற்று
- வாடைக்காற்றுக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
குளிர்ச்சியான ஊதைக்காற்று
- தெற்கிலிருந்து வீசும் காற்றுக்கு என்ன பெயர்?
தென்றல்
- “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சிலப்பதிகாரம்
- “நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது
- பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது நூலை எழுதியவர் யார்?
பலபட்டடை சொக்கநாதப் புலவர்
- “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- ஹிப்பாலஸ் எப்போது பருவக் காற்றின் உதவியினால் முசிறி துறைமுகத்திற்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார்?
கி.பி. முதல் நூற்றாண்டு
- “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
வெண்ணிக் குயத்தியார்
- “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” இவ்வரிகளில் யாரை பாடியுள்ளார்?
கரிகால் பெருவளத்தான்
- இந்தியாவிற்கு தேவையான 70 விழுக்காடு மழை அளவினை எந்த பருவக்காற்று தருகிறது?
தென்மேற்கு பருவக்காற்று
- “வளி மிகின் வலி இல்லை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
புறநானூறு
- “வளி மிகின் வலி இல்லை” இவ்வரிகளை இயற்றியவர்?
ஐயூர் முடவனார்
- கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடுவது யார்?
மதுரை இளநாகனார்
- உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா எத்தனாவது இடம் பெற்றுள்ளது?
ஐந்தாமிடம்
- காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?
தமிழகம்
- உலகிலேயே அதிக அளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
இரண்டாவது இடம்
- காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக எது தெரிவித்துள்ளது?
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
- UNICEFன் விரிவாக்கம் என்ன?
United Nations Children’s Fund
- குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு எவ்வளவு ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்து விடுகிறது?
ஒரு லட்சம்
- உலக காற்று நாளாக கொண்டாடப்படுவது எப்போது?
ஜூன் 15
- எந்த நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை திருப்பாவை பாடல்கள் தாய்மொழியில் எழுதிவைத்து பாடுகின்றனர்?
தாய்லாந்து
- ஒன்றே உலகம் எனும் நூலின் ஆசிரியர் யார்?
தனிநாயகம் அடிகள்
- “மகரந்தத் தூளை சுமந்துகொண்டு,மனத்தை மயலுறுத்தகின்ற இனிய வாசனையுடன் வா” எனக் காற்றை அழைத்தவர் யார்?
மகாகவி பாரதியார்
- நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் பாராட்டுப் பெற்றவர் யார்?
மகாகவி பாரதியார்
- சிந்துக்கு தந்தை எனப் பாராட்டப் பெற்றவர் யார்?
மகாகவி பாரதியார்
- மகாகவி பாரதியார் எழுதிய நூல்கள் என்னென்ன?
குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ,கண்ணன் பாட்டு ,பாப்பா பாட்டு ,புதிய ஆத்திசூடி
- பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் என்னென்ன?
இந்தியா, சுதேசமித்திரன்
- பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பட்டவர் யார்?
பாரதியார்
- வசனக்கவிதை தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
மகாகவி பாரதியார்
- “பேய் கொண்டு தக்கை யடிக்குது காற்று- தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
பாரதியார்
- முல்லைப்பாட்டு நூலை எழுதியவர் யார்?
நப்பூதனார்
- “நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
முல்லைப்பாட்டு
- “சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
முல்லைப்பாட்டு
- ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ முடியாதோ என ஐயம் கொண்ட பெண்கள் தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியை கூறின் தீதாய் முடியும் “என்றும் கொள்வதற்கு என்ன பெயர்?
விரிச்சி கேட்டல்
- முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?
103 அடிகள்
- முல்லைப்பாட்டு என்ன பாவகையில் இயற்றப்பட்டுள்ளது?
ஆசிரியப்பா
- பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?
முல்லைப்பாட்டு
- நப்பூதனார் யாருடைய மகன்? காவிரிப்பூம்பட்டினத்து பொன்வணிகனார்
- வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை எந்த ஆண்டில் தொடங்கியது?
2000
- புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் எப்போதிலிருந்து புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டுள்ளது?
2004 செப்டம்பர் [தற்போது 13 நாடுகள் 169 பெயர்கள் ]
- புவி தனது அச்சில் எந்த திசையில் சுழல்கிறது?
மேற்கிலிருந்து கிழக்காக
- புவி தனது சுழற்சியால் நிலநடுக்கோட்டின் வடக்குப் பகுதியில் வீசும் காற்றை என்ன திசையில் திருப்பும்?
வலப்புறம்
- புவி தனது சுழற்சியால் நிலநடுக்கோட்டின் தெற்குப் பகுதியில் வீசும் காற்றை என்ன திசையில் திருப்பும்?
இடப்புறம்
- வங்கக் கடலில் வீசும் புயல்கள் எவ்வாறு் அழைக்கப்படும்?
இடம்புரி புயல்கள்
- வேறு எந்தெந்த நாட்டில் இடம்புரி புயல்கள் உருவாகின்றன?
அமெரிக்கா, ஜப்பான், சீனா
- ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவை தாக்கிய புயல்கள் என்ன பெயர்கள்?
வலம்புரி புயல்கள்
- கொரியாலிஸ் விளைவு எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
1835
- கொரியாலிஸ் விளைவை கண்டுபிடித்தவர் யார்?
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த கணக்கு வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ்
- பிலவான் எந்த நாட்டில் உள்ள இடம்?
இந்தோனேஷியா
- புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது?
புயலிலே ஒரு தோணி
- புயலிலே ஒரு தோணியின் நூலாசிரியர் யார்?
ப. சிங்காரம்
- ப சிங்காரம் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?
சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம்
- ப. சிங்காரம் எந்த தினசரி நாளிதழில் பணியாற்றியுள்ளார்?
தினத்தந்தி
- “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
அகநானூறு
- “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” இவ்வரிகளில் குறிப்பிடப்படும் இடம் எது?
கொல்லிமலை
- கொல்லிமலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
நாமக்கல்
- “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே “இவ்வரிகளை எழுதியவர்?
கண்ணதாசன்
- பூ உண்டு ஆனால் கண்ணிற்கு காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் எவை?
ஆல மலர்;பலா மலர்
- மலர் உண்டு; பெயரும் உண்டு ; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் என்னென்ன?
சுள்ளி மலர், பாங்கர் மலர்
- அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சி படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் என்னென்ன?
அத்தி,ஆலம் ,கொழிஞ்சி,பலா
- பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பெறாமை ,பொதுவில் ஒதுக்கப்பட்ட மை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவை என்னென்ன?
நெருஞ்சி, எருக்கு ,பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை
- இலுப்பை பூக்கள் என்ன சுவையுடையவை?
இனிப்பு
- கரடிகள் பறித்து உண்ணும் மற்றும் குடிநீருக்கு தன் மனத்தை ஏற்றும் பூ எது?
பாதிரிப்பூ
- அதோ அந்த பறவை போல எனும் நூலை எழுதியவர்?
ச. முகமது அலி
- உலகின் மிகச்சிறிய தவளை எனும் நூலை எழுதியவர்?
எஸ் ராமகிருஷ்ணன்