DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- காந்தியடிகள் சத்தியாகிரகம் என்ற அறப்போர் முறையை தென்னாப்பிரிக்காவில் தொடங்கிவைத்த ஆண்டு?
1906
- வ உ சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை எந்த ஆண்டு தொடங்கினார்?
1906
- மா பொ சிவஞானம் எப்போது பிறந்தார்?
ஜூன் 26, 1906
- மா பொ சிவஞானம் எங்கு பிறந்தார்?
சென்னை ஆயிரம் விளக்கு வட்டம் ,சால்வன்குப்பம்
- மா.பொ. சிவஞானத்தின் பெற்றோர் யார்?
பொன்னுசாமி -சிவகாமி
- மா.பொ. சிவஞானத்தின் இயற்பெயர் என்ன?
ஞானப்பிரகாசம்
- சரபையர் என்ற முதியவர் மா.பொ. சிவஞானத்தின் பெயரை எவ்வாறு அழைத்தார்?
சிவஞானி
- மா.பொ. சிவஞானத்தின் கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமை யாரைச் சேரும்?
திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
- காந்தி-இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?
1931
- எந்த ஆண்டு “தமிழா! துள்ளி எழு” தலைப்புடைய துண்டறிக்கையை மா.பொ.சி வழங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்?
30.09.1932
- வடக்கெல்லை தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளசெய்தழன் யார்?
தமிழாசான் மங்கலங்கிழார்
- “தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால் அது சிலப்பதிகாரத்தை தவிர வேறு ஒன்று இல்லை” எனக் கூறியவர் யார்?
மா. பொ சிவஞானம்
- தமிழ்நாட்டில் சிலப்பதிகார மாநாடு நடத்தியவர் யார்?
மா.பொ.சிவஞானம்
- சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
மா.பொ. சிவஞானம்
- யார் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு திருத்தணி வரையுள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட்டன?
படாஸ்கர் ஆணையம்
- சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து ஆந்திரம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு நபர் ஆணையத்தின் தலைமை யார்?
நீதிபதி வாஞ்சு
- மா.பொ. சிவஞானத்தின் தெற்கெல்லை கிளர்ச்சி பற்றிய முதல் பேச்சு எங்கு எப்போது நடந்தது?
அக்டோபர் 25, 1946 ,நாகர்கோவில் நகரின் வடிவீஸ்வரம் , வடிவை வாலிபர் சங்கத்தின் ஆண்டு விழாவில்
- தெற்கெல்லை கிளர்ச்சியில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக உயிர் நீத்தவர்கள் யார்?
தேவசகாயம் ,செல்லையா
- மார்ஷல் ஏ. நேசமணி என்ன பணிகளை வகித்துள்ளார்?
வழக்கறிஞர், நாகர்கோவில் நகர்மன்ற தலைவர் ,சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்
- குமரிமாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் யார்?
மார்ஷல் ஏ. நேசமணி
- எப்போது கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது?
நவம்பர் 1, 1956
- மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு எங்கு மணிமண்டபம் அமைத்துள்ளது?
நாகர்கோவில்
- எந்த நூல்களில் தமிழகத்தின் வடக்கு எல்லை வேங்கடமலையாகவும், தெற்கெல்லை குமரிமுனையாகவும் கூறப்படுகிறது?
புறநானூறு ,சிலப்பதிகாரம்
- ஆஸ்டிரியா நாட்டு தலைநகரம் எது?
வியன்னா
- முசிறி -அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது?
கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதி
- மாப்பு சிவஞானத்தின் தன் வரலாற்று நூல் எது?
எனது போராட்டம்
- மா.பொ. சிவஞானத்தின் காலம் என்ன?
1906 – 1995
- மா.பொ.சிவஞானம் எந்த ஆண்டு சட்டமன்ற மேலவைத் தலைவராக பதவி வகித்துள்ளார்?
1972 முதல் 1978 வரை
- மா பொ சிவஞானம் என்ன கழகத்தைத் தொடங்கினார்?
தமிழரசு கழகம்
- மா.பொ. சிவஞானத்தின் எந்த நூல் 1966 ஆம் ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றது?
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
- மா பொ சிவஞானத்திற்கு தமிழரசு எங்கு சிலை அமைந்துள்ளது?
திருத்தணியிலும், சென்னை தியாகராய நகரிலும்
- ஏர் புதிதா? எனும் கவிதையை இயற்றியவர்?
கு.ப. ராஜகோபாலன்
- பொன்னேர் பூட்டுதல் எந்த திங்களில் நடத்தப்படும்?
சித்திரைத் திங்கள்
- “ஏர் புதிதா?” எனும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
கு.ப.ரா.படைப்புகள்
- கு ப ராஜகோபாலன் எங்கு எப்போது பிறந்தார்?
கும்பகோணம் 1902
- கு ப ராஜகோபாலன் எந்த இதழ்களின் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்?
தமிழ்நாடு ,பாரதமணி ,பாரததேவி, கிராம ஊழியன்
- கு ப ராஜகோபாலனின் படைப்புகள் என்ன நூலாக தொகுக்கப்பட்டுள்ளன?
அகலிகை, ஆத்ம சிந்தனை
- “இந்தி ரன்முதற் திசபாலர் எண் மரும்ஒரு வடிவாகி வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய” இம்மெய்க்கீர்த்தி யாரைப் பற்றியது?
இரண்டாம் ராஜராஜ சோழன்
- இரண்டாம் ராஜராஜ சோழனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
கோப்பரகேசரி ,திருபுவனச் சக்கரவர்த்தி
- இரண்டாம் ராஜராஜ சோழனுடைய மெய்க்கீர்த்திகள் எத்தனை?
இரண்டு
- “சிறுகுறங் கைவினைப் பிறர்வினை யாளரோடு மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
இந்திரவிழா ஊரெடுத்த காதை , சிலப்பதிகாரம்
- “சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணிமேகலையும் புனைந்தான் …” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
திருத்தணிகையுலா
- சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடைக்கு என்ன பெயர்?
உரைப்பாட்டு மடை
- இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரத்தில் எந்த கண்டத்தில் உள்ளது?
புகார்க்காண்டம்
- சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
முத்தமிழ் காப்பியம் குடிமக்கள் காப்பியம்
- சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் என்னென்ன?
3 , புகார் காண்டம், மதுரைக் காண்டம் ,வஞ்சிக் காண்டம்
- சிலப்பதிகாரம் எத்தனை காதைகள் உடையது?
30 காதைகள்
- இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படும் நூல்கள்?
சிலப்பதிகாரம் ,மணிமேகலை
- சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?
இளங்கோவடிகள்
- இளங்கோவடிகள் எந்த மரபைச் சார்ந்தவர்?
சேர மரபு
- மணிமேகலை ஆசிரியர் யார்?
சீத்தலைச் சாத்தனார்
- கோவலன் கண்ணகி கதையை கூறி அடிகள் நீரே அருளுக என கூறியவர் யார்?
சீத்தலைச்சாத்தனார்
- “நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” எனக் கூறியவர் யார்?
இளங்கோவடிகள்
- எம் எஸ் சுப்புலட்சுமி எந்த வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார்?
ஐந்தாம் வகுப்பு
- எம் எஸ் சுப்புலட்சுமியின் நடித்த திரைப்படம் எது?
மீரா
- 1947 இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று எம்எஸ் சுப்புலட்சுமியிடம் காந்தி பாடும்படி கேட்டுக் கொண்ட பாடல் எது?
ஹரி தும் ஹரோ எனும் மீரா பஜன்
- எம் எஸ் சுப்புலட்சுமி எந்த ஆண்டு தாமரையணி விருது பெற்றார்?
1954
- எம் எஸ் சுப்புலட்சுமி எந்த ஆண்டு இங்கிலாந்தில் பாடினார்?
1963
- எம்.எஸ்.சுப்புலட்சுமி எந்த ஆண்டு ஐ.நா அவையில் பாடினார்?
1966
- எந்த ஆண்டில் எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு மகசேசே விருது கிடைத்தது?
1974
- மகசேசே விருது பெற்ற முதல் இசை கலைஞர் யார்?
எம் எஸ் சுப்புலட்சுமி
- ராஜம் கிருஷ்ணனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?
வேருக்கு நீர்
- சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார்?
ராஜம்கிருஷ்ணன்
- ராஜம் கிருஷ்ணன் எழுதிய நூல்கள் என்னென்ன?
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி, கரிப்பு மணிகள், குறிஞ்சித்தேன், அலைவாய்க் கரையில், சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், மண்ணகத்து பூந்துளிகள்
- கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பெற்ற விருதுகள் என்னென்ன?
தாமரைத்திரு விருது ,ஸ்வீடன் அரசின் வாழ்வுரிமை விருது ,சுவிட்சலாந்து அரசின் காந்தி அமைதி விருது
- கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் என்ன இயக்கத்தைத் தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்துள்ளார்?
உழுபவருக்கு நில உரிமை இயக்கம் (land for the tiller’ freedom – LAFTI)
- வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி பரஸ்கார்)வாங்கியவர் யார்?
சின்னப்பிள்ளை
- சின்ன பிள்ளை பெற்ற விருதுகள் என்னென்ன?
தமிழக அரசின் ஔவை விருது ,தூர்தர்ஷனின் பொதிகை விருது ,தாமரைத்திரு விருது
- “ஏர் பிடிக்கும் கைகளுக்கு வாழ்த்து கூறுவோம்” இவ்வரிகளை எழுதியவர் யார்?
கவி.கா.மு.ஷெரீப்
- “கற்ற பெண்களை இந்த நாடு தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு” இவரிகளை இயற்றியவர் யார்?
பாரதிதாசன்
- என் கதை எனும் நூலின் ஆசிரியர்?
நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்
- நாற்காலிக்காரர் எனும் நூலின் ஆசிரியர்?
ந முத்துசாமி