TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | இந்திய அரசியலமைப்பு| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

Telegram Logo GIF TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | இந்திய அரசியலமைப்பு| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | இந்திய அரசியலமைப்பு| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


TNPSC Constitution Study App Banner TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | இந்திய அரசியலமைப்பு| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE


  1. இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சியில் முதல் மைல்கல்
    [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service]
    A) ஒழுங்குமுறைச் சட்டம் 1773
    B) பிட் இந்தியச் சட்டம் 1784
    C) 1858 ம் ஆண்டு இந்திய அரசு சட்டம்
    D) 1947 ம் ஆண்டு இந்தியச் சுதந்திரச் சட்டம்.
  2. மேம்பட்ட இந்திய அரசாங்கத்திற்கான சட்டம் என அறியப்படுவது
    [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service]
    A) 1909 ம் ஆண்டு சட்டம்
    B) 1858 ஆண்டு சட்டம்
    C) பிட் இந்திய சட்டம்
    D) 1935 ம் ஆண்டு சட்டம்
  3. முதன்முதலாக இஸ்லாமியர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கப்பட்டது _____ஆகும்.
    [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service]
    A) 1858ஆம் ஆண்டுச் சட்டம்
    B) 1935ஆம் ஆண்டுச் சட்டம்
    C) 1909ஆம் ஆண்டுச் சட்டம்
    D) 1919ஆம் ஆண்டுச் சட்டம்
  4. ____மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது
    [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service]
    A) 1919 ம் ஆண்டுச் சட்டம்
    B) ஒழுங்குமுறைச் சட்டம்
    C) 1909 ம் ஆண்டுச் சட்டம்
    D) இந்தியச் சுதந்திர சட்டம்
  5. ______அரசியல் சட்டத்தை எழுதும் குழுவினர் தலைவர் ஆவார்.
    [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service]
    A) இராஜேந்திர பிரசாத்
    B) ஜவஹர்லால் நேரு
    C) டாக்டர் ராதாகிருஷ்ணன்
    D) டாக்டர் அம்பேத்கர்
  6. பின்வருவனவற்றுள் 1919ம் ஆண்டு சட்டத்திற்கு பொருந்துவது எது?
    [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service]
    A) அது வகுப்புவாரி பிரிதிநித்துவத்தை அறிமுகம் செய்தது
    B) அது அனைத்து இந்தியக் கூட்டமைப்பு உருவாக்கியது
    C) அது மாநில சுயாட்சியை அறிமுகம் செய்தது
    D) அது மாநில இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது
  7. இந்தியாவில் முதன்முதலில் உச்சநீதிமன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
    [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service]
    A) 1793
    B) 1861
    C) 1830
    D) 1773
  8. அரசியல்‌ அமைப்பு விதி 368ன் கீழ்‌ கொண்டு வரதக்க பிரிவுகள்‌ மற்றும்‌ அரசியல்‌ அமைப்பு விதிகளை சரியாக பொருத்தவும்‌. பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்க. பிரிவு அரசியல்‌ அமைப்பு விதி குடியரசுத்‌ தலைவர்‌ தேர்வு 1. Art. 54 மற்றும்‌ 55 B யூனியன்‌ பிரதேசங்களுக்கு உயர்நீதிமன்றம் 2. Art. 241 C மத்திய மற்றும்‌ மாநில அரசுகளுக்கு நிர்வாக அதிகாரம் 3. Art. 73 மற்றும்‌ 162 D மத்திய மற்றும்‌ மாநில அரசுகளிடையிலான சட்டத்துறை அதிகார பகிர்வு 4. Art 245-ல்‌ இருந்து 255 வரை 2012 Posts included in CCSE-I IN 2011-2013
    [A]
    A) 1 2 3 4
    B) 2 3 4 1
    C) 4 3 2 1
    D) 2 1 4 3
  9. பொருத்துக : பட்டியல் I பட்டியல் II விதி 74 1. கவுன்சில்‌ ஆப்‌ மந்திரிகள்‌ B விதி 356 2. அரசியலமைப்பு திருத்த முறைகள் C விதி 370 3. ‌ஜம்மு மற்றும்‌ காஷ்மீர் D விதி 368 4. நெருக்கடி நிலை அறிவிப்பு 2012 Posts included in CCSE-I IN 2011-2013
    [A]
    A) 1 4 3 2
    B) 2 1 4 3
    C) 3 2 1 4
    D) 4 1 3 2
  10. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு: பட்டியல்-I பட்டியல்-II (a) அடிப்படை கடமைகள் (1) பகுதி IV (b) அரசு நெறிமுறைப்படுத்தும் கோட்பாடுகள் (2) பகுதி IV-அ (c) கிராம பஞ்சாயத்து (3) பகுதி IX-அ (d) நகர்புற உள்ளாட்சி (4) பகுதி IX
    [2013-Store Keeper & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service]
    A) (1) (2) (3) (4)
    B) (2) (1) (4) (3)
    C) (3) (4) (2) (1)
    D) (4) (1) (2) (3)
  11. பொருத்துக: (a) விதி 153 – 1. தேசிய அவசரநிலை (b) விதி 163 – 2. ஆளுநர் (c) விதி 352 – 3. மாநில அவசர நிலை (d) விதி 356 – 4. முதலமைச்சர்
    [2013-Store Keeper & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service]
    A) 3 2 4 1
    B) 1 3 4 2
    C) 4 3 2 1
    D) 2 4 1 3
  12. அரசியலமைப்பு செயல்படும் விதத்தை ஆராய தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
    [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION]
    A) 2001
    B) 2003
    C) 2004
    D) 2002
  13. பின்வருவனவற்றுள் சரியானதை தேர்வு செய்க 1. ஜனநாயக அரசாங்கம் சுதந்திரமானது 2. சுதந்திர அரசாங்கம் ஜனநாயக முறைமை உடையது 3. சுதந்திர ஜனநாயகம் ஒரு கூட்டு குழுமம் சார்புடையது 4. சுதந்திர ஜனநாயகம் பொது நல சார்புடையது
    [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION (INTERVIEW POSTS) (2014-2015 & 2015-2016) IN GROUP-II SERVICES]
    A) 1, 2, 4
    B) 1, 2, 3
    C) 1, 3, 4
    D) 2, 3, 4
  14. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது? அரசியலமைப்பு – விதி I. அடிப்படை உரிமைகள் – 12-35 II. அடிப்படை கடமைகள் – 36-51 III. அரச வழிகாட்டு நெறிமுறைகள் – 51 A IV. குடியுரிமை – 1 முதல் 4 வரை
    [2015 Child Development Project Officer IN The Tamil Nadu General Service, 2012-2013]
    A) I மட்டும்
    B) II மற்றும் III
    C) III மற்றும் IV
    D) IV மட்டும்
  15. இந்திய தேசிய நூலகத்திற்கு எந்த அரசியல் அமைப்பு சட்ட வடிவு தனி அந்தஸ்தை வழங்கி வருகிறது
    [2015-CERTIFICATE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE]
    A) பிரிவு 63 ஏழாவது சட்டப்பிரிவு
    B) பிரிவு 63 ஆறாவது சட்டப்பிரிவு
    C) பிரிவு 62 ஏழாவது சட்டப்பிரிவு
    D) பிரிவு 62 ஆறாவது சட்டப்பிரிவு
  16. பின்வருவனவற்றை பொருத்துக: (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE ஆசிரியர் நூல் (a) பிளேட்டோ 1. குடியரசு பற்றிய ஆறு நூல்கள் (b) ரூசோ 2. இளவரசன் (c) நிகோலோ மாக்கியவெல்லி 3. குடியரசு (d) ஜீன் போடின் 4. சமூக ஒப்பந்தம்
    [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE]
    A) 1 2 3 4
    B) 2 4 1 3
    C) 3 4 2 1
    D) 3 2 1 4
  17. இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
    [2016 POSTS INCLUDED IN GROUP-IV SERVICES (2015–16)]
    A) டாக்டர். இராஜேந்திர பிரசாத்
    B) ஜவஹர்லால் நேரு
    C) டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்
    D) காந்தி
  18. சரியான வாக்கியத்தை கண்டுபிடி. இந்திய அரசியலமைப்பு: கொண்டுள்ளது.
    [2016 POSTS INCLUDED IN GROUP-IV SERVICES (2015–16)]
    A) XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்
    B) XXI பாகங்கள், 438 சரத்துகள் மற்றும் 8 அட்டவணைகள்
    C) XXIII பாகங்கள், 469 சரத்துகள் மற்றும் 21 அட்டவணைகள்
    D) XX பாகங்கள், 428 சரத்துகள் மற்றும் 18 அட்டவணைகள்
  19. கீழ்வருபவனவற்றில் எது பொருத்தம் இல்லை?
    [2016-GENERAL STUDIES-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)]
    A) ஹெல்ட் – ஜனநாயகத்தின் மாதிரிகள்
    B) மேக்பர்சன் – ஜனநாயக பங்களிப்பு
    C) லிவ்லி – ஜனநாயகம்
    D) ஸ்கம்பீட்டர் – முதலாளித்துவம், சமதர்மம் மற்றும் மக்களாட்சி
  20. அரசியலமைப்பு நிர்ணயசபையின் அவைக் குழுவை தலைமையேற்றவர் யார்?
    [2016-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)]
    A)
    B) பட்டாபி சீதாராமைய்யா
    C) G.V. மாவலங்கர்
    D) S.K. தார்
  21. அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
    [2016 POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2014 – 2015)]
    A) டாக்டர். பி. ஆர். அம்பேத்கார்
    B) டாக்டர். சின்கா
    C) டாக்டர். இராஜேந்திர பிரசாத்
    D) ஜவஹர்லால் நேரு
  22. இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
    [2017 Executive Officer, Grade-IV included in Group VIII Services IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service]
    A) ஜனவரி 26, 1950
    B) பிப்ரவரி 26, 1950
    C) ஆகஸ்ட் 26, 1950
    D) மார்ச் 26, 1950
  23. 9, டிசம்பர், 1946-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடந்தது?
    [2017 Superintendent, Garments and Holdall Making Unit, Vellore IN The Tamil Nadu Approved Schools and Vigilance Service (2015-2016)]
    A) டாக்டர் இராஜேந்திர பிரசாத்
    B) டாக்டர் சச்சிதானந்த் சின்ஹா
    C) டாக்டர் பி. ஆர். அம்பேத்கார்
    D) பண்டிட் ஜவஹர்லால் நேரு
  24. இந்தியாவின் அரசியலமைப்பு அரசியல் நிர்ணய சபையினால் சட்டமாக்கப்பட்டு ஏற்றுக் கொண்ட வருடம்
    [2017-PAPER I-Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15]
    A) 1947
    B) 1949
    C) 1950
    D) 1952
  25. எந்த மொழியிலிருந்து மக்களாட்சியைக் குறிக்கும் “டிமாகிரசி” என்ற வார்த்தை பெறப்பட்டது? 2017 Social Case Work Expert IN The Tamil Nadu Jail Subordinate Service (2009-2010, 2010-2011 & 2013-2014)
    A) லத்தீன்
    B) கிரேக்கம்
    C) அரேபிக்
    D) பெருசியன்
  26. மனித சமுதாயத்தின் வாழ்விற்கும், வசதிக்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு இன்றியமையாத சமூக அமைப்பு?
    [2017-ASSISTANT WORKS MANAGER IN THE GOVT. PRESS IN THE TAMIL NADU STATIONERY AND PRINTING SERVICE 2015-2016]
    A) குடும்பம்
    B) அரசு
    C) சமுதாயம்
    D) பள்ளிக்கூடம்
  27. பின்வரும் மாநிலங்களில் எது சட்ட விதி 370 உடன் தொடர்பு கொண்டது?
    [2017-ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE]
    A) ஜம்மு-காஷ்மீர்
    B) அஸ்ஸாம்
    C) மேகாலயா
    D) நாகலாந்து
  28. “பொருப்பான” என்ற வார்த்தை பயன்பாட்டிற்கு வந்த மொழி
    [2017 ASSISTANT COMMISSIONER IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS ADMINISTRATION SERVICE 2013-2014]
    A) ஆங்கிலம்
    B) பிரெஞ்சு
    C) லத்தீன்
    D) ஸ்பானிஷ்
  29. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை எந்நாளில் குறிக்கோள்கள் அடங்கிய தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது? 2017-ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE}
    A) ஜனவரி 22, 1947
    B) நவம்பர் 26, 1949
    C) ஜனவரி 26, 1950
    D) ஜனவரி 22, 1950
  30. பின்வரும் நபர்களில் எவர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக முதல் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
    [2018-GENERAL STUDIES-EXECUTIVE OFFICER, GRADE-I IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE 2014-2016, 2017-2018]
    A) சச்சிதானந்த சின்ஹா
    B) ராஜேந்திர பிரசாத்
    C) டாக்டர். பி.ஆர். அம்பேத்கார்
    D) கே.எம்.பணிக்கர்
  31. இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எத்தனை அட்டவணைகள் இருந்தன?
    [2018-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE 2014-2016, 2017-2018]
    A) பத்து அட்டவணைகள்
    B) ஒன்பது அட்டவணைகள்
    C) எட்டு அட்டவணைகள்
    D) ஏழு அட்டவணைகள்
  32. கட்சியற்ற ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்தியவர்
    [2018-GENERAL STUDIES-COMBINED ENGINEERING SERVICES EXAMINATION IN THE TAMIL NADU FACTORY ELECTRICAL INSPECTORATE AGRICULTURAL ENGINEERING FISHERIES ENGINEERING SERVICE 2012-2013, 2015-2016 & 2016-2017]
    A) மகாத்மா காந்தி
    B) ஜெயப்பிரகாஷ் நாராயணன்
    C) அண்ணா ஹசாரே
    D) டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்
  33. செய்தித்தாள்களை ‘மக்களாட்சியின் வேதாகமம்’ என அழைத்தவர் யார்?
    [2018-GENERAL STUDIES- Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service]
    A) பிரைஸ் பிரபு
    B) வால்டர் லிப்மேன்
    C) ஹெர்பர்ட் L. மார்க்ஸ்
    D) லீகாக்
  34. இந்திய அரசியலமைப்பில் எத்தனை உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள்?
    [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018]
    A) 274
    B) 284
    C) 294
    D) 264
  35. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் வாக்கியத்தை கவனிக்கவும். கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது/எவை சரியானவை? I. மகாத்மா காந்தி இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர் அல்லர் ΙΙ. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர் இரோஜந்திர பிரசாத் டிசம்பர் 11, 1946 தேர்ந்தெடுக்கப்பட்டார் III. அரசியல் நிர்ணய சபை, கேபினட் மிஷன் தீர்மானத்தால் உருவாக்கப்பட்டது IV. தேசிய கொடியை மட்டும் அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. தேசிய கீதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை
    [2018-GENERAL STUDIES-COMBINED ENGINEERING SERVICES EXAMINATION IN The Tamil Nadu Engineering Highways Engineering Panchayat Development Service 2013-2014 & 2017-2018]
    A) I மட்டும்
    B) I, II மற்றும் III மட்டும்
    C) II மற்றும் IV மட்டும்
    D) I, II, III மற்றும் IV
  36. இந்திய அரசமைப்பில்
    [2018-GENERAL STUDIES-Civil Judge IN The Tamil Nadu State Judicial Service]
    A) அடிப்படை உரிமைகளும், அடிப்படைக் கடமைகளும் விவரக் குறிப்பிடப்பட்டுள்ளன
    B) அடிப்படை உரிமைகள் மட்டுமே விவரக் குறிப்பிடப்பட்டுள்ளன
    C) அடிப்படை கடமைகள் விவரக் குறிப்பாக குறிப்பிடவில்லை
    D) அடிப்படை கடமைகள் மட்டுமே விவரக் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது
  37. தவறான விடையை தேர்வு செய்க
    [2018-GENERAL STUDIES-Civil Judge IN The Tamil Nadu State Judicial Service]
    A) இந்திய அரசமைப்பின் பகுதி IV A-யில் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமைகள் என 11 கடமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன
    B) இந்திய அரசமைப்பு பகுதி III-ல் 5 வகையான நீதிப்பேராணைகள் குறிப்பிடப்பட்டுள்ளன
    C) இந்திய அரசமைப்பு பகுதி IV-ல் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகள் நாட்டின் ஆட்சி நெறிக்கு அடிப்படையாக அமையும்
    D) பேச்சுரிமை, சிந்தனை வெளிப்படுத்தும் உரிமை என்பது இந்திய அரசமைப்பு பிரிவு IX-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு உரிமையாகும்
  38. இந்திய அரசமைப்பு எப்பொழுது அரசமைப்பு பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது?
    [2018-GENERAL STUDIES-Civil Judge IN The Tamil Nadu State Judicial Service]
    A) 1950-ஆம் வருடம் ஜனவரி 26-ஆம் நாள்
    B) 1949-ஆம் வருடம் நவம்பர் 26-ஆம் நாள்
    C) 1947-ஆம் வருடம் ஆகஸ்ட் 15-ஆம் நாள்
    D) 1950-ஆம் வருடம் ஆகஸ்ட் 15-ஆம் நாள்
  39. இந்திய அரசமைப்பின் பிரிவு 1(1) இவ்வாறு கூறுகிறது
    [2018-GENERAL STUDIES-Civil Judge IN The Tamil Nadu State Judicial Service]
    A) இந்தியா எனும் பாரதம், மாநிலங்களை கொண்டதோர் ஒன்றியமாக இருக்கும்
    B) இந்தியா, மாநிலங்களை கொண்டதோர் ஒன்றியமாகவும், ஒன்றியத்து ஆட்சி நிலவரைகளையும், மாகாணங்களையும் கொண்டதாக இருக்கும்
    C) இந்தியா எனும் பாரதம், மாநிலங்களை கொண்டதோர் ஒன்றியமாகவும், மற்றும் அடையப்பெறும் பிற ஆட்சி நிலவரைகளையும் கொண்டதாக இருக்கும்
    D) இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும்
  40. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு
    [2018-GENERAL STUDIES-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)]
    A) 26 ஜனவரி 1950
    B) 15 ஆகஸ்ட் 1947
    C) 26 ஜனவரி 1947
    D) 15 ஆகஸ்ட் 1945
  41. இந்திய அரசியலமைப்பை உருவாக்க அரசியல் நிர்ணய சபை எடுத்துக் கொண்ட காலம்
    [2018-GENERAL STUDIES-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)]
    A) 1946-49
    B) 1947-48
    C) 1950-51
    D) 1951-52
  42. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
    [2018-GENERAL STUDIES- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015]
    A) நேரு
    B) அம்பேத்கர்
    C) மதன் மோகன் மாளவியா
    D) சர்தார் வல்லபாய் படேல்
  43. சமூகவியல் என்பது சமூகத்தின் அறிவியலாகும். அரசியல் அறிவியல் என்பது அறிவியலாகும்.
    [2018-SOCIAL-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)]
    A) அரசு
    B) கொள்கை
    C) கலாச்சாரம்
    D) நன்னடத்தை
  44. அரசியல் அறிவியல் என்பது அறிவியலின்
    [2018-SOCIAL-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)]
    A) கிராம மற்றும் நகர சமூகம்
    B) பொருட்கள் மற்றும் சேவைகள்
    C) சமூகம் மற்றும் சமுதாயம்
    D) அரசு மற்றும் அரசாங்கம்
  45. இந்திய அரசியல் அமைப்பின் வரைவுக்குழு தலைவராக இருந்தவர்
    [2019-GENERAL STUDIES-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)]
    A) டாக்டர். ராஜேந்திர பிரசாத்
    B) டாக்டர். B.R. அம்பேத்கார்
    C) ஜவஹர்லால் நேரு
    D) மகாத்மா காந்தி
  46. இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் “அடிப்படைக் கூறுகள்” எனும் கோட்பாடு எந்த வழக்கின் தீர்ப்பில் உருவாக்கப்பட்டது?
    [2019-GENERAL STUDIES-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)]
    A) கிருஷ்ணசுவாமி V. இந்திய ஒன்றியம். 1992
    B) கேசவானந்த பாரதி V. இந்திய ஒன்றியம், 1973
    C) எஸ்.ஆர்.பொம்மை V. இந்திய ஒன்றியம், 1994
    D) குல்தீப் நாயர் V. இந்திய ஒன்றியம், 2006
  47. கீழ்கண்டவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
    [2019-GENERAL STUDIES-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)]
    A) அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் – டிசம்பர் 9, 1946
    B) நேரு முக்கிய நோக்கங்கள் தீர்மானம் அரசியலமைப்பு நிர்ணய சபையில் கொண்டு வந்தது – நவம்பர் 13, 1946
    C) அரசியலமைப்பு நிர்ணய சபையின் இறுதி கூட்டம் – ஜனவரி 24, 1950
    D) அரசியலமைப்பு நிர்ணய சபை தேசிய கொடியை ஏற்றுக் கொண்ட நாள் – ஜூலை 22, 1947
  48. கீழ்கண்டவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை?
    [2019-GENERAL STUDIES-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)]
    A) மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் – Art. 261
    B) பட்டியலிட்ட மற்றும் பழங்குடியின பகுதி நிர்வாகம் – Art. 244
    C) அகில இந்திய பணிகள் – Art. 312
    D) நிர்வாகத் தீர்ப்பாணையம்- Art. 323 A
  49. கீழ்கண்டவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை?
    [2019-GENERAL STUDIES-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)]
    A) VII – யூனியன் பிரதேசங்கள்
    B) IX – பஞ்சாயத்துக்கள்
    C) XVIII – அவசரநிலை சட்டங்கள்
    D) XV – தேர்தல்கள்
  50. “Meritocracy” என்பது
    [2019-EDUCATION-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)]
    A) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆய்வது
    B) கல்வியாளர்கள் மற்றும் திறமையானவர்கள் ஆள்வது
    C) இராணுவத்தினர் ஆய்வது
    D) வழிமரபினர் ஆள்வது
  51. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தர தலைவர் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்?
    [GKT-101-2019-COST ASSISTANT IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2016 – 2017)]
    A) 1945
    B) 1947
    C) 1946
    D) 1950
  52. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு
    [2019 LIBRARIAN IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE/ Sections]
    A) 1950 ஜனவரி 26
    B) 1947 ஜனவரி 25
    C) 1949 நவம்பர் 24
    D) 1945 நவம்பர் 26
  53. மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் யார்?
    [2019 LIBRARIAN IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE/ Sections]
    A) அரிஸ்டாட்டில்
    B) சிசிரோ
    C) மாக்கியவெல்லி
    D) வாலஸ் கிரஹாம்
  54. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் பேரவையின் தலைவராக செயல்பட்டவர்
    [2019 LIBRARIAN IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE/ Sections]
    A) Dr. B.R. அம்பேத்கர்
    B) Dr. ராஜேந்திர பிரசாத்
    C) ஜவஹர்லால் நேரு
    D) காந்திஜி
  55. இந்திய அரசியல் அமைப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
    [2019-GENERAL STUDIES-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT]
    A) 26 ஜனவரி
    B) 26 ஆகஸ்ட்
    C) 26 நவம்பர்
    D) 26 டிசம்பர்
  56. தேசிய உறுதிமொழி முதன்முதலில் எந்த மொழியில் உருவாக்கப்பட்டது?
    [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)]
    A) சமஸ்கிருதம்
    B) இந்தி
    C) தெலுங்கு
    D) உருது
  57. மக்களாட்சி என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார்?
    [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)]
    A) நெல்சன் மண்டேலா
    B) ஹெரோடோட்டஸ்
    C) இந்தியர்கள்
    D) அரிஸ்டாட்டில்
  58. அரசியல் அறிவியலை ஒரு கலைப் பாடமாகக் கருதியவர்கள்
    [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)]
    A) மாண்டெஸ்கீயூ, மைட்லேன்ட்
    B) மைட்லேன்ட், ப்லன்ட்சிலி
    C) அகஸ்டே கோம்டே, போடின்
    D) மைட்லேன்ட், அகஸ்டே கோம்டே
  59. பொருத்துக: பட்டியல் I பட்டியல் II (a) மார்க்கிய அணுகு முறை சிந்தனையாளர் 1. பிரடெரிக் எங்கெல்ஸ் (b) பொருளியல் அணுகு முறை சிந்தனையாளர் 2. சபைன் (c) வரலாற்று அணுகு முறை சிந்தனையாளர் 3. ஜேம்ஸ் பிரைஸ் (d) நிறுவன அணுகு முறை சிந்தனையாளர் 4. அன்ட்டோனியோ கிராம்ஸ்கி
    [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)]
    A) 2 1 4 3
    B) 4 3 1 2
    C) 4 1 2 3
    D) 3 1 2 4
  60. எந்த நாட்டின் நிர்வாக சிறப்புக் கூறுகளாக “நிழல் அமைச்சரவை” அமைந்துள்ளது?
    [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)]
    A) ஜப்பான்
    B) பிரிட்டன்
    C) அ.ஐ.நா
    D) பிரான்ஸ்
  61. இந்தியாவில் எப்போது மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன?
    [2019 DRAUGHTSMAN, GRADE-III IN THE TOWN AND COUNTRY PLANNING DEPARTMENT IN THE TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE (2017-2018)]
    A) 1996
    B) 1998
    C) 2000
    D) 2004
  62. அரசமைப்பு அவையின் முதல் கூட்ட தொடரினை தலைமை வகித்தது யார்?
    [2019-PAPER I-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE]
    A) இராஜேந்திர பிரசாத்
    B) சச்சிதானந்த சின்கா
    C) ஆலடி கிருஷ்ணசாமி ஐயர்
    D) N.கோபாலசாமி ஐயங்கார்
  63. அரசமைப்பு அவை முதன் முதலாக கூடிய கூட்டத்தின் தேதி
    [2019-PAPER I-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE]
    A) 9 ஏப்ரல் 1947
    B) 8 மார்ச் 1946
    C) 9 டிசம்பர் 1946
    D) 9 நவம்பர் 1946
  64. பொருத்துக: சட்டப்பிரிவு ஆண்டு (a) குழந்தை தொழிலாளர் சட்டம் 1. 2007 (b) பதிப்புரிமை சட்டம் 2. 1986 (c) டௌரி தடுப்புச் சட்டம் 3. 2012 (d) மின்சார சட்டம் 4. 2016
    [2019 ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SERVICE]
    A) (a) 4, (b) 3, (c) 2, (d) 1
    B) (a) 1, (b) 2, (c) 3, (d) 4
    C) (a) 1, (b) 3, (c) 2, (d) 4
    D) (a) 4, (b) 2, (c) 3, (d) 1
  65. திரைப்பட சுருள் சட்டம் 1952 ன் பிரிவு 5 A விவரிப்பது
    [2019 ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SERVICE]
    A) திரைப்பட சான்றளித்தல் பற்றி
    B) ஆலோசனை குழு பற்றி
    C) திரைப்படத்தை பரிசோதிப்பது பற்றி
    D) தண்டனை பற்றி
  66. பதிப்புரிமை சட்டத்தின் கீழ் நாடக படைப்பு பற்றி வரையறை செய்துள்ள சட்டப்பிரிவு
    [2019 ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SERVICE]
    A) பிரிவு 2(g)
    B) பிரிவு 2(h)
    C) பிரிவு 2(i)
    D) பிரிவு 2(j)
  67. இரயில்வே சொத்து (சட்டமுரணான உடமை) சட்டம் 1966-ன் பிரிவு 10 விவரிப்பது
    [2019 ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SERVICE]
    A) சோதனை ஆணை வழங்குவது
    B) பறிமுதல் செய்யும் அதிகாரம்
    C) கைது செய்யப்பட்ட நபரை அப்புறப்படுத்துவது
    D) இச்சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள் பற்றி
  68. சூதாட்ட சட்டம் 1867-ன் படி சூதாட்ட விடுதி வைத்திருக்கும் கட்டிட உரிமையாளர் அல்லது நடத்துபவருக்கு வழங்கப்படும் சிறை தண்டனையானது அளவு வரை நீட்டிக்க தக்கதாகும்.
    [2019 ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SERVICE]
    A) ஒரு மாதம்
    B) இரண்டு மாதம்
    C) மூன்று மாதம்
    D) ஆறு மாதம்
  69. பொது சொத்துக்கள் சிதைப்பு (தடுப்பு) சட்டம்-1984 ன் படி “பொது சொத்து” என்பது கீழ்கண்டவற்றை உள்ளடக்கும். (i) மைய அரசின் சொத்து (ii) மாநில அரசின் சொத்து (iii) நிறுவனங்களின் சொத்து (iv) நிறுமங்களின் சொத்து கீழ்வருவனவற்றின் சரியான குறியீடு தேர்வு செய்க:
    [2019 ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SERVICE]
    A) (i) மட்டும் சரி
    B) (i) மற்றும் (ii) சரி
    C) (i), (ii) மற்றும் (iii) சரி
    D) (i), (ii) மற்றும் (iv) சரி
  70. கீழ்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க. (a) விதி 370 1. சட்டப்பேரவை (b) விதி 153 2. முதலமைச்சர் (c) விதி 163 3. ஜம்மு மற்றும் காஷ்மீர் (d) விதி 170 4. ஆளுநர் IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE
    [2019-TECHNICAL ASSISTANT [AIR CONDITIONING & GAS PLANT]
    A) 1 4 2 3
    B) 3 1 4 2
    C) 2 4 1 3
    D) 3 4 2 1
  71. வருமான வரியைச் செலுத்துதல் என்பது எதனைக் குறிக்கிறது.
    [2019 HOSTEL SUPERINTENDENT – CUM- PHYSICAL TRAINING OFFICER IN TAMIL NADU]
    A) பாரம்பரிய ஆளுமை
    B) பகுத்தறிவு சட்ட ஆளுமை
    C) சிறப்பு இயல்புகளையுடைய தலைமை ஆளுமை
    D) மேற்கூறிய அனைத்தும்
  72. அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிராந்திய அரசியலமைப்பு கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார்?
    [2019 POSTS INCLUDED IN CSS-I EXAMINATION IN TAMIL NADU]
    A) V. தாக்கர்
    B) H.C. முகர்ஜி
    C)
    D) சர்தார் வல்லபாய் பட்டேல்
  73. கீழ்கண்டவற்றில் எவர் வரைவுக் குழுவில் உறுப்பினராக இடம் பெறவில்லை?
    [2019 POSTS INCLUDED IN CSS-I EXAMINATION IN TAMIL NADU]
    A) K.M. முன்ஷி
    B) அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
    C) பட்டாபி சித்தாராமய்யா
    D) கிருஷ்ணமாசாரி
  74. I. அரசியலமைப்புச் சட்டம் என்பது சட்டமன்றங்களால் உருவாக்கப்படுவதல்ல; மாறாக அம் மன்றங்களுக்கான ஆதார மூலம் ஆகும் II. வரன்முறைப்படுத்தப்பட்ட அரசாங்கம் என்பதன் மீதான நம்பிக்கை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே முகிழ்த்தெழுகிறது மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
    [2019 POSTS INCLUDED IN CSS-I EXAMINATION IN TAMIL NADU]
    A) I மட்டுமே
    B) II மட்டுமே
    C) I மற்றும் II இரண்டும் சரியே
    D) I மற்றும் II இரண்டுமே சரியல்ல
  75. அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு தலைவர்
    [2019 SENIOR TECHNICAL ASSISTANT & JUNIOR TECHNICAL ASSISTANT IN DEPARTMENT OF HANDLOOMS IN THE TAMIL NADU HANDLOOMS AND TEXTILES SUBORDINATE SERVICE]
    A) திரு. C. இராஜகோபாலாச்சாரியார்
    B) Dr. B.R. அம்பேத்கர்
    C) திரு. ஜவஹர்லால் நேரு
    D) Dr. இராஜேந்திர பிரசாத்
  76. அரசியலமைப்பு சட்டத்தை இயற்றுவதற்கு அரசியலமைப்பு நிர்ணய சபை எடுத்துக் கொண்ட கால அளவு
    [2019-GENERAL SUDIES-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU]
    A) 2 வருடங்கள், 11 மாதங்கள், 18 நாட்கள்
    B) 2 வருடங்கள், 8 மாதங்கள், 11 நாட்கள்
    C) 2 வருடங்கள், 11 மாதங்கள், 8 நாட்கள்
    D) 2 வருடங்கள், 11 மாதங்கள், 11 நாட்கள்
  77. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
    [2019-GENERAL SUDIES-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU]
    A) 15 ஆகஸ்ட் 1947
    B) 30 அக்டோபர் 1948
    C) 15 ஜனவரி 1950
    D) 26 ஜனவரி 1950
  78. அரசமைப்பு அவை முழுமையான இறையாண்மை வாய்ந்தது என்று எந்த சட்டம் கூறியது
    [GENERAL STUDIES-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES]
    A) 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச்சட்டம்
    B) 1947 ஆம் ஆண்டின் இந்திய சுதந்திரச் சட்டம்
    C) 1935 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம்
    D) 1909 ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம்
  79. இந்திய அரசியலமைப்பு பற்றி கீழ்கண்டவற்றுள் எது உண்மை? IN THE TAMIL NADU TREASURIES AND ACCOUNTS SERVICE
    [2019 ACCOUNTS OFFICER, CLASS III [SHORTFALL VACANCIES]
    A) நவம்பர் 26, 1949 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனவரி 26, 1950 சட்டமாக்கப்பட்டது
    B) ஜனவரி 26, 1949 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு நவம்பர் 26, 1950ல் சட்டமாக்கப்பட்டது.
    C) ஜனவரி 26, 1950ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
    D) நவம்பர் 26, 1950ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
  80. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பை மாற்ற இயலாது என்று கூறிய உச்ச நீதிமன்ற தீர்ப்பானது IN THE TAMIL NADU GENERAL SERVICE
    [2019-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR CHILD DEVELOPMENT PROJECT OFFICER WOMEN CANDIDATE ONLY]
    A) கோலகநாத் வழக்கு
    B) சங்கரி பிரசாத் வழக்கு
    C) வாமன் ராவ் வழக்கு
    D) கேசவநந்தா பாரதி வழக்கு
  81. பின்வரும் தலைவர்களுள் யார் இந்திய அரசமைப்பு வரைவு குழு உறுப்பினர் அல்ல
    [2019-PAPER I-JAILOR IN THE TAMIL NADU JAIL SERVICE]
    A) புருஷோத்தம் தாஸ் தான்டன்
    B) எம். ஆர். மசானி
    C) மகாத்மா காந்தி
    D) அப்துல் காபர் கான்
  82. இந்திய அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவின் முதல் கூட்டம் எப்பொழுது நடைபெற்றது?
    [2019-PAPER I-JAILOR IN THE TAMIL NADU JAIL SERVICE]
    A) 9. 12.1946
    B) 15. 12.1946
    C) 26. 11.1949
    D) 26. 1.1950
  83. இந்திய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன?
    [2020 VETERINARY ASSISTANT SURGEON IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE]
    A) 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள்
    B) 2 ஆண்டுகள், 9 மாதங்கள், 15 நாட்கள்
    C) 2 ஆண்டுகள், 8 மாதங்கள், 10 நாட்கள்
    D) 2 ஆண்டுகள், 7 மாதங்கள், 8 நாட்கள்
  84. இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் பெயர் யாது?
    [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES]
    A) இந்தியன் மற்றும் இந்துஸ்தான்
    B) இந்தியா மற்றும் பாரதம்
    C) பாரதம்
    D) இந்தியா, பாரதம், இந்துஸ்தான்
  85. இந்திய அரசியலமைப்பை உருவாக்க வரைவுக்குழு எடுத்துக்கொண்ட காலம்
    [2022-EXECUTIVE OFFICER, GRADE- III (GROUP- VII- B SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE]
    A) 2 ஆண்டுகள், 11 மாதம், 18 நாள்
    B) 2 ஆண்டுகள், 9 மாதம், 8 நாள்
    C) 2 ஆண்டுகள், 7 மாதம், 18 நாள்
    D) 2 ஆண்டுகள், 5 மாதம், 20 நாள்
    E) விடை தெரியவில்லை
  86. இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் யார்?
    [2022-EXECUTIVE OFFICER, GRADE- III (GROUP- VII- B SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE]
    A) டாக்டர். B.R. அம்பேத்கர்
    B) இராஜேந்திர பிரசாத்
    C) ஜவஹர்லால் நேரு
    D) மேற்கூறியவற்றுள் எவருமில்லை
    E) விடை தெரியவில்லை
  87. சுதந்திர இந்தியாவிற்கு ஓர் அரசமைப்புச் சட்டம் வேண்டும் என முதலில் பரிந்துரைத்தவர்
    [2022 COMBINED CIVIL SERVICES EXAMINATION- I IN GROUP- I SERVICES]
    A) மோதிலால் நேரு
    B) M.N. ராய்
    C) சுபாஷ் சந்திர போஷ்
    D) மகாத்மா காந்தி
    E) விடை தெரியவில்லை
  88. கீழ்க்கண்ட மூன்று கூற்றுகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த சரியான கூற்றைக் கண்டறிக. (i) இந்திய அரசியலமைப்புச் சட்டம் சமூகங்களால் கட்டமைக்கப்பட்ட ஓர் ஆவணம் (ii) இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது எழுதப்படாத மரபுகளும் வழக்காறுகளும் ஆகும் (iii) இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது பாராளுமன்றத்தாலும் நீதிமன்றத்தாலும் உரைவிளக்கம் செய்யப்படும் ஒரு பனுவல்
    [2022-ASSISTANT CONSERVATOR OF FORESTS INCLUDED IN GROUP-IA]
    A) (i) மட்டும்
    B) (i) மற்றும் (iii) ஆகியன மட்டும்
    C) (i) மற்றும் (ii) ஆகியன மட்டும்
    D) (ii) மற்றும் (iii) ஆகியன மட்டும்
    E) விடை தெரியவில்லை
  89. ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவது.
    [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE]
    A) நவம்பர் 26ம் நாள்
    B) ஜனவரி 26ம் நாள்
    C) ஆகஸ்ட் 15ம் நாள்
    D) அக்டோபர் 10ம் நாள்
    E) விடை தெரியவில்லை
  90. இந்திய அரசமைப்பு அவை உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள்
    [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE]
    A) 17 டிசம்பர் 1946
    B) 9 டிசம்பர் 1946
    C) 25 டிசம்பர் 1945
    D) 13 டிசம்பர் 1945
    E) விடை தெரியவில்லை
  91. இந்திய அரசியலமைப்பு சபை தொடர்பான தவறான கூற்றை தேர்ந்தெடுக்க
    [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE]
    A) முதல் கூட்டமானது 9 டிசம்பர் 1946 அன்று நடைபெற்றது
    B) வரைவு குழுவின் தலைவராக முனைவர் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்
    C) அரசமைப்பு சபை சட்டமியற்றும் மன்றமாக செயல்படவில்லை
    D) அரசியலமைப்பின் சில பிரிவுகள் 26 நவம்பர் 1949 அன்று நடைமுறைக்கு வந்தன
    E) விடை தெரியவில்லை
  92. இந்திய அரசியலமைப்பு அவையின் முதல் கூட்டத்தில் கீழ்க்காணும் நபர்களில் யார் நிரந்தர தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
    [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE]
    A) டாக்டர். பீமராவ் அம்பேத்கர்
    B) மகாத்மா காந்திஜி
    C) டாக்டர். ராஜேந்திர பிரசாத்
    D) ஜவஹர்லால் நேரு
    E) விடை தெரியவில்லை
  93. 24. 01.1950 அன்று இந்திய பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு நிர்ணய சபையை சார்ந்த எத்தனை வகுப்பினர்கள் கையொப்பமிட்டனர்.
    [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE]
    A) 280
    B) 282
    C) 284
    D) 285
    E) விடை தெரியவில்லை
  94. இந்திய அரசமைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு
    [2023 COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES IN T.N]
    A) 26 டிசம்பர் 1949
    B) 26 ஜனவரி 1950
    C) 26 நவம்பர் 1949
    D) 30 நவம்பர் 1949
    E) விடை தெரியவில்லை
  95. இந்தியாவின் முழுமையான இறையாண்மை அதிகாரம் பெற்றிருப்பது
    [GENERAL STUDIES-2023 INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE]
    A) இந்திய மக்கள்
    B) இந்திய பிரதமர்
    C) இந்திய குடியரசுத் தலைவர்
    D) தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தலைவர்கள்
    E) விடை தெரியவில்லை
  96. சரியான விடையை தேர்ந்தெடு: ஐவர் ஜென்னிங்ஸ் 1. நீதித்துறை முறைமை b எப்.ஜி. குட்நோ 2. சட்டத்தின் வகைப்பாடு c டபல்யூ. பி. முன்ரோ 3. சட்டத்தின் நிர்வாக உடன்பாடு d சி.எப். ஸ்ட்ராங் 4. பொதுச் சட்ட பிரிவு 2023-PUBLIC ADMINISTRATION-BURSAR IN TAMIL NADU EDUCATIONAL SERVICE
    [a]
    A) 3 4 1 2
    B) 4 2 3 1
    C) 2 3 4 1
    D) 1 2 3 4
    E) விடை தெரியவில்லை
  97. சரியான சமமான விடையை தேர்ந்தெடுக்க: (1) நீதிப்புனராய்வு நீதிமன்றங்கள் (2) சட்டத்தை உருவாக்கும் அமைப்பு ஊடகங்கள் (3) கொள்கை உருவாக்கம் நிர்வாகிகள் (4) சட்டத்திற்கு விளக்கமளிப்பது சட்டத்துறை
    [2023-PUBLIC ADMINISTRATION-BURSAR IN TAMIL NADU EDUCATIONAL SERVICE]
    A) 1 மற்றும் 2 சரி
    B) 1 மற்றும் 3 சரி
    C) 2 மற்றும் 4 சரி
    D) 3 மற்றும் 4 சரி
    E) விடை தெரியவில்லை
  98. ‘பொது நிர்வாகம் என்பது பொதுக் கொள்கையை அமல்படுத்துவதாகும்’ என்ற கூற்றை வலியுறுத்தியவர்
    [2023-PUBLIC ADMINISTRATION-BURSAR IN TAMIL NADU EDUCATIONAL SERVICE]
    A) L.D. ஒயிட்
    B) லூயிஸ் ப்ரவுன்லொ
    C) லூதர் குல்லிக்
    D) ஆப்பிள்பை
    E) விடை தெரியவில்லை
  99. இந்திய அரசமைப்பு விதி 264 முதல் 300A வரை பகுதி _______ -ல் அடங்கும்.
    [2023 VETERINARY ASSISTANT SURGEON IN TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE]
    A) IX
    B) X
    C) XI
    D) XII
    E) விடை தெரியவில்லை
  100. இந்திய அரசியலமைப்பு படி, இந்தியாவை கீழ்கண்ட பெயரிலும் அழைக்கமுடியும்
    [PAPER I-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE]
    A) இந்துஸ்தான்
    B) இந்திய துணை கண்டம்
    C) பாரத்
    D) டொமினியன்
    E) விடை தெரியவில்லை
  101. கீழ்க்காணும் எந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அடிப்படை அமைப்பு கோட்பாட்டினை தோற்றுவித்தது?
    [PAPER I-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE]
    A) சங்கரி பிரசாத் வழக்கு
    B) கேசவானந்த பாரதி வழக்கு
    C) ஏ.கே. கோபாலன் வழக்கு
    D) செண்பகம் துரைராஜன் வழக்கு
    E) விடை தெரியவில்லை
  102. கீழ்கண்ட இந்திய அரசியலமைப்பின் தன்மை குறித்த கருத்துகளில் எது தவறு?
    [PAPER I-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE]
    A) எழுதப்பட்ட அரசியலமைப்பு
    B) அரசமைப்பு நிர்ணய சபையினால் எழுதப்பட்டது
    C) இயற்றப்பட்ட மற்ற சட்டங்களிலிருந்து வேறுபட்டது
    D) வழக்காறுகளை அடிப்படையாக கொண்டது
    E) விடை தெரியவில்லை
  103. ஒரு சிறந்த அரசியலமைப்புக்கான கூறுகளாக கூறப்பட்டுள்ளவற்றில் எது சரி?
    [PAPER I-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE]
    A) எளிய மொழி, நீதித்துறை சுதந்திரம், அரசியலமைப்பு திருத்த நடைமுறை
    B) நுட்பமான மொழி, நீதித்துறை சுதந்திரம், அரசியலமைப்பு திருத்த நடைமுறை இல்லாமலிருப்பது
    C) சட்ட மொழி, கீழ்படிந்த நீதிமன்றம், அரசியலமைப்பு திருத்த நடைமுறை இல்லாமலிருப்பது
    D) நுட்பமான மொழி, கீழ்படிந்த நீதிமன்றம், அரசியலமைப்பு திருத்த நடைமுறை இல்லாமலிருப்பது
    E) விடை தெரியவில்லை
  104. இந்திய அரசியலமைப்பு சட்டம், ஷரத்து 366 (24) எதைப் பற்றி வரையறை செய்கிறது?
    [PAPER I-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE]
    A) உயர்நீதிமன்றம்
    B) பட்டியல் வகுப்பினர்
    C) பட்டியல் பழங்குடியினர்
    D) வரிவிதிப்புகள்
    E) விடை தெரியவில்லை
  105. பின்வரும் எந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை உருவாக்கியது?
    [PAPER I-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE]
    A) மினர்வா ஆலைகள் வழக்கு
    B) வாமன் ராவ் வழக்கு
    C) இந்திரா நேரு காந்தி வழக்கு
    D) கேசவானந்த பாரதி வழக்கு
    E) விடை தெரியவில்லை
  106. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்க்காணும் சரத்துகளை அவற்றுக்கான அரசியலமைப்புக் கோட்பாட்டுடன் பொருத்துக: (a) சட்டப் பிரிவு 13 1. ஆட்சிப் பரப்பிணைவுக் கோட்பாடு (b) சட்டப் பிரிவு 31 2. உட்கரு மற்றும் அடிப்படை பொருள் கூறு கோட்பாடு (c) சட்டப் பிரிவு 245 3. இடைமறைப்பு மற்றும் பிரிபடும் தன்மைக் கோட்பாடு (d) சட்டப் பிரிவு 246 4. சொத்தெடுப்புரிமைக் கோட்பாடு
    [2023 JUNIOR SCIENTIFIC OFFICER IN TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE]
    A) 1 3 4 2
    B) 3 1 2 4
    C) 3 4 1 2
    D) 2 4 3 1
    E) விடை தெரியவில்லை
  107. கூற்று : பகுத்தறிவுடன் விவாதிக்கப்பட்ட ஓர் ஒழுங்கு முறை ஆவணமே இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகும். காரணம் (R) : பல்வேறு கருத்துடைய குழுக்கள் கூடிக் கலந்து விவாதித்துத் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தத்தை எட்டிய இடமே இந்திய அரசியல் அமைப்புச் சபையாகும். 2023 JUNIOR SCIENTIFIC OFFICER IN TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE
    [A]
    A) உண்மை; ஆனால் R தவறு
    B) தவறு; ஆனால் R உண்மை
    C) மற்றும் R இரண்டுமே சரி; அத்துடன் R என்பது விற்கான சரியான விளக்கமாகும்
    D) மற்றும் R இரண்டுமே சரி; ஆனால் (R) என்பது விற்கான சரியான விளக்கமாகாது
    E) விடை தெரியவில்லை

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | இந்திய அரசியலமைப்பு| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

  • TNPSC இந்திய அரசியலமைப்பு
  • இந்திய அரசியலமைப்பு TNPSC Questions
  • Indian Constitution TNPSC
  • Indian Constitution Previous Year Questions
  • TNPSC Indian Polity PYQ
  • TNPSC Polity Previous Year Questions
  • இந்திய அரசியல் TNPSC
  • அடிப்படை உரிமைகள் TNPSC
  • அடிப்படை கடமைகள் TNPSC
  • அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் TNPSC
  • Constitutional Articles TNPSC
  • TNPSC Group 4 Polity Questions
  • TNPSC Group 2 Polity Questions
  • TNPSC Group 2A Polity Questions
  • TNPSC PYQ

Please disable your adblocker this site!

FREE 10,000+ MCQ PDF

X

You cannot copy content of this page