
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download Now
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
இயல் 3
2448. முன்பின் அறியாத புதியவர்களுக்கு என்ன பெயர்?
2449. விருந்தே புதுமை என அழைப்பவர் யார்?
2450. இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே எனக் கூறுபவர்?
2451. திருவள்ளுவர் ,முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை எந்த குறளில் எடுத்துரைக்கிறார்?
2452. “…தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என விருந்தினரை போற்றும் முடியாத நிலையை எண்ணி வருந்துவது யார்?
2453. “…தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2454. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாக குறிப்பிட்டுள்ளவர் யார்?
2455. “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே” இந்த வரிகள் இடம் பெற்ற நூல்?
2456. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல” இந்த வரிகள் இடம் பெற்ற நூல்?
2457. கலிங்கத்துப்பரணி நூலை இயற்றியவர்?
2458. தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை எது?
2459. “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
2460. “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே” இவ்வரிகளை இயற்றியவர்?
2461. “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” இவ்வரிகள் பெற்ற நூல்?
2462. “காலின் ஏழடி பின் சென்று” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2463. “குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
2464. “நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் இருமுறை பழவாள் வைத்தனன் இன்று” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
2465. எந்த நாயன்மாரின் வரலாற்றில் வீட்டிற்கு வந்த சிவனடியாருக்கு விருந்தளிக்க விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து விருந்து படைத்த திறம் பெரிய புராணத்தில் கூறப்படுகிறது?
2466. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என கூறும் நூல் எது?
2467. “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
2468. “மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2469. கொன்றைவேந்தன் நூலை இயற்றியவர்?
2470. யாருடைய காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோருக்காக மிகுதியாக கட்டப்பட்டன?
2471. விருந்துக்குப் உணவு பரிமாற பயன்படும் வாழையிலையின் குறுகலான பகுதி எந்த பக்கம் வரவேண்டும்?
2472. எந்த தமிழ் சங்கம் “வாழையிலை விருந்து விழா”வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது?
2473. “இட்டதோர் தாமரைப் பூ இதழ் விரித்து திருத்தல் போலே வட்டமாய் புறாக்கள் கூடி இரையுண்ணும்” இவ்வரிகளை இயற்றியவர்?
2474. “விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்..” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2475. “ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும் ” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
2476. காசி காண்டம் எந்த நகரத்தின் பெருமைகளை கூறுகின்ற நூல்?
2477. காசி காண்டம் எனும் நூலை எழுதியவர் யார்?
2478. அதிவீரராம பாண்டியர் எந்த இடத்தின் அரசர்?
2479. அதிவீரராம பாண்டியன் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?
2480. வெற்றிவேற்கை நூலின் வேறு பெயர் என்ன?
2481. “நோனாச் செருவின் வலம்படு நோன்றாள் மான விறல்வேள் வயிரியம் எனினே” இவ்வரிகளில் குறிப்பிடப்படும் மன்னன் யார்?
2482. “நோனாச் செருவின் வலம்படு நோன்றாள் மான விறல்வேள் வயிரியம் எனினே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2483. வள்ளலை நாடு எதிர்வரும் கூத்தனை அழைத்து யாம் இவ்விடத்தை சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம் நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக எனக் கூறுவது?
2484. மலைபடுகடாம் நூலை எழுதியவர் யார்?
2485. மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்டது?
2486. மலைபடுகடாம் வேறு எவ்வாறு வழங்கப்படும்?
2487. யாரை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கூத்தராற்றுப்படை இயற்றப்பட்டுள்ளது?
2488. கோபல்லபுரத்து மக்கள் எனும் சிறுகதையை எழுதியவர்?
2489. கோவில்பட்டியை சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் என்ன?
2490. கரிசல் இலக்கியத்தின் எழுத்தாளர்கள் யார்யார்?
2491. கி. ராஜநாராயணனின் சொந்த ஊர் எது?
2492. கோபல்லபுரத்து மக்கள் எந்த ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது?
2493. எழுத்துலகில் கி.ரா. எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
2494. கரிசல் வட்டார சொல் அகராதியை உருவாக்கியவர் யார்?
2495. “கறங்கு இசை விழவின் உறந்தை..” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2496. “கறங்கு இசை விழவின் உறந்தை..” இவ்வரிகளில் இடம் பெற்ற இடம்?
2497. “மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2498. “கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போது அரிசி வரும் “- இவ்வரிகளை எழுதியவர்?
2499. திருக்குறள் தெளிவுரை நூலை எழுதியவர்?
2500. சிறுவர் நாடோடிக் கதைகள் என்னும் நூலை எழுதியவர்?
2501. ஆறாம் திணை என்னும் நூலை எழுதியவர்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :