FOR THIS ONLINE TEST-CLICK HERE
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
பொருள்: அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?
அருஞ்சொற்பொருள்: சிறப்பு-பெருமை; ஈனும்-பெற்றுத் தரும்; செல்வமும்-செல்வமும். பொருளும்; ஈனும்-அளிக்கும்; அறத்தின்-அறத்தைக் காட்டிலும்; ஊ(உ)ங்கு-விஞ்சிய, மேற்பட்ட; ஆக்கம்-மேல் மேல் உயர்தல்; எவனோ-யாதோ?, எதுவாக இருக்க முடியும்?; உயிர்க்கு-உயிருக்கு, (மாந்தர்க்கு).
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
பொருள்: ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.
அருஞ்சொற்பொருள்: அறத்தின் -நற்செயலைக் காட்டிலும், அறத்தில்; ஊ(உ)ங்கு-மேற்பட்ட, விஞ்சிய; ஆக்கமும்-வளர்ச்சியும், மேன்மேல் உயர்தலும், செல்வமும்; இல்லை-இல்லை; அதனை-அதை (இங்கு அறத்தை); மறத்தலின்-மறத்தலைவிட; ஊங்கு-மேற்பட்ட; இல்லை-இல்லை; கேடு-அழிவு, தீமை, வறுமை.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்
பொருள்: செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: ஒல்லும்-இயலும்; வகையான்-திறத்தால், வழிகளில்; அறவினை-அறச்செயல்; ஓவாதே-ஒழியாமல், இடைவிடாமலே; செல்லும்-இயலும், செய்யத்தகும், எய்தும்; வாய்-இடம்; எல்லாம்-அனைத்தும்; செயல்-செய்க.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற
பொருள்: ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
அருஞ்சொற்பொருள்: மனத்துக்கண்-உள்ளத்தில்; மாசு-குற்றம்; இலன்-இல்லாதவன்; ஆதல்-ஆகுதல்; அனைத்து-எல்லா, அந்தஅளவு; அறன்-அறம்; ஆகுல-ஆரவாரம், ஆடம்பரம், இரைச்சல், வெளிப்பகட்டு; நீர-தன்மையுடையன; பிற-மற்றவை.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
பொருள்: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.
அருஞ்சொற்பொருள்: அழுக்காறு-(பிறர் ஆக்கம்) பொறாமை; அவா-பேராசை; வெகுளி-சினம்; இன்னாச்சொல்-தீயமொழி; நான்கும்-(இவை) நாலும்; இழுக்கா- இழுக்கி அதாவது விலக்கி; இயன்றது-நடந்தது; அறம்-அறம், நற்செயல்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
பொருள்: இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.
அருஞ்சொற்பொருள்: அன்று-பின்நாளில்; அறிவாம்-நாம் அறிந்து செய்வோம்; என்னாது-எனக் கருதாமல், என்று எண்ணாமல்; அறம்-நல்வினை; செய்க-செய்யவேண்டும்; மற்று-(அசைநிலை); அது-அஃது; பொன்றுங்கால்-அழியும் காலத்தில்; பொன்றா-அழிவில்லாத; துணை-உதவி.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
பொருள்: பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
அருஞ்சொற்பொருள்: அறத்தாறு-அறத்தின் பயன், அறத்தினது வழி; இது என-இது என்று; வேண்டா-வேண்டாம், வேண்டுவதில்லை; சிவிகை-பல்லக்கு; பொறுத்தானோடு-சுமப்பவனோடு; ஊர்ந்தான்-பயணிப்பவன்; இடை-இடம்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
பொருள்: ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
அருஞ்சொற்பொருள்: வீழ்நாள்-வீணாகின்ற நாள்; படாஅமை-உண்டாகாமல்; நன்று-நல்லவை, அறம்; ஆற்றின்-செய்தால்; அஃது-அது; ஒருவன்-ஒருவன்; வாழ்நாள்-(பயனின்றி) உயிரோடிருக்கின்ற நாள்; வழி-பாதை; அடைக்கும்-மூடுகின்ற; கல்-கல்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழு மில
பொருள்: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.
அருஞ்சொற்பொருள்: அறத்தான்-அறத்தால், அற வழியால், அறவழி வாழ்வினால், அறத்தோடு பொருந்தி; வருவதே-வருவதே, நிகழ்வதே; இன்பம்-மகிழ்ச்சி; மற்றெல்லாம்-(அறமல்லாத வழியில் வரும்) பிறவெல்லாம்; புறத்த-புறம்பாவன, அறத்துக்குப் புறம்பாவன, நீக்கத்தக்கன, (இன்பத்துக்கு) வேறாயுள்ளவை; புகழும்-புகழும்; இல-இல்லை.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
பொருள்: ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே, செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.
அருஞ்சொற்பொருள்: செயல்-செய்யல், செய்தல்; பாலது-பான்மையது, தன்மையுடையது, தக்கது; ஓரும்-ஆராய்ந்துணரும், குறிக்கொண்டு கருதும்; அறனே-நற்செயலே, அறச்செயல்களே; ஒருவற்கு-ஒவ்வொருவர்க்கு(ம்); உயல்-தப்புதல், ஒழிதல், நீக்குதல், விடல்; பாலது-தன்மையுடையது; ஓரும்-ஆராய்ந்துணரும்; பழி-தீவினை, பழிக்கத்தக்க செயல்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அறன் வலியுறுத்தல்-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️