DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
இயல் 04
- “ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
பாரதிதாசன்
- “இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் !”
இவ்வரிகளை இயற்றியவர் யார்? பாரதிதாசன்
- பாரதிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
பாண்டியன் பரிசு ,அழகின் சிரிப்பு ,இசையமுது ,இருண்ட வீடு, குடும்ப விளக்கு ,கண்ணகி புரட்சிக் காப்பியம் ,பிசிராந்தையார்
- பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது?
பிசிராந்தையார்
- தமிழ்பேறு எனும் கவிதை பாரதிதாசனின் எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?
பாரதிதாசன் கவிதைகள்
- “கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம் ” இவ்வரிகளை இயற்றியவர்?
குமரகுருபரர்
- குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
பதினேழாம் நூற்றாண்டு
- குமரகுருபரர் இயற்றிய நூல்கள் என்னென்ன?
கந்தர் கலிவெண்பா ,கயிலைக் கலம்பகம் ,சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ,முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், நீதிநெறிவிளக்கம்
- நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை செய்யுள்கள் உள்ளன?
102 செய்யுள்கள்
- “பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்; எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்” என கூறியவர் யார்?
பாரதியார்
- திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணி செய்தவர் யார்?
திருக்குறளார். வீ .முனிசாமி
- திருக்குறளார். வீ .முனிசாமி இயற்றிய நூல்கள் என்னென்ன?
வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை, உலகப் பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் ,சிந்தனை கலஞ்சியம்
- பள்ளி மறுதிறப்பு எனும் சிறுகதையை எழுதியவர் யார்?
சுப்ரபாரதிமணியன்
- சுப்ரபாரதிமணியன் என்ன இலக்கிய இதழை நடத்தி வருகிறார்?
கனவு
- சுப்ரபாரதிமணியன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
பின்னல் ,வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண் ,கதை சொல்லும் கலை
இயல் 05
- தேனரசன் எழுதிய கவிதை நூல்கள் என்னென்ன?
மண்வாசல், வெள்ளைரோஜா ,பெய்து பழகிய மேகம்
- “கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
காளமேகப்புலவர்
- காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன ?
வரதன்
- காளமேகப் புலவர் இயற்றிய நூல்கள் என்னென்ன?
திருவானைக்கா உலா, சரசுவதி மாலை ,பரப்பிரம்ம விளக்கம் ,சித்திர மடல் மற்றும் சில தனிப் பாடல்கள்
- ஓவியம் வரையப் பயன்படும் துணிக்கு பெயர் என்ன?
எழினி, திரைச்சீலை, கிழி,படாம்
- எந்த நூலில் குணமாலை எனும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாக கூறப்பட்டுள்ளது?
சீவகசிந்தாமணி
- துணியில் வரையப்படும் ஓவியங்கள் தற்காலத்தில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
கலம்காரி ஓவியங்கள்
- “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” இவ்வரி இடம் பெற்ற நூல் எது?
நெடுநல்வாடை
- “புனையா ஓவியம் புறம் போந்தன்ன” இவ்வரி இடம்பெற்ற நூல் எது?
மணிமேகலை
- ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி என்ன நூலில் இடம்பெற்றுள்ளது?
பரிபாடல்
- “இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பரிபாடல்
- தந்த ஓவியங்களை எங்கு அதிகமாக காணமுடியும்?
கேரள மாநிலம்
- கேலிச் சித்திரங்களை பாரதியார் எந்த இதழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்?
இந்தியா
- ஓவியத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
ஓவு,ஓவியம், ஓவம், சித்திரம் ,படம்,படாம்,வட்டிகைச் செய்தி
- ஓவியம் வரைபவர்க்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
கண்ணுள் வினைஞர் ,ஓவியப் புலவர்,ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்
- ஓவியக் கூடத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
எழுதெழில் அம்பலம், எழுத்து நிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம் ,சித்திர மண்டபம் ,சித்திரசபை
- ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்திய கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்?
இராஜா இரவிவர்மா
- நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவர் யார்?
கொண்டைய ராஜு
- நாட்காட்டி ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
பசார் பெயிண்டிங்
- தஞ்சை சரசுவதிமகால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன?
கி.பி. 1122
- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
கிபி 1981
- தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் எவ்வளவு நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது?
ஆயிரம் ஏக்கர்
- இந்திய ஆட்சிப் பணி பயிற்சியாளர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சியை எந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது?
தஞ்சாவூர் ,தமிழ் பல்கலைக்கழகம்
- உ வே சா நூலகம் சென்னையில் எப்போது தொடங்கப்பட்டது?
கிபி 1942
- உவேசா நூலகத்தில் எத்தனை ஓலைச் சுவடிகளும் தமிழ் நூல்களும் உள்ளன?
2128 ஓலைச்சுவடிகள், 2941 தமிழ் நூல்கள்
- கீழ்த்திசை நூலகம் சென்னையில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1869
- சென்னை கன்னிமாரா நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1896
- கன்னிமரா நூலகத்தில் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன?
6 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள்
- எந்த நூலகத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு வருகிறது?
கன்னிமாரா நூலகம்
- சென்னை வள்ளுவர் கோட்டம் கோடம்பாக்கத்தில் எப்போது வடிவமைக்கப்பட்டது?
1973 இல் தொடங்கி 1976 இல் கட்டி முடிக்கப்பட்டது
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தேரின் மொத்த உயரம்?
128 அடி
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் என்ன நிற பளிங்கு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது?
கரு நிறப் பளிங்குகல்
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பொருட்பால் என்ன நிற பளிங்கு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது?
வெண்ணி நிறப் பளிங்குகல்
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்பத்துப்பால் என்ன நிற பளிங்கு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது?
செந்நிறப் பளிங்குகல்
- கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை எத்தனை அடி உயர பாறைமீது கட்டப்பட்டுள்ளது?
30 அடி
- திருவள்ளுவர் சிலையின் கட்டுமானப் பணிகள் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1990
- திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்கு எப்போது திறக்கப்பட்டது?
ஜனவரி 1 2000
- திருவள்ளுவர் சிலையின் மொத்த உயரம் எவ்வளவு?
95 அடி
- திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு எத்தனை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது?
3681 கருங்கற்கள் (ஏழாயிரம் டன்)
- மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது?
மதுரை மாநகரின் தல்லாகுளம் பகுதியில்
- மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் யாருடைய வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன?
தொல்காப்பியர், அவ்வையார் ,கபிலர்
- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கிய நகரம் எது?
பூம்புகார்
- பூம்புகார் நகரம் பற்றிய செய்திகள் எந்த நூல்களில் இடம்பெற்றுள்ளன?
சிலப்பதிகாரம் பட்டினப்பாலை
- பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் எனும் கடல் பகுதியும், பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகக் கூறும் நூல் எது?
சிலப்பதிகாரம்
- பூம்புகார் கடற்கரையில் சிற்ப கலைக்கூடம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
1973
இயல் 06
- ” மாரியென்று இன்றிவறந்திருந்த காலத்தும் பாரி படமகள் பாண்மகற்கு” இவ்வரிகளை இயற்றியவர்?
முன்றுரை அரையனார்
- ” ஒன்றாகு முன்றிலோ இல்” இவ்வரிய குறிப்பிடப்பட்டுள்ள பழமொழி எது?
ஒன்றுமில்லாத வீடு எதுவும் இல்லை
- பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார்?
முன்றுறையரையனார்
- முன்றுறையரையனாரின் காலம் என்ன?
கி.பி நான்காம் நூற்றாண்டு
- முன்றுறையரையனார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்?
சமணசமயம்
- பழமொழி நானூறு எத்தனைப் பாடல்களைக் கொண்டது?
400 பாடல்கள்
- நெல் தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளை பிரிப்பதற்காக மாடுகளை கொண்டு மிதிக்க செய்வதற்கு என்ன பெயர்?
போரடித்தல்
- நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடும் பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நாட்டுப்புறப் பாடல்
- நாட்டுப்புறப் பாடல் எந்த இலக்கிய வகையைச் சாரும்?
வாய்மொழி இலக்கியம்
- கி.வா ஜெகந்நாதன் தொகுத்த நாட்டுப்புற பாடல்களின் நூல் பெயர் என்ன?
மலையருவி
- பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது எது?
திருநெல்வேலி
- “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” எனப் பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர்
- திருநெல்வேலியின் சிறப்பை தண்பொருநைப் புனல்நாடு எனக் கூறியவர் யார்?
சேக்கிழார்
- முற்காலத்தில் திருநெல்வேலிக்கு என்ன பெயர் இருந்துள்ளது?
வேணுவனம்
- வேணுவனம் என்பதன் பொருள் என்ன?
மூங்கில் காடு
- “பொதியி லாயினும் இமயமன மாயினும் பதியெழு அறியாப் பழங்குடி” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
இளங்கோவடிகள்
- இலக்கியங்களில் திரிகூட மலை என வழங்கப்படும் மலை எது?
குற்றால மலை
- திருநெல்வேலி பகுதியை வளம் செழிக்க செய்யும் ஆறு எது?
தாமிரபரணி
- தாமிரபரணி நதிக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
தண்பொருநை
- தாமிரபரணியின் கிளை ஆறுகள் என்னென்ன?
பச்சையாறு ,மணிமுத்தாறு, சிற்றாறு ,காரையாறு ,சேர்வலாறு ,கடனாநதி
- இறந்தவர்களின் உடல்களை புதைக்க பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
ஆதிச்சநல்லூர்
- ஆதிச்சநல்லூர் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?
தூத்துக்குடி
- நெல்லை மாவட்டம் தமிழகத்தில் எந்த உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது?
நெல்லிக்காய்
- கொற்கை எனும் துறைமுகம் எந்த ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இருந்தது?
தாமிரபரணி
- “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
நற்றிணை
- “கொற்கையில் பெருந்துறை முத்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
அகநானூறு
- “திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே ” இவ்வரிகளை இயற்றியவர்?
திருஞானசம்பந்தர்
- காவற்புரை என்பதன் பொருள் என்ன?
சிறைச்சாலை
- கூலம் என்பது எதைக் குறிக்கும்?
தானியம்
- அக்கசாலை என்பது எதனை உருவாக்கும் இடம்?
அணிகலன்களும், பொற்காசுகளும்
- தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் உள்ள நகரம் எது?
திருநெல்வேலி
- தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் உள்ள நகரம் எது ?
பாளையங்கோட்டை
- எந்த இரு நகரங்கள் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன?
திருநெல்வேலி பாளையங்கோட்டை
- வணிகம் நடைபெறும் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
பேட்டை
- பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் எது?
பாண்டியபுரம்
- பாண்டிய மன்னனின் தேவியாகிய மங்கையர்க்கரசி மகளிர் எதிர்கொண்டு வரவேற்று இடம் எவ்வாறு வழங்கப்படுகிறது?
திருமங்கை நகர்
- திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்கு பெருமை சேர்த்தவர்கள் யார்?
மாறோக்கத்து நப்பசலையார் ,நம்மாழ்வார் ,பெரியாழ்வார் ,குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர் ,கவிராச பண்டிதர்
- வெங்கடேசுர எட்டப்ப ராஜாவை பற்றி பல பாடல்களைப் பாடியவர் யார்?
கடிகைமுத்துப் புலவர்
- தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கும் இடத்திற்கு பெயர் என்ன?
சீவலப்பேரி என்கிற முக்கூடல்
- ஸ்ரீவைகுண்டத்து பெருமாளைப் பற்றிப் பாடியவர் யார்?
பிள்ளைப் பெருமாள்
- நம்மாழ்வார் அவதார ஸ்தலமான ஆழ்வார்திருநகரிக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
திருக்குருகூர்
- சீதக்காதி என்ற வள்ளல் வாழ்ந்த இடம் எது?
காயல்பட்டினம்
- “வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உன்னை கூடாதென்றும் தடுப்பார் கோமதி தாய் ஈஸ்வரியே!” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
அழகிய சொக்கநாதர்
- “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர்
- “உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன்” என பாடியவர்?
மாணிக்கவாசகர்
- திருநெல்வேலி சீமை என குறிப்பிடப்படுவது இன்றைய எந்த மாவட்டங்கள் இணைந்த பகுதி?
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்
- டி.கே.சி என அழைக்கப்படுபவர் யார்?
டி.கே. சிதம்பரநாதர்
- டி.கே. சிதம்பரநாதர் என்ன பணி செய்தார்?
வழக்கறிஞர்
- டி.கே. சிதம்பரநாதர் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்?
இரசிகமணி,கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசை காவலர் ,வளர் தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர்
- டி.கே. சிதம்பரநாதர் என்ன பெயரில் தன்னுடைய வீட்டில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்?
வட்டத்தொட்டி