DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- “யாதும் ஊரே யாவரும் கேளிர்”என கூறியவர்?
கணியன் பூங்குன்றனார், புறநானூறு
- “நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்கு புறமொன்று” எனக் கூறியவர்?
இலத்தீன் புலவர் தெறென்ஸ்
- முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என கூறியவர்?
கோர்டன் ஆல்போர்ட்
- “பூட்கையில்லோன் யாக்கை போல” எனக் கூறும் நூல்?
புறநானூறு, கூறியவர் ஆலத்தூர்கிழார்
- லாவோட்சு எப்போது பிறந்தார்?
கி.மு.604
- கன்பூசியசின் காலம் என்ன?
கி.மு 551-479
- “விந்திய மலைத் தொடருக்கும் இமய மலைக்கும் இடையே உள்ள நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது?
கரும பூமி
- ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலக மேதை யார்?
ஆல்பர்ட் சுவைட்சர்
- “இத்தகைய உயர்ந்த கொள்கைகளை கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என திருக்குறளை பற்றி கூறியவர் யார்?
ஆல்பர்ட் சுவைட்சர்
- “படுதிரை வையம் பாத்திய பண்பே”-என நிலத்தைப் பிரித்து முறை பற்றி கூறும் நூல் எது?
தொல்காப்பியம்
- “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் அறிவிலை வணிகன் ஆய் அலன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- “உண்டாலம்ம இவ்வுலகம்” எனக்கூறும் நூல் எது?
புறப்பாட்டு
- 1966ம் ஆண்டு எங்கு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது?
கோலாலம்பூர்,மலேசியா
- சென்னையில் எப்போது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது?
1968
- மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு எப்போது நடைபெற்றது?
பாரிஸ் ,பிரான்ஸ் 1970
- யாழ்ப்பாணத்தில் எப்போது உலக தமிழ் மாநாடு நடைபெற்றது?
1974
- ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு எப்போது நடைபெற்றது?
மதுரை 1981
- 1987 எங்கு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது?
கோலாலம்பூர் மலேசியா
- மொரீசியசில் எந்த ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது?
1989
- இறுதியாக நடந்த உலகத் தமிழ் மாநாடு எங்கு எப்போது நடைபெற்றது?
தஞ்சாவூர் 1995
- செம்மொழி மாநாடு எங்கு எப்போது நடைபெற்றது?
2010 ,கோவை
- “பண்புடைமையாவது யாவர் மாட்டும் அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் விருப்பத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை” எனக் கூறியவர் யார்?
பரிப்பெருமாள்
- “இமயத்துக் கோடு உயர்ந்தன்ன”எனக் கூறும் நூல் எது?
புறநானூறு
- “இமையத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை “எனக் கூறும் நூல் எது?
புறநானூறு
- “உலகில் ஒற்றுமை உண்டு என்றும், மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர் என்றும், எல்லா ஒரே குலத்தவர் என்றும், எல்லா உயிர்களும் தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளன” என்றும் கற்பித்தவர்கள் யார்?
ஸ்டாயிக்வாதிகள்
- “எல்லாருடைய நாடுகளும் நமக்கு தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்” எனக் கூறிய தத்துவஞானி யார்?
செனக்கா
- “நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்” எனக் கூறியவர் யார்?
மார்க்ஸ் அரேலியஸ்
- உலகத் தமிழ் ஆய்வு மன்றம் உருவாகவும்ம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் யார்?
தனிநாயகம் அடிகள்
- தனிநாயகம் அடிகள் தொடங்கிய இதழ் எது?
தமிழ்ப் பண்பாடு
- கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன?
கல்யாணசுந்தரம்
- கல்யாணசுந்தரம் என்ன பெயரில் கதை இலக்கியப் பங்களிப்பு செய்து வருகிறார்?
வண்ணதாசன்
- வண்ணதாசனின் கவிதை நூல்கள் என்னென்ன?
புலரி, முன்பின், ஆதி ,அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு
- வண்ணதாசன் எழுதிய கட்டுரைத் தொகுப்பின் பெயர் என்ன?
அகமும் புறமும்
- வண்ணதாசனின் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு என்ன பெயரில் வெளிவந்துள்ளது?
சில இறகுகள் சில பறவைகள்
- வண்ணதாசனின் குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகள் என்னென்ன?
கலைக்க முடியாத ஒப்பனைகள் ,தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது
- வண்ணதாசனுக்கு எந்த சிறுகதைத் தொகுப்பிற்காக 2016ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டுள்ளது?
ஒரு சிறு இசை
- “இந்த காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்? ” இந்த ஹைக்கூ கவிதை எழுதியவர்?
அமுதோன்
- “பிம்பங்கள் அற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்”இந்த ஹைக்கூ கவிதை எழுதியவர்?
நா.முத்துக்குமார்
- “வெட்டுக்கிளியின் சப்தத்தில் மலையின் மௌனம் ஒரு கணம் அசைந்து திரும்புகிறது”இந்த ஹைக்கூ கவிதை எழுதியவர்?
ஜப்பானியக் கவிஞர் பாஷோ
- “நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
குறுந்தொகை
- குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
401 பாடல்கள்
- குறுந்தொகையை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
சௌரிப்பெருமாள் அரங்கனார், 1915
- பாலை பாடிய பெருங்கடுங்கோ எந்த மரபை சேர்ந்த மன்னர்?
சேர மரபு
- என் கதைகளின் கதைகள் எனும் நூலை எழுதியவர் யார்?
சு.சமுத்திரம்
- சு.சமுத்திரம் எங்கு பிறந்தார்?
திப்பணம்பட்டி , திருநெல்வேலி மாவட்டம்
- சு.சமுத்திரம் புகழ்பெற்ற சிறுகதை தொகுப்புகள் என்னென்ன?
வாடாமல்லி ,பாலைப் புறா, மண் சுமை ,தலைப்பாகை ,காகித உறவு
- சு.சமுத்திரத்தின் எந்த நூல் சாகித்திய அகடமி விருதை வென்றுள்ளது?
வேரில் பழுத்த பலா
- சு.சமுத்திரத்தின் எந்த சிறுகதை தொகுதி தமிழக அரசின் பரிசை வென்றுள்ளது?
குற்றம் பார்க்கில்
- “எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்” என பாடியவர்?
வள்ளலார்
- சிற்பியின் மகள் நூலின் ஆசிரியர்?
பூவண்ணன்
- அப்பா சிறுவனாக இருந்தபோது என்ற நூலின் ஆசிரியர்?
அலெக்சாந்தர் ரஸ்கின் (தமிழில் நா.முகமது செரீபு)
- ‘கல்லும் உலோகமும் செங்கலும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாவன” எனக் குறிப்பிடும் நூல் எது?
திவாகர நிகண்டு
- சிற்பக்கலை குறித்த குறிப்புகள் வேறு எந்த நூலில் காணப்படுகின்றன?
மணிமேகலை, தொல்காப்பியம்
- சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்? அவை என்னென்ன?
இரண்டு வகை :முழு உருவ சிற்பங்கள் ,புடைப்பு சிற்பங்கள்
- எத்தனை நிலைகளில் உலோகத்தினாலும் கல்லினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன?
நான்கு தெய்வ உருவங்கள் ,இயற்கை உருவங்கள் ,கற்பனை உருவங்கள், முழு வடிவ (பிரதிமை)உருவங்கள்
- சிப்பிகளை வேறு எவ்வாறு அழைத்து சிறப்பிக்கின்றனர்?
கற்கவிஞர்கள்
- போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகள் நடப்படும் இச்செய்தி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
தொல்காப்பியம்
- மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை( சுதைச் சிற்பங்கள்) இருந்ததை எந்த நூல் மூலம் அறியமுடிகிறது?
மணிமேகலை
- பல்லவர் கால சிற்பக்கலைக்கு எந்த சிற்பங்கள் மிகச் சிறந்த சான்றுகளாகும்?
மாமல்லபுர சிற்பங்கள்
- யார் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன?
பல்லவர் காலம்
- பாண்டியர் காலக் சிற்ப வேலைபாடுகளை எங்கு காணலாம்?
திருமயம், பிள்ளையார்பட்டி ,குன்றக்குடி ,திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில்
- கற்சிற்பங்கள் அமைக்கும் கலை யாருடைய காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்றது?
சோழர்காலம்
- முதலாம் ராஜராஜசோழன் கட்டிய கோவில் எது?
தஞ்சை பெரிய கோவில்
- முதலாம் ராஜேந்திர சோழன் எழுப்பிய கோவில் எது?
கங்கை கொண்ட சோழபுரம்
- இரண்டாம் இராசராசன் எழுப்பிய கோவில் எது?
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்
- மூன்றாம் குலோத்துங்க சோழன் அமைத்த கோவில் எது?
திரிபுவன வீரேஸ்வரம் கோவில்
- தஞ்சை பெரிய கோவிலில் காணப்படுகின்ற வாயில் காவலர் உருவங்கள் எத்தனை அடி உயரம் கொண்டவை?
14 அடி
- எங்கு ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகமும் சிங்கமுக கிணறும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள உருவங்களும் குறிப்பிடத்தக்கன?
கங்கைகொண்ட சோழபுரம்
- கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் சிற்பங்கள் யாரால் கட்டப்பட்டவை?
இரண்டாம் பராந்தக சோழன்
- நடன முத்திரைகளுடன் கூடிய சிற்பங்கள் காணப்படும் இடமான நார்த்தாமலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
புதுக்கோட்டை மாவட்டம்
- குரங்கநாதர் கோவில் எங்கு அமைந்துள்ளன?
சீனிவாசநல்லூர்,திருச்சிராப்பள்ளி மாவட்டம்
- யாருடைய காலத்தில் மிகுதியான செப்புத்திருமேனிகள் உருவாக்கப்பட்டன?
சோழர்காலம்
- செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என அழைக்கப்படுவது யாருடைய காலம்?
சோழர் காலம்
- யாருடைய காலத்தில் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் எழுப்பப்பட்டன?
விஜயநகர அரசு
- தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி எங்கு நடத்தி வருகிறது?
மாமல்லபுரம்
- உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் எங்கு அமைந்துள்ளன?
சுவாமிமலை ,கும்பகோணம் ,மதுரை
- சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எந்த நூலை வெளியிட்டுள்ளது?
சிற்ப செந்நூல்
- நாயக்கர் கால சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றன?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேஸ்வரம் பெருங்கோவில் ,திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில்,திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பெருமாள் கோவில், பேரூர் சிவன் கோவில்
- எந்த கோவிலில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிற்பக்கலை நுட்பத்தின் உச்சநிலை படைப்பு என கூறப்படுகிறது?
பேரூர் சிவன் கோவில்
- ஒரு பாறையில் 24 தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக எங்கு செதுக்கப்பட்டுள்ளன?
திருநாதர் குன்று, விழுப்புரம் மாவட்டம்
- ராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சி பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என கூறியவர் யார்?
பேரறிஞர் அண்ணா
- இராவண காவியம் எத்தனை காண்டங்களைக் கொண்டுள்ளது?
ஐந்து காண்டங்கள்
- இராவண காவியத்தின் ஐந்து காண்டங்கள் என்னென்ன?
தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம் ,பழிபுரி காண்டம்,மதுரைக் காண்டம் ,போர் காண்டம்
- இராவண காவியம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
3100 பாடல்கள்
- ராவண காவியம் யாரால் இயற்றப்பட்டது?
புலவர் குழந்தை
- தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார்?
புலவர் குழந்தை
- புலவர் குழந்தை எழுதிய வேறு நூல்கள் என்னென்ன?
யாப்பதிகாரம் ,தொடையதிகாரம் மேலும் 30க்கும் மேற்பட்ட இலக்கண இலக்கிய நூல்கள்
- “மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி நான்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
நாச்சியார் திருமொழி
- பெண்ணின் திருமண வயது எவ்வளவு?
18
- ஆணின் திருமண வயது எவ்வளவு?
21
- திருமாலை வழிபட்டு சிறப்பு நிலையை எய்திய ஆழ்வார்கள் எத்தனை பேர்?
பன்னிருவர்
- சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப் பெற்றவர் யார்?
ஆண்டாள்
- ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?
பெரியாழ்வார்
- ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நாலாயிர திவ்ய பிரபந்தம்
- நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகக் கூறப்படுபவை?
திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி
- நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
143 பாடல்கள்
- செய்தி எனும் சிறுகதையை எழுதியவர் யார்?
தி.ஜானகிராமன்
- 4 சாகித்திய அகடமி விருது பெற்ற கதைகள் மற்றும் ஆசிரியர்கள் குறிப்பிடுக:
1970- அன்பளிப்பு (சிறுகதைகள்) அழகிரிசாமி
- 1979– சக்தி வைத்தியம் (சிறுகதைத்தொகுப்பு) தி.ஜானகிராமன்
- 1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத்தொகுப்பு) ஆதவன்
- 1996 – அப்பாவின் சினேகிதர் (சிறுகதைத்தொகுப்பு ) அசோகமித்திரன்
- 2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள் ) மேலாண்மை பொன்னுசாமி
- 2010 – சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) நாஞ்சில்நாடன்
- 2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) வண்ணதாசன்
- “சிறுகதை என்றால் சிறிய கதை கொஞ்சம் பக்கங்களில் முடிந்துவிடுவது என்பதல்ல சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில் அதில் எழுதப்படும் பொருள் பற்றியது” எனக் கூறியவர்?
புதுமைப்பித்தன்
- தி. ஜானகிராமன் அவர்கள் தனது ஜப்பான் பயண அனுபவங்களை எந்த தலைப்பில், எந்த வார இதழில் எழுதினார்?
உதயசூரியன் ,சுதேசமித்திரன் வார இதழ்
- உதய சூரியன் என்னும் தலைப்பில் எழுதப்பட்ட அனுபவங்கள் நூலாக வெளியிடப்பட்டது எப்போது?
1967
- தி.ஜானகிராமன் ரோம் ,செக்கோஸ்லோவாகியா சென்ற அனுபவங்களை எந்த தலைப்பில் 1974ல் நூலாக வெளியிட்டார்?
கருங்கடலும் கலைக்கடலும்
- தி.ஜானகிராமன் தமது காவிரிக்கரை வழியான பயணத்தை என்ன தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்?
நடந்தாய் வாழி காவேரி
- 5தி.ஜானகிராமன் எழுதிய வேறு நூல்கள் என்னென்ன?
பயணக்கட்டுரை, அடுத்த வீடு ஐம்பது மைல்
- தி.ஜானகிராமன் எழுதிய கதைகள் எந்தெந்த இதழ்களில் வெளிவந்தன?
மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள் ,சுதேசமித்திரன் ,ஆனந்தவிகடன், கல்கி
- “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” எனும் கோட்பாட்டை கொண்டவர் யார்?
தி.ஜானகிராமன்
- செய்தி எனும் சிறுகதை எந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?
சிவப்பு ரிக்க்ஷா
- பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் எனும் நூலில் எந்தக் கருவி கூறப்படவில்லை?
நாகஸ்வரம்
- நாகசுரக் கருவி எந்த மரத்தில் செய்யப்படுகிறது?
ஆச்சாமரம்
- நாகஸ்வரத்தின் மேற்பகுதியில் பொருத்தப்படும் கருவியின் பெயர் என்ன?
சீவாளி
- சீவாளி எந்த புல் வகையை கொண்டு செய்யப்படுகிறது?
நாணல்
- நட்பு காலம் எனும் நூலின் ஆசிரியர்?
கவிஞர் அறிவுமதி
- திருக்குறள்கதைகள் நூலின் ஆசிரியர்?
கிருபானந்தவாரியார்
- கையா, உலகே ஒரு உயிர் -நூலின் ஆசிரியர்?-
ஜேம்ஸ் லவ்லாக், தமிழில் மொழிபெயர்த்தவர் சா. சுரேஷ்