DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- உழவு உலகிற்கு அச்சாணி என கூறியவர் யார்?
- வள்ளுவர்
- உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் எனக் கூறியவர் யார்?
- பாரதியார்
- பனைமரத்தை எத்தனை அடி இடைவெளி விட்டு நடவேண்டும்?
- மூன்றடிக்கு மூன்றடி
- பனைமரம் பலன் தர எத்தனை ஆண்டுகளாகும்?
- பதினோரு ஆண்டுகள்
- ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படுவது எது?
- பனைமரம்
- ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதற்கு பெயர் என்ன?
- மதிப்புக் கூட்டுப் பொருள்
- வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வு செய்தவர் யார்?
- ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா
- “இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் அதேநேரம் எளிதில் சிதைந்து விடும் வகையில் மென்மையானதும் கூட” எனக் கூறியவர் யார்?
- மசானபு ஃபுகோகா
- “விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லா காலத்திலும் திகழும்” எனக் கூறியவர் யார்?
- மசானபு ஃபுகோகா
- ஐந்து விவசாய மந்திரங்கள் எனக் கூறப்படுபவை?
- உழப்படாத நிலம், ரசாயன உரம் இல்லாத உற்பத்தி,பூச்சிக்கொல்லி தெளிக்கப்படாத பயிர்பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி,ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல்
- ஐந்து விவசாய மந்திரங்களை உலகுக்கு சொன்னவர் யார்?
- மசானபு ஃபுகோகா
- ஒற்றை வைக்கோல் புரட்சி எனும் நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
- 1978
- ஒற்றை வைக்கோல் புரட்சி எனும் நூலை எழுதியவர் யார்?
- மசானபு ஃபுகோகா
- உளுந்திற்கு ஊடுபயிராக விளைவிப்பது எது?
- நெல்
- உளுந்தின் வேர் முடிச்சுகளில் இருக்கும் தனிமம் எது?
- நைட்ரஜன்
- ஏதிலி குருவிகள் எனும் கவிதையை இயற்றியவர் யார்?
- அழகிய பெரியவன்
- “…போகும் வழியெல்லாம் தூக்கணாங் குருவி கூடுகள் காற்றில் ஆடும் புல் வீடுகள்…” இவ்வரிகளை இயற்றியவர்?
- அழகிய பெரியவன்
- உலக சிட்டுக்குருவிகள் நாள் எப்போது?
- மார்ச் 20
- அழகிய பெரியவனின் இயற்பெயர் என்ன?
- அரவிந்தன்
- அழகிய பெரியவன் பிறந்த இடம் எது?
- பேரணாம்பேட்டை, வேலூர் மாவட்டம்
- அரவிந்தனின் எந்த புதினம் தமிழக அரசின் விருது பெற்றது?
- தகப்பன் கொடி
- அழகிய பெரியவன் எந்த ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றார்?
- 2003
- அழகிய பெரியவனின் சிறுகதைத் தொகுப்புகள் என்னென்ன?
- குறடு,நெரிக்கட்டு
- அழகிய பெரியவனின் கவிதைத் தொகுப்புகள் என்னென்ன?
- உனக்கும் எனக்குமான சொல்,அரூப நஞ்சு
- அரவிந்தனின் கட்டுரைத் தொகுப்புகள் என்னென்ன?
- மீள் கோணம், பெருகும் வேட்கை
- வேளாண்மை இலக்கியத்தின் கருவூலம் என அழைக்கப்படும் நூல் எது?
- பள்ளு/திருமலை முருகன் பள்ளு
- உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவது எந்த சிற்றிலக்கியத்தின் உட்கோள் ஆகும்?
- பள்ளு சிற்றிலக்கியம்
- “… மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கணி வந்துளம் ஆடும்…”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- திருமலை முருகன் பள்ளு
- “…குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும் குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்…”இவ்வரிகளில் குறிப்பிடப்படும் நாடு எது?
- வடகரை நாடு
- “…இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும்- முத்(து) ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும்..”-இவ்வரிகளில் குறிப்பிடப்படும் நாடு எது?
- தென்கரை நாடு
- திருமலை முருகன் பள்ளு நூலை இயற்றியவர் யார்?
- பெரியவன் கவிராயர்
- வடகரை நாடு என அழைக்கப்படுவது?
- திருமலை
- தென்கரை நாடு என அழைக்கப்படுவது?
- குற்றாலம்
- பள்ளுக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
- உழத்திப் பாட்டு
- பள்ளு தொல்காப்பியம் குறிப்பிடும் எந்த இலக்கிய வகையைச் சாரும்?
- புலன்
- திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள் எத்தனை?
- 23
- திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகள் எத்தனை?
- 8
- திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக்கருவிகள் எத்தனை?
- 10
- திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள் என்னென்ன?
- சீரகசம்பா,பைங்குழலாள், சீதாபோகம், ரங்கஞ்சம்பா, மணல்வாரி ,அதிக்கிராதி, அரிக்ராவி, முத்துவெள்ளை, புழுகுசம்பா, சொரிகுரம்பை,புத்தன்வாரி,சிறைமீட்டான்,கார்நெல்,அரியநாயகன்,கருங்சூரை,பூம்பாளை,குற்றாலன்,பாற்கடுக்கன், கற்பூரப்பாளை, காடைகழுத்தன்,மிளகுசம்பா,பனைமுகத்தன்,மலைமுண்டன்,திருவரங்கன்,குருவைக்கிள்ளை
- திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகள் என்னென்ன?
- காரி,தொந்திகாளை,மால்காளை,மறைக்காளை,மயிலைக்காளை,மேழைக்காளை,செம்மறையான்,கருமறையான்
- திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகள் என்னென்ன?
- கலப்பை, நுகம், பூட்டு, கயிறு ,வள்ளைக்கை ,உழக்கோல்,கொழு,கயமரம்,மண்வெட்டி,வடம்
- கண்காணம் என்பது எந்தத் தொழிலில் கையாளப்படும் ஒரு சொல்?
- பயிர்த் தொழில்
- கங்காணம் என்றால் என்ன?
- நாள்தோறும் வயலில் நெல் அறுவடை செய்து களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல் அளவு என்பதாகும்
- ஒப்பனையை மேற்பார்வை செய்பவரை குறிக்கும் சொல்?
- கண்காணி
- பண்புளிப் பட்டணம் எங்கு உள்ளது?
- குற்றாலத்துக்கு அருகில் திருநெல்வேலி மாவட்டம்
- பண்புளிப் பட்டணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- பண்பை / பண்பொழில்
- திருமலை முருகன் பள்ளு யாரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளது?
- முருகக் கடவுள்
- திருமலை முருகன் பள்ளுவில் பயின்று வந்துள்ள பா வகைகள் என்னென்ன?
- கலித்துறை கலிப்பா சிந்து
- திருமலை முருகன் பள்ளு இருக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்னென்ன?
- பள்ளிசை மற்றும் திருமலை அதிபர் பள்ளு
- திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியரின் காலம் என்ன?
- பதினெட்டாம் நூற்றாண்டு
- “..காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ்….”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
- ஐங்குறுநூறு
- “..காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ்….”இவ்வரிகளை ஐங்குறுநூறு நூலில் பாடியவர் யார்?
- பேயனார்
- “..காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ்….”இவ்வரிகள் பாடப்பட்ட திணை எது?
- முல்லைத் திணை
- ஐங்குறுநூற்றின் அடிவரையரை என்ன?
- 3 அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை
- ஐங்குறுநூறு என்ன பாக்களால் ஆன நூல்?
- அகவற்பா
- ஐங்குறுநூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
- 500 பாடல்கள்
- குறிஞ்சித்திணை பாடிய புலவர் யார்?
- கபிலர்
- முல்லைத்திணை பாடிய புலவர் யார்?
- பேயனார்
- மருதத்திணை பாடிய புலவர்?
- ஓரம்போகியார்
- நெய்தல் திணைப் பாடிய புலவர் யார்?
- அம்மூவனார்
- பாலைத்திணை பாடிய புலவர் யார்?
- ஓதலாந்தையார்
- ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்?
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- ஐங்குறு நூலைத் தொகுத்தவர் யார்?
- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
- ஐங்குறுநூறு தொகுப்பித்தவர் யார்?
- யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
- பேயனார் இயற்றிய எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளன?
- 105 பாடல்கள்
- யானைடாக்டர் என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
- ஜெயமோகன்
- எந்த விலங்கை காட்டின் மூலவர் என அழைக்கின்றனர்?
- யானைகள்
- நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு சொற்கள் என்னென்ன?
- கயம்,வேழம், களிறு,பிளிறு, களபம்,மாதங்கம், கைம்மா,வாரணம்,
அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா,அல்லியன், அனுபமை,ஆனை,இபம், இரதி, குஞ்சரம், வல்விலங்கு, கரி ,அஞ்சனம்
- யானைகளில் மூன்று சிற்றினங்கள் என்ன?
- ஆப்பிரிக்க புதர்வெளி யானைகள் ,ஆப்பிரிக்கக் காட்டு யானைகள் ,ஆசிய யானைகள்
- பொதுவாக யானைகள் உயிர்வாழும் ஆண்டு எவ்வளவு?
- 70 ஆண்டுகள்
- “..காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு..” எனும் வரிகள் இடம் பெற்ற நூல்?
- கலித்தொகை
- யானை டாக்டர் என அழைக்கப்படுபவர் யார்?
- வி.கிருஷ்ணமூர்த்தி
- வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது எது?
- வேணுமேனன் ஏலீஸ் விருது
- வி கிருஷ்ணமூர்த்தி வேணுமேனன் ஏலீஸ் விருது விருதினை
எப்போது பெற்றார்?
- 2000
- தமிழகக் கோவில் யானைகளுக்கு வான புத்துணர்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசின் மூலம் செயல்படுத்தியவர் யார்?
- வி.கிருஷ்ணமூர்த்தி
- ஜெயமோகன் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
- நாகர்கோவில்
- ஜெயமோகன் எழுதிய நாவல்கள் என்னென்ன?
- விஷ்ணுபுரம் ,கொற்றவை
- ஜெயமோகன் யானையை பாத்திரமாக வைத்து எழுதிய கதைகள் என்னென்ன?
- ஊமைச்செந்நாய், மத்தகம்
- யானை டாக்டர் எனும் சிறுகதை எந்த புதினத்தில் இடம்பெற்றுள்ளது?
- அறம்
- தமிழிசை இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
- ஆபிரகாம் பண்டிதர்
- ஆபிரகாம் பண்டிதர் எங்கு பிறந்தார்?
- தென்காசிக்கு அருகில் உள்ள சாம்பவர் வடகரை
- ஆபிரகாம் பண்டிதரின் காலம் என்ன?
- 1859 – 1919
- ஆபிரகாம் பண்டிதர் எங்கு ஆசிரியராக பணியாற்றினார்?
- திண்டுக்கல்
- ஆபிரகாம் பண்டிதர் மக்களால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
- பண்டுவர்
- ஆபிரகாம் பண்டிதர் தஞ்சையில் குடியேறிய பின்னர் மக்கள் அவரை எவ்வாறு அழைக்க தொடங்கினர்?
- பண்டிதர்
- ஆபிரகாம் பண்டிதர் உருவாக்கிய அமைப்பின் பெயர் என்ன?
- சங்கீத வித்தியா மகாஜன சங்கம்
- ஆபிரகாம் பண்டிதருடைய இசைத் தமிழ் தொண்டின் சிகரம் எனப்படுவது எது?
- கருணாமிர்த சாகரம்
- ஆபிரகாம் பண்டிதர் எத்தனை வயது வரை வாழ்ந்தார்?
- 71 ஆண்டுகள்
- “… மீன்கள் கோடி கோடி சூழ வெண்ணிலாவே ! ஒரு வெள்ளி ஓடம் போல வரும் வெண்ணிலாவே!..”இவ்வரிகளை இயற்றியவர் யார்?
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை