DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- “கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போல குளிர்ப்பொதிகைத் தென்தமிழே சீறி வா வா” என தமிழை அழைத்தவர் யார்?
சிற்பி பாலசுப்பிரமணியம்
- இளந்தமிழே எனும் கவிதை இடம் பெற்ற நூல் எது?
நிலவுப்பூ
- சிற்பி பாலசுப்பிரமணியம் எங்கு தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார் ?
பாரதியார் பல்கலைக்கழகம்
- சிற்பி பாலசுப்ரமணியம் மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு மற்றும் நூல்?
அக்னிசாட்சி 2001
- சிற்பி பாலசுப்ரமணியம் எந்த நூலுக்காக 2002 ஆம் ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றார்?
ஒரு கிராமத்து நதி
- சிற்பி பாலசுப்பிரமணியம் இயற்றிய கவிதை நூல்கள் என்னென்ன?
நிலவுப்பூ, ஒளிப்பறவை, சர்ப்பயாகம்,சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி
- சிற்பி பாலசுப்பிரமணியம் இயற்றிய உரைநடை நூல்கள் என்னென்ன?
இலக்கிய சிந்தனைகள் ,மலையாளக் கவிதை ,அலையும் சுவடும்
- சிற்பி பாலசுப்ரமணியம் எத்தனை முறை சாகித்ய அகடமி விருது பெற்றுள்ளார்?
இரண்டு முறை
- தமிழ் மொழியின் நடை அழகியல் என்னும் உரைநடையை எழுதியவர்?
தி சு நடராசன்
- இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கணம் எது?
தொல்காப்பியம்
- எழுத்தையும் சொல்லையும் போன்றே செய்யுளையும் ஓர் உள்ளமைப்பாக கருதும் நூல்?
தொல்காப்பியம்
- இலக்கியத்தனம் ஆங்கிலாக்கம் தருக?
poeticalness / literariness
- இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறவியல் சார்ந்த கருத்து நிலைகள் உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்பதனை சுட்டிக் காட்டும் நூல்?
தொல்காப்பியம்
- பா வகைகள் நான்கு எனக் கூறும் நூல்?
தொல்காப்பியம்
- நான்கு பா வகைகள் என்னென்ன?
ஆசிரியப்பா ,வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா
- “அந்நில மருங்கின் அறமுதலாகிய மும்முதற்பொருட்கும் உரிய என்ப” எனக் கூறும் நூல்?
தொல்காப்பியம்
- “ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை வெண்பா நடைத்தே கலி” என கூறும் நூல்?
தொல்காப்பியம்
- எந்த தொன்மையான மொழியும் எதனில் இருந்து தொடங்குகின்றது?
சமிக்ஞை & இசை
- ஒலிபின்னல்- ஆங்கிலாக்கம் தருக?
sound texture
- “கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே” எனும் பாடல் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- மூன்று பேரும் கூடி நின்று எதிர்த்தாலும் பறம்பு நாட்டை உங்களால் வெல்ல முடியாது என மூவேந்தர்களிடம் கூறியவர் யார்?
கபிலர்
- “படாம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக” எனும் வரிகள் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- “புணரின் புணராது பொருளே; பொருள் வயின் பிரியின் புணராது புணர்வு” எனும் வரிகள் இடம் பெற்ற நூல்?
நற்றிணை
- “நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை”- இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
புறநானூறு
- எந்தக் கலியில் காளைகளில் பல இனங்களை காட்டுகின்ற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன?
முல்லைக்கலி
- எந்தக் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்கள் மற்றும் அதன் பல பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?
கிடை
- கிடை என்னும் குறு நாவலை எழுதியவர்?
கி ராஜநாராயணன்
- வாசிப்போருடைய உளப்பாடாக ஆங்கிலாக்கம் தருக?
purport
- மறித்தாக்கம் ஆங்கிலாக்கம் தருக?
transform
- Poetic inversion என்பதன் தமிழாக்கம் என்ன?
கவிதை மறுதலைத்தொடர்
- நம்பி நெடுஞ்செழியனுடைய சாவு சடங்கு பற்றி பாடல் பாடியவர்?
பேரெயின் முறுவலார்
- “இடுகவொன்றோ,சுடுகவொன்றோ; படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே”எனும் பாடல் வரி இடம்பெற்ற நூல் எது ?
புறநானூறு
- திறனாய்வு கலையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
தி சு நடராசன்
- தி சு நடராசன் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்த இடங்கள்?
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம் ,திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
- தி சு நடராசன் எழுதிய நூல்கள் என்னென்ன?
கவிதையெனும் மொழி ,திறனாய்வு கலை, தமிழ் அழகியல் ,தமிழின் பண்பாட்டு வெளிகள்
- “ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்”- இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
தண்டியலங்காரம்
- அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் என்னென்ன?
தண்டியலங்காரம் மாறனலங்காரம் குவலயானந்தம்
- அணி இலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் என்னென்ன?
தொல்காப்பியம் வீரசோழியம் இலக்கண விளக்கம் தொன்னூல் விளக்கம் முத்துவீரியம்
- வீரசோழியம் நூல் யாருடைய பெயரால் இயற்றப்பட்டது? வீரராஜேந்திர சோழன்
- வீரசோழியம் நூலை இயற்றியவர்?
புத்தமித்திரர்
- மாறனலங்காரம் யாருடைய பெயரால் இயற்றப்பட்டது?
நம்மாழ்வார்
- மாறனலங்காரம் நூலை இயற்றியவர் யார்?
திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
- தண்டியலங்காரத்தை தழுவி தொகுக்கப்பட்ட நூல்?
இலக்கண விளக்கம்
- இலக்கண விளக்கம் நூலை தொகுத்து இயற்றியவர்?
வைத்தியநாத தேசிகர்
- தொன்னூல் விளக்கம் நூலை இயற்றியவர் யார்?
வீரமாமுனிவர்
- வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
- குவலயானந்தம் நூலின் மூல மொழி மற்றும் ஆசிரியர் யார்?
வடமொழி அப்பைய தீட்சிதர்
- குவலயானந்தம் யாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது? மீனாட்சி சுந்தர கவிராயர்
- முத்துவீரியம் என்பது யாரால் இயற்றப்பட்ட நூல்?
முத்துவீரிய உபாத்தியாயர்
- எந்த நூலைத் தழுவி தண்டியலங்காரம் இயற்றப்பட்டது? காவியதர்சம்
- காவியதர்சம் எந்த மொழி நூல்?
வடமொழி
- தண்டியலங்காரத்தின் ஆசிரியர் யார்?
தண்டி
- தண்டியின் காலம் என்ன?
12ம் நூற்றாண்டு
- தண்டியலங்காரம் எத்தனை பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது? என்னென்ன?
3 பிரிவுகள், பொதுவியல் பொருளணியியல் சொல்லணியியல்
- “நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுவதே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும், வேறு வழியில்லை”என கூறியவர்?
பாரதியார்
- “தமிழ் தமிழ் தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க” எனக் கூறியவர்?
பாரதியார்
- “புதிய புதிய செய்தி புதிய புதிய யோசனை புதிய புதிய உண்மை புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும்” என கூறியவர்?
பாரதியார்
- “நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்க சிரி” எனக் கூறியவர்?
பாரதியார்
- “தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது” எனக் கூறியவர்?
பாரதியார்
- “ஆணும் பெண்ணும் ஓர் உயிரின் இரண்டு தலைகள் என்றெழுது” எனக் கூறியவர்?
பாரதியார்
- வம்சமணி தீபிகை என்னும் நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
1879
- வம்சமணி தீபிகை எனும் நூலை வெளியிட்டவர் யார்?
கவி கேசரி சாமி தீட்சிதர்
- வம்சமணி தீபிகை நூலின் மறுபதிப்பு யாரால் எப்போது வெளியிடப்பட்டது?
இளசைமணி 2008
- பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப் பாட்டு, பாப்பா பாட்டு, முரசு பாட்டு ஆகியவற்றை பதிப்பித்தவர் யார்?
பரலி சு நெல்லையப்பர்
- பாரதி நடத்திய எந்த இதழ்களில் நெல்லையப்பர் துணையாசிரியராக இருந்தார்?
சூரியோதயம் கர்மயோகி
- நெல்லையப்பர் துணை ஆசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணி யாற்றிய இதழ்கள்?
லோகோபகாரி ,தேசபக்தன்
- நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்?
வ.உ.சிதம்பரனார்
- நெல்லையப்பர் எழுதிய கவிதை நூல்கள் என்னென்ன?
நெல்லை தென்றல், பாரதி வாழ்த்து ,உய்யும் வழி
- பாரதி கடிதங்கள் எனும் நூலை பதிப்பித்தவர்?
ரா.அ.பத்மநாபன்
- பாரதி தனது எத்தனையாவது வயதில் கல்விகற்க உதவி வேண்டிய பேரும் அரசருக்கு கவிதைக் கடிதம் எழுதினார்?
15ஆவது வயதில்
- பாரதி தனது மறைவிற்கு முன்னர் யாருக்குக் கடிதம் எழுதினார்?
குத்திகேசவர்