TNPSC TAMIL 8TH GRAMMAR QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
TNPSC TAMIL 8TH GRAMMAR QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download NowAvailable for Android devices. Click the button to go to the Play Store.
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
TNPSC TAMIL 8TH GRAMMAR QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
1190. உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது எந்த 4 இடங்களில் ஒன்றில் பொருந்தி எழுத்துக்கள் பிறக்க காரணமாக அமைகிறது?
1191. எந்த உறுப்புகளின் முயற்சியினால் வேறு வேறு மொழிகளாக எழுத்துகள் பிறக்கின்றன?
1192. எழுத்துக்களின் பிறப்பினை எத்தனை வகையாக பிரிப்பர்?
1193. உயிர் எழுத்துக்கள் 12 எதனை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
1194. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் எதனை இடமாக கொண்டு பிறக்கின்றன?
1195. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் எதனை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
1196. இடையின மெய் எழுத்துகள் ஆறும் எதனை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
1197. ஆயுத எழுத்து எதனை இடமாகக் கொண்டு பிறக்கிறது?
1198. எந்த உயிரெழுத்துக்கள் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன?
1199. எந்த உயிர் எழுத்துக்கள் ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல் வாய்ப்பல்லை பொருந்தும் முயற்சியில் பிறக்கின்றன?
1200. எந்த உயிர் எழுத்துக்கள் ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களை குவிப்பதால் பிறக்கின்றன?
1201. எந்த மெய்யெழுத்துக்கள் நாவின் முதற்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன?
1202. எந்த மெய்யெழுத்துக்கள் நாவின் இடைப்பகுதி நடு அண்ணத்தின் இடைப் பகுதியை பொருந்துவதால் பிறக்கின்றன?
1203. எந்த மெய் எழுத்துக்கள் நாவின் நுனி அண்ணத்தின் நுனியை பொருந்துவதால் பிறக்கின்றன?
1204. எந்த மெய்யெழுத்துக்கள் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன?
1205. எந்த மெய்யெழுத்துக்கள் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன?
1206. நாக்கின் அடிப் பகுதியில் மேல் வாய் அடிப்பகுதியை பொருந்துவதால் எந்த மெய் எழுத்து பிறக்கிறது?
1207. எந்த மெய் எழுத்துக்கள் மேல் வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன?
1208. எந்த மெய் எழுத்துக்கள் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது?
1209. எந்த மெய்யெழுத்து மேல்வாயை நாக்கின் ஓரங்களில் தடித்து தடவுதலால் பிறக்கிறது?
1210. எந்த மெய் எழுத்து மேல் வாய் பல்லை கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது?
1211. எந்த மெய் எழுத்துக்கள் மேல் வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன?
1212. வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கும் சார்பெழுத்து எது?
1213. செயல் வேறு எவ்வாறு குறிப்பிடப்படும்?
1214. ஒன்றன் செயலை குறிக்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
1215. பொருள் முற்றுப்பெற்ற வினைச் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
1216. வினைமுற்று எந்தெந்த இடங்களில் வரும்?
1217. வினைமுற்று எத்தனை வகைப்படும்?
1218. ஒரு செயல் நடைபெறுவதற்கு எந்த ஆறும் முதன்மையானவை?
1219. ஒரு செயல் நடைபெறுவதற்குரிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது என்ன வினைமுற்று?
1220. பொருள், இடம், காலம், சினை ,குணம் ,தொழில் ஆகியவற்றில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாக காட்டாது ,செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று எவ்வாறு அழைக்கப்படும்?
1221. தெரிநிலை குறிப்பு வினைமுற்றுக்கள் அன்றி வேறு என்ன வகை வினைமுற்றுகளும் தமிழில் உண்டு?
1222. தன் முன் உள்ள ஒருவரை ஒரு செயலை செய்யுமாறு ஏவும் வினைமுற்று எவ்வாறு அழைக்கப்படும்?
1223. ஏவல் வினைமுற்று எத்தனை வகைகளில் வரும்?
1224. வியங்கோள் வினைமுற்று என்னென்ன பொருள்களில் வரும்?
1225. வியங்கோள் வினைமுற்று எவற்றை காட்டும்?
1226. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?
1227. விகுதி பெற்றும் பெறாமலும் வரும் வினைமுற்று எது?
1228. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று என்ன இடத்தில் வராது?
1229. எந்த வியங்கோள் வினைமுற்று விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை?
1230. பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
1231. எச்சம் எத்தனை வகைப்படும்?
1232. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?
1233. பெயரெச்சம் எந்த காலத்தில் வரும்?
1234. செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?
1235. செயலையோ காலத்தையோ தெளிவாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?
1236. வினையைக் கொண்டு முடியும் எச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?
1237. செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் வினையெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?
1238. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் எது?
1239. ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1240. பெயர்ச் சொல்லுடன் ஐ, ஆல், கு ,இன், அது போன்ற அசைகள் இணைந்து அச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறைக்கு என்ன பெயர்?
1241. பெயர்ச் சொல்லுடன் இணைக்கப்படும் அசைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
1242. சில இடங்களில் உருபுகளுக்கு பதிலாக முழு சொற்களே வேற்றுமை உருவாக வருவதும் உண்டு அவை எவ்வாறு அழைக்கப்படும்?
1243. சொல்லுருபுகளுக்கு எடுத்துக்காட்டு?
1244. வேற்றுமை எத்தனை வகைப்படும்?
1245. வேற்றுமையின் வகைகள் என்னென்ன?
1246. வேற்றுமை உருபுகள் இடம்பெற்றுள்ள தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
1247. வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1248. எந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை?
1249. பெரும்பாலான சொற்றொடர்களில் எந்த மூன்று உறுப்புகள் இடம்பெற்றிருக்கும்?
1250. எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது என்ன வேற்றுமை?
1251. முதல் வேற்றுமைக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
1252. இரண்டாம் வேற்றுமை உருபு என்ன?
1253. ஒரு பெயரை செயப்படு பொருளாக வேறுபடுத்திக் காட்டுவது என்ன வேற்றுமை?
1254. இரண்டாம் வேற்றுமைக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
1255. இரண்டாம் வேற்றுமை எத்தனை வகையான பொருள்களில் வரும்?
1256. இரண்டாம் வேற்றுமை என்னென்ன பொருள்களில் வரும்?
1257. மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் என்னென்ன?
1258. மூன்றாம் வேற்றுமையின் எந்த உருபுகள் கருவிப்பொருள், கருத்தாப்பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்?
1259. கருவிப் பொருள் எத்தனை வகைப்படும்?
1260. கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவதற்கு என்ன பெயர்?
1261. ஒன்றை செய்வதற்கு துணையாக இருப்பது எது?
1262. கருத்தா பொருள் எத்தனை வகைப்படும்?
1263. பிறரை செய்ய வைப்பது என்ன வகை கருத்தா பொருள்?
1264. தானே செய்வது என்ன வகை கருத்தாப்பொருள்?
1265. ஆன் எனும் உருபு பெரும்பாலும் என்ன வழக்கில் இடம் பெறும்?
1266. உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் மூன்றாம் வேற்றுமை உருபுகள் என்னென்ன?
1267. நான்காம் வேற்றுமைக்குரிய உருபு எது?
1268. நான்காம் வேற்றுமை உருபு என்ன பொருள்களில் வரும்?
1269. நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக என்ன அசை சேர்ந்து வருவதும் உண்டு?
1270. ஐந்தாம் வேற்றுமை உருபுகள் என்னென்ன?
1271. ஐந்தாம் வேற்றுமை உருபுகள் என்னென்ன பொருள்களில் வரும்?
1272. ஆறாம் வேற்றுமை உருபுகள் என்னென்ன?
1273. உரிமைப் பொருளில் வரும் வேற்றுமை எது?
1274. உரிமை பொருளை வேறு எவ்வாறு அழைப்பர்?
1275. இக்காலத்தில் பயன்படுத்தப்படாத ஆறாம் வேற்றுமை உருபுகள் எது?
1276. ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு எது?
1277. இல் எனும் உருபானது எந்த இரண்டு வேற்றுமைகளுக்கு பொதுவானது?
1278. இல் உருபு என்ன பொருளில் ஐந்தாம் வேற்றுமையில் இடம்பெறும்?
1279. இல் உருபு என்ன பொருளில் ஏழாம் வேற்றுமையில் இடம்பெறும்?
1280. எவற்றைக் குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்?
1281. விளிப்பொருளில் வரும் வேற்றுமை எது?
1282. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதற்கு என்ன பெயர்?
1283. முதல் வேற்றுமையின் சொல்லுருபுகள் என்னென்ன?
1284. மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபு என்ன?
1285. நான்காம் வேற்றுமையின் சொல்லுருபுகள் என்னென்ன?
1286. ஐந்தாம் வேற்றுமையின் சொல்லுருபுகள் என்னென்ன?
1287. ஆறாம் வேற்றுமையின் சொல்லுருபுகள் என்னென்ன?
1288. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை ,பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) வருமானால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1289. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
1290. தொகைநிலைத் தொடரின் வகைகள் என்னென்ன?
1291. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1292. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
1293. காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?
1294. பண்பு பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய எனும் பண்புருபுகள் மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
1295. சிறப்பு பெயர் முன்னும் ,பொதுப்பெயர் பின்னும் நிற்க இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1296. உவமைக்கு உவமேயத்துக்கும் இடையில் போல ,போன்ற, நிகர ,அன்ன முதலிய உவம உருபுகள் ஒன்று மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
1297. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
1298. சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச் சொல் மறைந்து நின்று பொருள் தருவது எவ்வாறு் அழைக்கப்படும்?
1299. வேற்றுமை, வினை, பண்பு ,உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
1300. ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1301. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
1302. தொகாநிலை தொடரின் வகைகள் என்னென்ன?
1303. எழுவாய் ஐ தொடர்ந்து பயனிலை அமைந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்தால் அது என்ன தொடர்?
1304. விளிபெயர் பயனிலையைக்கொண்டு முடிந்து எந்த சொல்லும் மறையாமல் வந்தால் அது என்ன தொடர்?
1305. வினைமுற்று பெயரைக்கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1306. எச்சவினை பெயர்ச்சொல் கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1307. வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்தினால் அது என்ன வகை தொடர்?
1308. இடைச்சொல் வெளிப்படையாக வரும் சொல்தொடர் எவ்வாறு அழைக்கப்படும்?
1309. உரிச்சொல் வெளிப்படையாக வரும் சொல்தொடர் எவ்வாறு அழைக்கப்படும்?
1310. ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது என்னவகை தொடர்?
1311. இரு சொற்கள் அமைந்த சொல்லில் முதலில் உள்ள சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
1312. இரு சொற்கள் நிலைமொழியுடன் வந்து சேரும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
1313. நிலைமொழி ஈறும் ,வருமொழி முதலும் இணைவதற்கு என்ன பெயர்?
1314. நிலைமொழியின் இறுதியில் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1315. நிலைமொழியின் இறுதியில் மெய்யெழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1316. வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1317. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1318. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவதற்கு என்ன பெயர்?
1319. இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ, வருமொழியிலோ அல்லது இரண்டிலுமே மாற்றங்கள் நிகழுமாயின் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1320. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
1321. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது எவ்வாறு அழைக்கப்படும்?
1322. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது எவ்வாறு அழைக்கப்படும்?
1323. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து மறைவது எவ்வாறு அழைக்கப்படும்?
1324. ஒரு சொல்லின் முதலெழுத்து எந்த வல்லின எழுத்துக்களுள் ஒன்றாக இருந்தால் அதற்கு முன்னாலுள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய் எழுத்தை சேர்த்து எழுத வேண்டும்?
1325. சொல்லின் இறுதியில் இலக்கண விதிப்படி பொருந்தும் வல்லின மெய் எழுத்தை சேர்த்த எழுதுவது எவ்வாறு அழைக்கப்படும்?
1326. வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் ,மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் எவ்வாறு அழைக்கப்படும்?
1327. வல்லினம் மிகும் இடங்கள் என்னென்ன?
1328. எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
1329. வல்லினம் மிகா இடங்கள் என்னென்ன?
1330. குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
1331. இலக்கண கட்டுப்பாடுகளின்றி கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
1332. மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் எவ்வாறு அழைக்கப்படும்?
1333. யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புகள் எத்தனை?
1334. யாப்பிலக்கணம் குறிப்பிடும் செயலுக்குரிய ஆறு உறுப்புகள் என்னென்ன?
1335. யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்கள் எத்தனை வகையாக பிரிப்பர்?
1336. எழுத்துக்கள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது என்ன?
1337. அசை எத்தனை வகைப்படும்?
1338. குறில் அல்லது நெடில் எழுத்து தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் அது என்ன அசை?
1339. இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில் நெடில் எழுத்துக்களை இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் அது என்ன அசை?
1340. ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவதற்கு பெயர் என்ன?
1341. சீர் எத்தனை வகைப்படும்?
1342. சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவது எவ்வாறு அழைக்கப்படும்?
1343. தளைகள் எதனடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?
1344. தளைகள் எத்தனை வகைப்படும்?
1345. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவதற்கு பெயர் என்ன?
1346. அடி எத்தனை வகைப்படும்?
1347. செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ ,அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமை எவ்வாறு அழைக்கப்படும்?
1348. தொடைகள் எத்தனை வகைப்படும்?
1349. முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பதற்கு பெயரென்ன?
1350. இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது பெயர் என்ன?
1351. இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவர தொடுப்பதற்கு பெயர் என்ன?
1352. ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடுவது?
1353. பா எத்தனை வகைப்படும்?
1354. வெண்பா என்ன ஓசை உடையது?
1355. அறநூல்கள் பலவும் எந்த பாவகையால் அமைக்கப்பட்டுள்ளது?
1356. ஆசிரியப்பாவின் ஓசை எது?
1357. ஆசிரியப்பாவில் அமைந்த நூல்கள் எவை?
1358. கலிப்பா என்ன ஓசை உடையது?
1359. கலிப்பாவால் இயற்றப்பட்ட இலக்கியம் எது?
1360. வஞ்சிப்பா என்ன ஓசை உடையது?
1361. உவமை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது என்ன அணி?
1362. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை கூறி ,பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது என்ன அணி?
1363. ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமையும் அணி என்ன?
1364. இரட்டுறமொழிதலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :