DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- மொழிமுதல் எழுத்துக்கள் எத்தனை?
22 (உயிர் எழுத்து 12 +மெய்யெழுத்து 10)
- உயிரெழுத்துக்கள் எத்தனை சொல்லின் முதலில் வரும்?
12 தனிமை வடிவில் சொல்லுக்கு முதலில் வராத எழுத்துகள்? மெய்யெழுத்துக்கள்
- மெய்களில் எத்தனை வரிசைகள் உயிர்மெய் வடிவங்களாக சொல்லின் முதலில் வரும்?
க,ங,ச,ஞ,த,ந,ப,ம,ய,வ எனும் பத்து வரிசைகள்
- எந்த சொல்லில் மட்டும் ங முதலில் வரும்?
ஙனம்
- எந்த எட்டு வரிசைகள் சொல்லின் முதலில் வருவதில்லை?
ட,ண,ர,ல,ள,ற,ன (ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது)
- ஙனம் என்பதன் பொருள் என்ன?
விதம்
- ஙனம் என்னும் சொல் எந்த எழுத்துக்களுடன் இணைந்து வரும்?
அ,இ,உ எழுத்துக்கள் மற்றும் எ,யா எனும் வினா எழுத்துக்கள்
- மொழி இறுதி எழுத்துக்கள் எத்தனை?
24(உயிர் எழுத்து 12 +மெய்யெழுத்து 11 +குற்றியலுகரம் ஒன்று)
- உயிரெழுத்துக்களில் எத்தனை சொல்லின் இறுதியில் வரும்?
12
- மெய்களில் எத்தனை எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்?
ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள் எனும் 11 எழுத்துக்கள்
- எந்த எழுத்துகள் சொல்லின் இறுதியில் வருவது இல்லை?
க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற வல்லினமெய் ஆறும்,ங் எனும் மெல்லினமெய் ஒன்றும்
- பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்துள்ள எழுத்துக்கள் என்னென்ன?
ஞ்,ந்,வ்
- இரண்டு சொற்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வரும் பொழுது முதலில் நிற்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
நிலைமொழி
- இரண்டு சொற்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வரும் பொழுது அடுத்து நிற்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
வருமொழி
- நிலைமொழியும் வருமொழியும் இணைவதற்கு பெயர் என்ன?
புணர்ச்சி
- நிலைமொழியிலும் வருமொழியிலும் எந்த எழுத்து புணர்ச்சிக்கு உரியன?
நிலைமொழியின் ஈற்றெழுத்து வருமொழியின் முதலெழுத்து
- நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிர் என்பதால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
உயிரீறு
- நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
மெய்யீறு
- வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
உயிர்முதல்
- வருமொழியின் முதல் எழுத்து உயிர் மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
மெய்முதல்
- சொற்புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எழுத்தாகவும், வருமொழி முதலெழுத்தாகவும் எழுத்துக்கள் சந்திக்கும் முறை எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
4
- இலக்கண வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும்?
4
- சார்பெழுத்துக்களுள் எந்த எழுத்து சொல்லின் முதலிலோ இறுதியிலோ வராது?
ஆயுதம்
- சார்பெழுத்துக்களுள் எந்த எழுத்து சொல்லின் முதலில் வராது?
குற்றியலுகரம் (நுந்தை தவிர) குற்றியலிகரம்
- குற்றியலுகரத்தின் எத்தனை வகைகள் சொல்லின் இறுதியில் வருகின்றன?
ஆறு: நெடில்தொடர் ,உயிர்த்தொடர் ,வன்தொடர் ,மென்தொடர் ,இடைத்தொடர் ,ஆய்தத் தொடர்
- குற்றியலுகர ஈற்றுடன் வரும் நிலை மொழி எவ்வாறு அழைக்கப்படும்?
குற்றியலுகர ஈறு அல்லது குற்றியலுகர நிலைமொழி
- சொல்லின் இடையில் மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
மெய்மயக்கம்
- மெய்மயக்கம் எத்தனை வகைப்படும்?
இரண்டு: உடனிலை மெய்மயக்கம் , வேற்றுநிலை மெய்மயக்கம்
- சொற்களின் இடையில் ஒரே மெய் எழுத்து அடுத்தடுத்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
உடனிலை மெய்மயக்கம்
- தமிழில் எந்த மெய்யெழுத்துக்கள் தம் எழுத்துக்களுடன் மட்டும் சேரும் உடனிலை மெய்மயக்கம் எழுத்துக்களாகும்?
க்,ச்,த்,ப்
- சொல்லின் இடையில் வெவ்வேறு மெய் எழுத்துக்கள் தொடர்ந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
வேற்றுநிலை மெய்மயக்கம்
- எந்த இரண்டு மெய் எழுத்துக்கள் தம் வரிசை எழுத்துக்களுடன் சேர்ந்து வராமல் பிற மெய் எழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும்?
ர்,ழ்
- எந்த எழுத்துக்களை தவிர்த்த ஏனைய 12 மெய்களும் உடனிலை மெய்மயக்கமாகவும் வேற்றுநிலை மெய்மயக்கமாகவும் உள்ளன?
க்,ச்,த்,ப்,ர்,ழ்
- தனிச் சொற்களிலோ கூட்டுச் சொற்களிலோ சொற்களின் இடையில் என்ன மெய்கள் ஈரொற்றாய் வரும்?
ய்,ர்,ழ்
- தனிச் சொற்களிலோ கூட்டுச் சொற்களிலோ சொற்களின் இடையில் ய்,ர்,ழ் மெய்கள் வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
ஈரொற்று மெய்மயக்கம்
- மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று: வல்லினம், மெல்லினம் ,இடையினம்
- சொற்களின் இடையில் மெல்லின எழுத்துக்களுக்கு பின் வல்லின மெய்கள் மட்டுமே வருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இன எழுத்துக்கள் அல்லது நட்பெழுத்துக்கள்
- ணகர,நகர,னகர வேறுபாட்டினை அறியாமல் எழுதுவதால் ஏற்படும் பிழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மயங்கொலிப் பிழை
- பெயர் சொல்லும் வினைச் சொல்லும் பிரித்து பொருள் தரும் நிலையில் இருந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படும்?
பகுபதங்கள்
- பகாப்பதத்திற்குரியவை எந்த சொற்கள்?
இடைச்சொற்கள் ,உரிச்சொற்கள்
- பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
6 :பகுதி, விகுதி ,இடைநிலை ,சந்தி, சாரியை ,விகாரம்
- ஒரு வினைப் பகுபதத்தில் அடிப்படை உறுப்புகள் என்னென்ன?
பகுதி மற்றும் விகுதி
- ஒரு பகுபதத்தில் எது பொருள்தரும் உறுப்புகளாகும்?
பகுதி, விகுதி ,இடைநிலை
- பகுதி என்பது என்ன?
ஒரு சொல்லின் அடிச்சொல் பகுதி
- பகுதி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதனிலை
- விகுதி பெறாத ஏவல் வினையாக வரும் பகுபத உறுப்பு எது?
பகுதி
- ஒரு வினைமுற்று சொல்லின் இறுதியில் நின்று திணை, பால் ,எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு எது?
விகுதி
- வியங்கோள் ,தொழிற்பெயர் ,பெயரெச்சம், வினையெச்சம் போன்ற பல்வேறு இலக்கண பொருண்மைகள உணர்த்த எந்த பகுபத உறுப்பு பயன்படுகிறது?
விகுதி
- பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்புக்கு என்ன பெயர்?
இடைநிலை
- வினைப் பகுபதத்தில் வரும் இடைநிலை எத்தனை வகைப்படும்?
இரண்டு: கால இடைநிலை, எதிர்மறை இடைநிலை
- பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
பெயர் இடைநிலை
- ஒரு வினைப் பகுபதத்தில் பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் வந்து காலம் உணர்த்தும் உறுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
கால இடைநிலை அல்லது காலம் காட்டும் இடைநிலை
- இறந்த கால இடைநிலைகள் என்னென்ன?
த்,ட்,ற்,இன்
- நிகழ்கால இடைநிலைகள் என்னென்ன?
கிறு,கின்று,ஆநின்று
- எதிர்கால இடைநிலைகள் என்னென்ன?
ப்,வ்
- எதிர்மறை இடைநிலைகள் என்னென்ன?
ஆ,அல்,இல்
- எதிர்மறை வினைச் சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறை உணர்த்தும் இடைநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எதிர்மறை இடைநிலை
- எந்த எதிர்மறை இடைநிலைக்கு அடுத்து உயிர்மெய் வரின் கெடாமல் வரும், உயிர் எழுத்து வரின் தன் பொருளை நிறுவிக் கெட்டு வரும்?
ஆ
- ஒரு ஆக்க பெயர்ச்சொல்லை பெயர் பகுதியை விகுதியோடு இணைப்பதற்கு வரும் இடைநிலை எது?
பெயர் இடைநிலை
- என்ன மெய்கள் பெயர் இடைநிலைகளாக வரும்?
ச்,ஞ்,ந்,த்,வ்
- சந்தி என்பதற்கு என்ன பெயர்?
புணர்ச்சி
- பகுதி விகுதி இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும் போது இடையில் தோன்றுவது எது?
சந்தி
- சந்தி எதற்கு இடையில் வருவது பெருவழக்கு?
பகுதிக்கும் இடைநிலைக்கும்
- புணர்ச்சியின் போது ஏற்படும் விகாரங்களான தோன்றல் ,திரிதல், கெடுதல் ஆகியவை எவ்வாறு அழைக்கப்படும்?
சந்தி
- ஓர் எழுத்துத் தோன்றுதல் எவ்வாறு அழைக்கப்படும்?
சந்தி
- மற்ற திரிதலையும் கெடுதலையும் எவ்வாறு வழங்குவர்?
விகாரம்
- பெரும்பாலும் எந்த மூன்று எழுத்துக்களில் ஒன்று சந்தியா வரும்?
க்,த்,ப் (உடம்படுமெய்கள் (ய்,வ்) சந்தியாக வருவதும் உண்டு)
- பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
எழுத்துப்பேறு
- சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளி பெற்ற எழுத்து உயிர் ஏற இடம் அளித்து வந்தால் அது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
எழுத்துப்பேறு
- விகுதி தனியே வராமல் துணையாக பெற்று வரும் எழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?
எழுத்துப்பேறு
- எழுத்துப்பேறு என்ன வகை காலத்தை காட்டும்?
காலம் காட்டாது
- பகுதியோடு இடை நிலையும், இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாக சார்ந்து இயைய வரும் உறுப்பு எது?
சாரியை
- சந்தி வரவேண்டிய இடத்தில் உயிர்மெய் எழுத்து வந்தால் அது எவ்வாறு குறிப்பிடப்பட வேண்டும்?
சாரியை
- அன் என்பது விகுதியாக வரும்போது எது சாரியையாக வரும்?
அன்
- எந்த விகுதிகளைப் பெற்று வரும் பொழுது அன் சாரியையாக வராது?
ஆன்,ஆள்,ஆர்
- பகுதி விகுதி இடைநிலை ஆகியவை புணரும் போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?
விகாரம்
- இறந்தகால இடைநிலைகள் என்னென்ன?
த்,ட்,ற்,ன்
- நிகழ்கால இடைநிலைகள் என்னென்ன?
கிறு, கின்று ,ஆநின்று
- எதிர்கால இடைநிலைகள் என்னென்ன?
ப்,வ்
- எதிர்மறை இடைநிலைகள் என்னென்ன?
ஆ,அல்,இல்
- தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் என்னென்ன?
என்,ஏன்,அல்,அன்,கு,டு,து,று
- தன்மை பன்மை வினைமுற்று விகுதிகள் என்னென்ன?
எம்,ஏம்,அம்,ஆம்,ஓம்,கும்,டும்,தும்,றும்
- முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் என்னென்ன?
ஐ,ஆய்,இ
- முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் என்னென்ன?
இர்,ஈர்,மின்
- படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?
அன்,ஆன்
- படர்க்கை பெண்பால் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?
அள்,ஆள்
- படர்க்கை பலர்பால் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?
அர்,ஆர்,ப,மார்,கள்
- படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?
து,று,டு
- படர்க்கை பலவின்பால் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?
அ,ஆ
- வியங்கோள் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?
க,இய,இயர்
- தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள் என்னென்ன?
அ,உம்
- தெரிநிலை வினையெச்ச விகுதிகள் என்னென்ன?
உ,இ
- நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்து உயிர் எழுத்துக்களாய் இருந்தால் உச்சரிப்பின்போது ஒலி உடன்பாடு இல்லாமல் இடைவெளி ஏற்படும். உடன்படாத அவ்விருமொழிகளையும் சேர்த்து புணர்க்கம வரும் மெய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உடம்படுமெய்
- உடம்படுமெய்களாக வரும் மெய்கள் எது?
ய்,வ்
- ட்,ற் இன்னும் இரு மெய்களோடு ஊர்ந்து வரும் எந்த வகை குற்றியலுகரங்கள் வரும் மொழியோடு சேரும்போது ஒற்று இரட்டித்து புணரும்?
நெடில்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- இயல்பீறாகவோ, விதியீறாகவோ நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிர் எழுத்துடன் எந்த வல்லின மெய்கள் முதலில் கொண்ட வருமொழிச்சொல் சேரும் போது அவற்றிடையே வல்லொற்று மிகுந்து புணரும்?
க,ச,த,ப
- நிலைமொழியீற்றின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக நிற்க வருமொழியின் முதலாக வரும் உயிரெழுத்துடனும் மெய்யெழுத்துடன் சேரும் புணர்ச்சி எவ்வாறு அழைக்கப்படும்?
மெய்யீற்றுப் புணர்ச்சி
- நிலைமொழி சொல்லின் இறுதி எழுத்தாக மகர மெய் வரும்போது அச்சொல் எத்தனை நிலைகளில் புணரும்?
3: மகரமெய் கெட்டு புணரும், மகரம் கெட்டு இன மெல்லெழுத்து தோன்றிப் புணரும், வல்லினம் மிக்குப் புணரும்
- ஒன்றை மற்றொன்று ஒப்பிட்டு கூறுவதற்கு பயன் படுததுவது?
உவமை
- எந்த நான்கின் அடிப்படையில் உவமைத் தோன்றும் என்று தொல்காப்பியர் கூறுகிறார்?
வினை(தொழில்),பயன்,வடிவம் (மெய் ) ,உரு ( நிறம்)
- சங்கப் பாடல்களில் பெரும்பாலும் என்ன அணி இடம்பெறுகிறது?
உவமையணி
- ஒப்பிட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும் பொழுது ஒரு சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உருவகம்
- உவமையையும் ,உவமிக்கப்படும் பொருளையும் வேறு படுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது எது?
உருவகம்
- உருவகத் தொடரில் எது முன்னும் பின்னுமாக அமையும்?
உவமேயம் முன்னும் ,உவமை பின்னும்
- உவமையின் செறிவார்ந்த வடிவம் எது?
உருவகம்
- கவிஞர் தான் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாக கூறாமல் அகமாந்தரின் மன உணர்வுகளைக் கருப்பொருள்கள் மூலம் உவமைப் படுத்துவது எவ்வாறு அழைக்கப்படும்?
உள்ளுறை உவமம்
- உள்ளுறை எதன் அடிப்படையில் தோன்றும்?
வினை, பயன் போன்றவைகள்
- உரிப்பொருளோடு நேரடி தொடர்பில்லாத குறிப்புப் பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
இறைச்சி
- இறைச்சி வட மொழியினர் குறிப்பிடுகின்ற எதற்கு இணையானது?
தொனி
- இறைச்சி எந்த வகை பாடலில் மட்டுமே வரும்?
அகப்பாடல்
- செய்யுளின் உறுப்புகள் என்னென்ன?
எழுத்து, அசை ,சீர் ,தளை ,அடி ,தொடை
- பாக்களின் வகைகள், அப்பாக்களின் ஓசைகள் , பாக்கள் இயற்றுவதற்கு உரிய விதிமுறைகள் முதலியவற்றை வெளிப்படுத்துவது எந்த நூல்?
யாப்பருங்கலக்காரிகை
- வெண்பாவிற்குரிய ஓசை எது?
செப்பலோசை
- ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை?
அகவலோசை
- கலிப்பாவிற்குரிய ஓசை எது?
துள்ளலோசை
- வஞ்சிப்பாவிற்குரிய ஓசை எது?
தூங்கலோசை
- குறளடி எத்தனை சீர்களை உடையது?
இரண்டு
- சிந்தடி எத்தனை சீர்களை உடையது?
மூன்று
- அளவடி அல்லது நேரடி எத்தனை சீர்களை உடையது?
நான்கு
- நெடிலடி எத்தனை சீர்களை உடையது?
ஐந்து
- கழிநெடிலடி எத்தனை சீர்களை உடையது?
ஆறு அல்லது அதற்கு மேற்பட்டவை
- அகவலோசை பெற்றிருப்பதால் ஆசிரியப்பா வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அகவற்பா
- எந்தப் பாக்களால் ஆன பாடல்களே சங்க காலத் தமிழில் மிகுதியாகக் உள்ளன?
ஆசிரியப்பா
- நேரசைக்கு உரிய விதிகள் என்னென்ன?
குறில் தனித்து வருதல் , குறில் ஒற்றுடன் வருதல், நெடில் தனித்து வருதல் ,நெடில் ஒற்றுடன் வருதல்
- நிரசைக்கு உரிய விதிகள் என்னென்ன?
இரு குறில் இணைந்து வருதல், இரு குறில் இணைந்து ஒற்றுடன் வருதல், குறில்நெடில் இணைந்து வருதல், குறில் நெடில் இணைந்து ஒற்றுடன் வருதல்
- ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் எது?
இயற்சீர்
- இயற்சீர் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
ஆசிரிய உரிச்சீர்
- தேமா புளிமா ஆகிய இரண்டும் என்ன அசை சீர்கள்?
நேரீற்று ஈரசை சீர்கள்
- கருவிளம் கூவிளம் ஆகிய இரண்டும் என்ன அசை சீர்களாக வருகிறது?
நிரையீற்று ஈரசைச் சீர்கள்
- இறுதிக்கு முந்தைய அடி மூன்று சீர்களை பெற்று வருவது என்னவகை ஆசிரியப்பா?
நேரிசை ஆசிரியப்பா
- முதல் அடியும் இறுதி அடியும் நான்கு சீர்கள் பெற்று இடையடிகள் இணை இணையாய் இருசீர்களாகவும் மூன்று சீர்களாகவும் வருவது என்ன வகை ஆசிரியப்பா?
இணைக்குறள் ஆசிரியப்பா
- எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வருவது என்ன வகை ஆசிரியப்பா?
நிலைமண்டில ஆசிரியப்பா
- பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாது அமைவது என்ன வகை ஆசிரியப்பா?
அடிமறி மண்டில ஆசிரியப்பா
- ஆசிரியப்பாவின் இனங்கள் என்னென்ன?
ஆசிரியத்தாழிசை ,ஆசிரியத்துறை,ஆசிரிய விருத்தம்
- ஆறு சீர்களால் அமைந்த பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஏழு சீர்களால் அமைந்த பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எட்டு சீர்களால் அமைந்த பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட எத்தனை சீர்கள் வந்தாலும் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கழிநெடிலடி
- பெயர் அல்லது வினைச் சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆக்கப்பெயர்கள்
- பெயர்ச் சொற்களை ஆக்க பயன்படும் விகுதிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
ஆக்கப்பெயர் விகுதிகள்
- தமிழிலுள்ள ஆக்கப்பெயர் விகுதிகள் என்னென்ன?
காரன் ,காரர்,காரி, ஆள், ஆளர், ஆளி,தாரர்,மானம் போன்றவைகள்
- ஆக்கப் பெயர்ச் சொற்களை ஈற்றில் நிற்கும் விதிகளைக் கொண்டு எத்தனை வகையாக பிரிக்கலாம்?
மூன்று: பெயருடன் சேரும் விகுதிகள், வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள் ,பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்
- காரன்,காரி,காரர் ஆகிய ஆக்கப்பெயர் விகுதிகள் என்ன பொருளில் வரும்?
உடைமை ,உரிமை ,உறவு அல்லது தொடர்பு ,தொழில் அல்லது ஆளுதல்
- பொருள்களைத் தனித்தனியாக குறிப்பிடும் இடங்கள், எச்ச சொற்றொடர்கள் ,எடுத்துக்காட்டுகள் ,இணைப்புச்சொற்கள் ,திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் என்ன நிறுத்த குறியீடு வரவேண்டும்?
காற்புள்ளி
- தொடர்நிலை தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் என்ன நிறுத்தற்குறியீடு வரவேண்டும்?
அரைப்புள்ளி
- சிறு தலைப்பு நூற்பகுதி எண், பெரும் கூட்டுத்தொடர் முதலிய இடங்களில் என்ன நிறுத்த குறியீடு வரவேண்டும்?
முக்காற்புள்ளி
- தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி ,சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் என்ன நிறுத்தற்குறியீடு வரவேண்டும்?
முற்றுப்புள்ளி
- ஒரு வினாத்தொடர் முற்று தொடராகவும், நேர்க்கூற்று தொடராகவும் இருப்பின் இறுதியில் என்ன நிறுத்தற்குறியீடு வரவேண்டும்?
வினாக்குறி
- விடை சொல்லுக்கு பின்பும், நேர்கூற்று வியப்பு தொடர் இறுதியிலும் ,அடுக்கு சொற்களின் பின்னும் என்ன நிறுத்த குறியீடு வரவேண்டும்?
வியப்புக்குறி
- அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் என்ன நிறுத்த குறியீடு பயன்படுத்தவேண்டும்?
விளிக்குறி
- எந்த நிறுத்த குறியீடுகள் ஒரே அடையாள குறியை உடையது?
வியப்புக்குறி ,விளிக்குறி
- மேற்கோள்குறி எத்தனை வகைப்படும்?
இரண்டு: ஒற்றை மேற்கோள்குறி, இரட்டை மேற்கோள்குறி
- ஓர் எழுத்தேனும், சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரை பெயர் ,நூற்பெயர் குறிக்கும் இடம் ,பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் என்ன நிறுத்த குறியீடு வரவேண்டும்?
ஒற்றைக்குறி
- நேர்கூற்றுகளிலும் மேற்கோள்களிலும் என்ன நிறுத்தற்குறியீடு இடம்பெறவேண்டும்?
இரட்டை மேற்கோள்குறி
- பிழைகள் உள்ள அச்சுப்படியை திருத்துவதற்கு கையாளப்படும் திருத்த குறியீடுகள் எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றன?
ஐந்து: பொதுவானவை ,நிறுத்தற்குறியீடுகள் தொடர்பானவை, இடைவெளி தர வேண்டியவை, இணைக்க வேண்டியவை ,எழுத்துவடிவம்
- Dt என்பது என்ன குறியீடு?
அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக
- ^ என்பது என்ன குறியீடு?
சொல்லையோ எழுத்தையோ இந்த குறிப்பிட்ட இடத்தில் சேர்த்துக் கொள்க
- [ என்பது என்ன குறியீடு?
புதிய பத்தி தொடங்குக
- ,/ என்பது என்ன குறியீடு?
கால் புள்ளியை சேர்க்கவும்
- ;/ என்பது என்ன குறியீடு?
அரைப் புள்ளியை சேர்க்கவும்
- ./ என்பது என்ன குறியீடு?
முற்றுப்புள்ளியை இடவும்
- ?/ என்பது என்ன குறியீடு?
வினாக்குறி அடையாளம் இடவும்
- !/ என்பது என்ன குறியீடு?
வியப்புக்குறியயை சேர்த்துக்கொள்ளவும்
- :/ என்பது என்ன குறியீடு?
முக்காற்புள்ளியைச் சேர்க்கவும்
- # என்பது என்ன குறியீடு?
பத்திகளுக்கு இடையில் ,வரிகளுக்கு இடையில் ,சொற்களுக்கு இடையில் இடைவெளி தருக
- Unbold என்பது என்ன குறியீடு?
வழக்கமான எழுத்தில் மாற்றுக
- Bold என்பது என்ன குறியீடு?
தடித்த எழுத்தில் மாற்றுக
- Trs என்பது என்ன குறியீடு?
சொற்கள் எழுத்துக்களை இடம் மாற்றுக
- என்பது என்ன குறியீடு?
எழுத்துருவை சிறியதாக ஆக்குக