DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- உலக புவி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 22
- பசுமைக்குடில் வாயுக்கள் என அழைக்கப்படுபவை எவை?
கார்பன் டை ஆக்ஸைடு மீத்தேன் நைட்ரஸ் ஆக்சைடு நீர் வாயு
- புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே எனக் கூறியவர்?
இங்கிலாந்து அறிவியல் கருத்தாளர் டேவிட் கிங்
- ஐக்கிய நாடுகள் அவை எப்போது எங்கு காலநிலை மாற்றம் பற்றிய பணித் திட்ட பேரவையை உருவாக்கியது?
1992,ரியோடி ஜெனிரோ
- UNFCCCன் விரிவாக்கம் என்ன?
United Nations framework convention on climate changes
- எத்தனை நாடுகள் வங்கக்கடலிலும் அரபிக்கடலிலும் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கின்றனர்?
13 நாடுகள்
- இந்திய வானியல் ஆய்வுத் துறையினர் எந்த ஆண்டை கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர்?
2009
- எத்தனை சதவீதம் உலக மக்கள் தண்ணீர் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகிறார்கள்?
40 சதவீதம்
- தமிழக நிலப்பரப்பில் விடுதலைக்கு முன்பு ஏறத்தாழ எத்தனை நீர் நிலைகள் இருந்தன ?
50 ஆயிரம்
- எப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது ?
டிசம்பர் 23 2005
- பிறகொரு நாள் கோடை என்ற கவிதையை எழுதியவர்?
அய்யப்ப மாதவன்
- பிறகொருநாள் கோடை என்ற கவிதை என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?
அய்யப்ப மாதவன் கவிதைகள்
- அய்யப்ப மாதவனின் பிறந்த இடம்?
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை
- அய்யப்ப மாதவன் எழுதிய கவிதை குறும்படம் என்ன?
இன்று
- அய்யப்பமாதவன் எழுதிய நூல்கள்?
மழைக்குப் பிறகும் மழை,நானென்பது வேறொருவன், நீர்வெளி
- நெடுநல்வாடை என்னும் நூலை எழுதியவர்?
நக்கீரர்
- பழந்தமிழர்கள் எந்த இரு மாதங்களைக் கூதிர்ப்பருவம் என அழைத்தனர்?
ஐப்பசி கார்த்திகை
- போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீடு பற்றிய துறை?
கூதிர்ப்பாசறை
- ” ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் ஏறுடை இனநிரை வேறு புலம் பரப்பி ” – இப்பாடல் இடம்பெற்ற நூல்?
நெடுநல்வாடை
- நெடுநல் வாடையில் பாட்டுடைத் தலைவன் யார்?
பாண்டியன் நெடுஞ்செழியன்
- யாருடைய மகன் நக்கீரர்?
மதுரை கணக்காயனார் மகன்
- நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது?
188 அடிகள்
- நெடுநல்வாடை இயற்றப்பட்ட பாவகை?
ஆசிரியப்பா
- முதல் கல் எனும் கதையை எழுதியவர்?
உத்தமசோழன்
- உத்தம சோழனின் இயற்பெயர்?
செல்வராஜ்
- முதல் கல் எனும் கதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
தஞ்சைச் சிறுகதைகள்
- உத்தம சோழன் பிறந்த இடம்?
திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள்புரம்
- செல்வராஜ் எழுதிய சிறுகதை தொகுப்புகள் என்னென்ன?
மனித தீவுகள் குருவி மறந்த வீடு
- உத்தம சோழன் எழுதிய புதினங்கள் என்னென்ன?
தொலைதூர வெளிச்சம்,கசக்கும் இனிமை,கனல்பூக்கள்
- உத்தமசோழன் நடத்தி வரும் இதழ்?
கிழக்கு வாசல் உதயம்