TNPSC TAMIL 9TH IYAL 06 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
TNPSC TAMIL 9TH IYAL 06 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download NowAvailable for Android devices. Click the button to go to the Play Store.
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
TNPSC TAMIL 9TH IYAL 06 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
இயல் 06
1808. எகிப்து அரசி கிளியோபட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக யார் தம்முடைய குறிப்பில் பதிவு செய்துள்ளார்?
1809. பிளினி எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?
1810. பிளினி எந்த நாட்டைச் சார்ந்தவர்?
1811. கொற்கை முத்தின் சிறப்பினைக் கூறும் நூல் எது?
1812. வணிகத்திற்காக தமிழகத்திற்கு வந்து சென்றவர்கள் யார்?
1813. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்த புகழ்பெற்ற துறைமுகங்கள் எவை?
1814. மேற்கு கடற்கரை துறைமுக பகுதிகள் எவை?
1815. தமிழ்நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் சேரர்களின் ஆட்சி எல்லைக்குள் அமைந்த புகழ்பெற்ற துறைமுகம் எது?
1816. முசிறி துறைமுகம் எந்த ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இயற்கையாய் உருவான துறைமுகமாகும்?
1817. காந்த ஊசி பற்றிய செய்தி எந்த நூலில் உள்ளது?
1818. வஞ்சி எந்தத் துறை முகப் பட்டினத்திற்கு அருகில் அமைந்திருந்தது?
1819. யவனர் விரும்பி வாங்கியதால் மிளகிற்கு என்ன பெயர் ஏற்பட்டது?
1820. “சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1821. “பொன்னோடு வந்து கறியோடு பெயரும் வளங்கெழு முசிறி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1822. சேரநாட்டு மிளகை அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தில் விற்றவர்கள் யார்?
1823. முசிறி துறைமுகம் பட்டினத்தில் அரேபியர் வணிகம் செய்த இடத்திற்கு என்ன பெயர்?
1824. பந்தர் என்பதன் பொருள் என்ன?
1825. முசிறி துறைமுகத்தில் யவனர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன?
1826. முசிறி – அலெக்ஸாண்ட்ரியா ஒப்பந்தம் எப்போது ஏற்படுத்தப்பட்டது ஆகும்?
1827. “நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” – இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1828. ” பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்” – இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1829. ” பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1830. முசிறி அலெக்ஸாண்ட்ரியா ஒப்பந்தத்தின்படி கப்பலில் ஒருமுறை கொண்டு சென்ற வணிக பொருள்களின் பண மதிப்பீடு எத்தனை கிராம் வெள்ளியின் எடைக்கு ஈடானது எனக் குறிக்கப்பட்டுள்ளது?
1831. காவிரி ஆறு கடலில் கலக்கின்ற இடத்தில் வடகரையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகம் எது?
1832. காவிரிப்பூம்பட்டினம் என்ன இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது?
1833. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடு எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
1834. அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓட்டில் இடம்பெற்றுள்ள கீறல் கோட்டோவியம் எதனை குறிக்கிறது?
1835. பொருள்களை பாதுகாப்பாக வைக்க நல்ல அகன்ற கிடங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன என்றும் ,பொருள்களுக்கு சுங்கத்தீர்வை அங்கேயே வசூலிக்கப்பட்டன என்றும் எந்த நூல் தெரிவிக்கிறது?
1836. சோழப் பேரரசின் இலச்சினையான புலிச்சின்னம் அடையாளமிட்டு வெளியே அனுப்புவதற்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள் மலைப்போல் தோற்றம் தரும் எனக் கூறும் நூல் எது?
1837. கோவலன் கண்ணகி மாதவி மணிமேகலை ஆகியோர் யாருடைய ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து இருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன?
1838. தாமிரபரணி ஆறு கடலில் கடக்கும் இடத்தில் ஆற்றின் மேற்கு கரையில் அமைந்த இயற்கை துறைமுக நகரம் எது?
1839. எந்த அரசன் உயிர் துறந்த பின் கொற்கையில் இருந்த பட்டத்து இளவரசன் வெற்றிவேற் செழியன் மதுரை வந்து அரியணை ஏறினான்?
1840. வெற்றிவேற்செழியன் அரியணையேறிய செய்தியை குறிப்பிடும் நூல் எது?
1841. பாண்டியர்களின் கப்பற்படை தளமாகவும் விளங்கிய துறைமுக நகரம் எது?
1842. கொற்கைத் துறைமுகத்தில் செல்வர் ஏறிவரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக்கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் பொருள்கள் குவிந்திருந்தன எனக் குறிப்பிடும் நூல்?
1843. “…கவர்நடைப்புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை முன்துறை”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1844. “…கவர்நடைப்புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை முன்துறை” இது யாருடைய பாடல்?
1845. வெளிநாடுகளிலிருந்து கடல்வழியாக வந்தவை எவை?
1846. உள்நாட்டில் இருந்து தரை வழியில் வந்தவை?
1847. வட மலையில் இருந்து வந்தவை?
1848. மேற்கு மலையில் இருந்து வந்தவை?
1849. தென் கடலில் இருந்து கிடைத்தவை?
1850. கீழ்க் கடலில் விளைந்தவை?
1851. முசிறி துறைமுகத்துக்கு பருவக் காற்றின் உதவியால் நேரே நடுக் கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய வழியை கண்டுபிடித்தவர் யார்?
1852. ஹிப்பல்ஸ் எந்த நாட்டின் மாலுமி?
1853. முசிறி துறைமுகத்துக்கு ஹிப்பல்ஸ் பருவக்காற்றின் புதிய வழியைக் கண்டுபிடித்தது எப்போது?
1854. முதல் நூற்றாண்டில் உரோமப் பேரரசை ஆண்டவர் யார்?
1855. யவனர்- தமிழர் வணிகத்தை விரிவுபடுத்திய ரோமப் பேரரசை ஆண்ட பேரரசர்?
1856. “வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1857. கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் உரோம் நாட்டின் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு முத்துகளை பரிசாக அளித்தார்கள் என்று எந்த வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார்?
1858. பாண்டிய மன்னர்களின் குதிரைப் படைகளுக்காக ஆண்டுதோறும் கொற்கை துறைமுகத்தில் எத்தனை அரேபிய குதிரைகள் வந்து இறங்கியதாக வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்?
1859. பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் நிறைந்த தெருவின் பெயர் என்ன?
1860. மதுரையைக் குறித்து கூறியவர்கள் யார்?
1861. ஓசை நயத்துடன் பாடக்கூடிய பா வகையின் பெயர் என்ன?
1862. நாட்டுப்புறப்பாடல் அமைப்பில் இருந்து தோன்றிய சிந்து வடிவம் எந்த இலக்கிய காலத்தில் இருந்து வழக்கில் இருக்கிறது?
1863. ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவுக்கு வருவது எந்த பாவகை?
1864. பாரதியார் எந்த பாவகையினை அதிகமாக கையாண்டிருக்கிறார்?
1865. சிந்துக்குத் தந்தை என போற்றப்படுபவர் யார்?
1866. மதுரையை சிறப்பித்துப் பாடிய நூல்களுள் பதினெண்மேற்கணக்கில் முதன்மையான நூல் எது?
1867. “மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின் விண்உற ஓங்கிய…”எனத் தொடங்கும் மதுரைக்காஞ்சி பாடலை இயற்றியவர் யார்?
1868. “மாகால் எடுத்த முந்நீர் போல” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
1869. “பொறிமயிர் வாரணம்…கூட்டுறை வயமாப் புலியொடு குழும”இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
1870. மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை எந்த இலக்கியம் மூலம் அறியலாம்?
1871. பத்துப்பாட்டு ஆராய்ச்சி எனும் நூலை எழுதியவர் யார்?
1872. காஞ்சி என்றால் என்ன பொருள்?
1873. மதுரைக்காஞ்சி பெயர்க்காரணம் என்ன?
1874. மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளைக் கொண்டது?
1875. மதுரைக்காஞ்சி நூலில் எத்தனை அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன?
1876. மதுரைக்காஞ்சி எவ்வாறு சிறப்பித்துக் கூறப்படுகிறது?
1877. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்?
1878. மதுரைக்காஞ்சி பாடியவர் யார்?
1879. மருதனார் எங்கு பிறந்தார்?
1880. மாங்குடி மருதனார் எட்டுத் தொகையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?
1881. பகலில் செயல்படும் கடை வீதிகளுக்கு பெயரென்ன?
1882. இரவில் செயல்படும் கடை வீதிகளுக்கு என்ன பெயர்?
1883. அல் என்பதன் பொருள் என்ன?
1884. போச்சம்பள்ளி சந்தை எந்த மாவட்டத்தில் நடைபெறுகிறது?
1885. மாட்டுத்தாவணி என்பதில் தாவணி என்பதன் பொருள் என்ன?
1886. மாட்டுச் சந்தைக்கு பேர்போன இடம் எது?
1887. ஆட்டுச் சந்தைக்கு பேர்போன இடம் எது?
1888. காய்கறி சந்தைக்கு பேர் போன இடம் எது?
1889. பூச்சந்தைக்கு பேர்போன இடம் எது?
1890. ஜவுளி சந்தைக்கு பேர் போன இடம் எது?
1891. கருவாட்டுச் சந்தைக்கு பேர்போன இடம் எது?
1892. மீன் சந்தைக்கு பேர்போன இடம் எது?
1893. பலவகை தானியங்கள் விற்கும் கடைக்கு பெயர் என்ன?
1894. காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும் கூலங்குவித்த கூல வீதிகள் இருந்தன எனக் கூறும் நூல் எது?
1895. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
1896. நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் எனும் நூலை எழுதியவர்?
1897. தரங்கம்பாடி தங்கப் புதையல் என்ற நூலை எழுதியவர்?
1898. இருட்டு எனக்கு பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) ஆசிரியர் யார்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :