TNPSC TAMIL 8TH IYAL 03 & 04 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
TNPSC TAMIL 8TH IYAL 03 & 04 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download NowAvailable for Android devices. Click the button to go to the Play Store.
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
TNPSC TAMIL 8TH IYAL 03 & 04 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
இயல் 03
906. “தீர்வனவும் திறத்தனவும் செய் மருந்தின் ஊர்வனவும் போலாதும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
907. சமண சமயக் கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் எது?
908. நீலகேசியில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை சருக்கங்கள் கொண்டது?
909. “உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம் “இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
910. கவிமணி என போற்றப்படும் தமிழ் கவிஞர் யார்?
911. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எங்கு பிறந்தார்?
912. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
913. கவிமணி இயற்றிய கவிதை நூல்கள் என்னென்ன?
914. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்ன மொழிபெயர்ப்பு நூலை படைத்துள்ளார்?
915. தமிழரின் எந்த தத்துவங்கள் உடலுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள ஒற்றுமையை கண்டறிந்து உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின?
916. “நோய்நாடி நோய்முதல் நாடி” எனக் கூறுபவர்?
917. நமது மூளையில் எவ்வளவு நியூரான்கள் உள்ளன?
918. மூளை எங்கிருந்து முளைக்கிறது?
919. மூளையை எத்தனை பாகங்களாக பிரிக்கின்றனர்?
920. மூக்கு, கண் இவற்றின் முடிபுகள் எந்த மூளையில் உள்ளன?
921. நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது எது?
922. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு குருதி தேவைப்படுகிறது?
923. உடம்பின் எடையில் மூளை எத்தனை பங்கு?
924. குருதி மற்றும் உயிர்வளி ஆகியவற்றின் மொத்த தேவையில் மூளை எவ்வளவு எடுத்துக் கொள்கிறது?
925. மூளைக்கு செல்லும் நரம்புகளில் என்ன மாற்றம் நிகழ்கிறது?
926. பெரும்பாலானவர்கள் வலதுகை காரர்களாக இருப்பதற்கு மூளையின் எந்தப் பகுதி காரணம்?
927. பேச ,எழுத ,கணக்கிட ,தர்க்கரீதியில் சிந்திக்க ,அறிவாற்றல் ,பிரச்சினைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது மொழியறிவு ஆகியவற்றை மூளையின் எந்தப் பகுதி உதவுகிறது?
928. வடிவங்களை உணர்வது ,கவிதை எழுதுவது, படம் போடுவது ,நடனமாடுவது ,நடிப்பது போன்றவை தொடர்பான கலை விஷயங்கள் மூளையின் எந்தப் பகுதி கவனித்துக் கொள்கிறது?
929. நடிகர்கள், பாடகர்கள், நடன கலைஞர்கள் ,இசைக்கருவிகளை கையாழ்பவர்கள்- இவர்கள் மூளையின் எந்த பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள்?
930. பட்டய கணக்கர்கள் ,கணக்காசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கு படிப்பவர்கள் ஆகியோர் மூளையின் எந்த பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள்?
931. எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை மனிதர்களின் மனநிலை மாறுகிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்?
932. சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எவ்வளவு காலம் தூங்குகிறான்?
933. சுஜாதாவின் இயற்பெயர் என்ன?
934. சுஜாதா இயற்றிய நூல்கள் என்னென்ன?
இயல் 04
935. “கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
936. “கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
937. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?
938. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் என்னென்ன?
939. “கல்வி கரையில கற்பவர் நாள் சில ” என கூறும் நூல் எது?
940. “கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு ” என்பது யாருடைய பாடல் வரிகள்?
941. ஆலங்குடி சோமு எங்கு பிறந்தார்?
942. ஆலங்குடி சோமு தமிழ்நாடு அரசின் என்ன விருது பெற்றார்?
943. “கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அல்ல. அது மெய்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறையாகும்” எனக் கூறியவர்?
944. ஐநா அவையின் முதல் பெண் தலைவர் யார்?
945. “தமிழிலேயே கல்வி போதிக்க தமிழில் போதிய கலைகள் இல்லையே; சிறப்பான அறிவியல் கலைகள் இல்லையே என சிலர் கூக்குரலிடுகின்றனர்” எனக் கூறியவர் யார்?
946. இயற்கை ஓவியம் என அழைக்கப்படுவது?
947. இயற்கை இன்பக்கலம் என அழைக்கப்படுவது?
948. இயற்கை வாழ்வில்லம் என அழைக்கப்படுவது?
949. இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்படுவது?
950. இயற்கை தவம் என அழைக்கப்படுவது?
951. இயற்கை பரிணாமம் என அழைக்கப்படுவது?
952. இயற்கை அன்பு என அழைக்கப்படுவது?
953. இயற்கை இறையுறையுள் என அழைக்கப்படுவது எது?
954. “இயற்கை கழகத்தில் பயின்று பயின்று சங்கப்புலவர் இளங்கோ ,திருத்தக்கதேவர் ,திருஞானசம்மந்தர், ஆண்டாள் ,சேக்கிழார், கம்பர் ,பரஞ்சோதி முதலியோர் இயற்கை கோலத்தை எவ்வாறு எழுத்தோவியத்தில் இறக்கியிருக்கின்றனர் என ஆராயுங்கள்” எனக் கூறியவர் யார்?
955. “ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி ;ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி ;அது வளர்ச்சி வாயில் இவ்வரிகளை எழுதியவர் யார்?
956. திரு வி க வின் இயற்பெயர் என்ன?
957. திரு வி க வின் சிறப்பு பெயர் என்ன?
958. திரு.வி.க இயற்றிய நூல்கள் என்னென்ன?
959. ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு பல்லாண்டு எனும் நூலை எழுதியவர் யார்?
960. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் குறிப்புகள் என்னும் நூலை எழுதியவர் யார்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :